|
||||||
முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் பாடுகிறார் !! |
||||||
ஜில்லா படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணி ஏற்கனவே துப்பாக்கி படத்தின் மூலம் கோடிக்கணக்கில் வசூலை குவித்தது.
எனவே, இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே படத்தில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் பிறகு என்ன காரணத்தினாலோ பாடுவதை நிறுத்தி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை பாடினார். அந்தப் பாடல் மாபெரும் ஹிட் ஆனது. அதின்பிறகு தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி போன்ற பாடல்கள் தொடர்ந்து ஹிட் ஆனதால். கத்தி படத்தில் பாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக அருமையான ட்யூனை தயார் செய்து விஜய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார் அனிருத். ட்யூனைக் கேட்ட விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
எனவே, இந்த பாடலும் அவரது ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
||||||
by Swathi on 13 Jun 2014 0 Comments | ||||||
Tags: Vijay Song கத்தி விஜய் விஜய் பாடல் கத்தி விஜய் | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|