LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் : விருச்சகம் ராசி

எப்பொழுதும் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க எண்ணும் உங்கள் லக்னத்திற்கு 10ம் இடத்தில் ராகுவும் 4ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கௌரவம் அந்தஸ்து புகழ் அதிகரிக்கும். சமூகத்தில் பெயர் புகழுடன் விளங்க வாய்ப்புகள் அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமுடனும் செயல்பட ஏதுவாகும். எடுத்த காரியங்கள் சாதகமாக வந்து அமையும். புதிதாக ஒரு விஷயங்களில் ஈடுபட மனம் விரும்பும். அதனால் எதிர்பாராத நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும் கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருந்து வரும்.

பேச்சில் சாமர்த்தியம் கூடும், பேச்சால் தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் அடைவர். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் நட்பும் கிட்டும். அவர்களுக்கு தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதாக நடந்தேறும். புதிய உறவுகள் தானாக வந்து சேரும். நட்பு வட்டாரம் நன்கு பெருகி அதனால நமது விருப்பம் பூர்த்தியாகும். அதே சமயம் நம்மைப்பற்றிய வீண் வதந்திகள் அவச் சொற்களும் நடந்தேறும். எனவே எடுக்கும் காரியங்கள் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. நெருங்கிய உறவினர்களால் நன்மையும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.

சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய சொத்துக்களை வாங்கும் பொழுது பத்திரங்களை முறையாகச் சரிபார்த்து வாங்குதல் வேண்டும். ஒரு தடவைக்குமேல் இரண்டுதடவை நன்கு படித்துப் பார்த்து கையயெழுத்துப் போடுதல் வேண்டும். இதுவரை வராமல் இழுத்தடித்த பணம் பொருள், நகைகள் தவணை முறையில் வந்து சேரும். முன்னோர்கள் சொத்துக்கள் ஏதேனும் இருப்பினும் அவை வந்து சேர வாய்ப்புகள் அமையும். வீடு வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வந்து சேரும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து கொண்டேயிருக்கும். தாயரின் உடல்நலத்தில் அதிகக் செலுத்துதல் வேண்டும். தேவைக்கேற்ப கடன்வாங்க சந்தர்ப்பம் வந்து சேரும். வழக்குகள் சற்று இழுபறியாகவே இருந்து வரும்.

குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வந்து சேர வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் கனிந்து சிலருக்குத் திருமணத்தில் முடியும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. தந்தையாரால் தேவையற்ற வருத்தங்கள் வந்து சேரும். அடிக்கடி வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும். பாஸ்போர்ட், விசா, இழிபறியாகவே இருந்து பின் வந்து நல்லபடியாக அமையும். நண்பர்களால் மனகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும்.

உத்யோகம் வேலை (JOB)

உத்யோகம் அல்லது வேலை அதாவது அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களை இங்கு நாம் உத்யோகத்தில் இருப்பவர்கள் என்று குறிப்பிடுகின்றோம். இதுவரை வேலை தேடிக் கிடைக்காதவர்களுகு இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் உயர்வு அமையும். சம்பளம் அதிகரித்து காணப்படும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டுப் பிரிய வாய்ப்புகள் அமையும். இடமாற்றம் ஊர்மாற்றம் அமையும். இதுவரை தள்ளிப்போன “ஆன்சைட்” சிலருக்கு அமைந்து வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் அன்பும் நட்ப்பும் கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற மன உலைச்சல்களும் வேதனைகளும் வந்து சேரும். கிடைத்த வேலையில் உடனே சென்று சேருதல் வேண்டும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது.

தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். அதே சமயம் சுயதொழில் தொடங்குவதில் அல்லது பார்ட்னர்ஷிப்புடன் சேர்ந்து தொழில் செய்வதில் அதிகக் கவனம் தேவை. மருந்து, வேதியியல், இராசயனம், இரும்பு, எக்கு, சிமென்ட் சார்ந்த துறைகள் ஏற்றம் மிகுந்து காணப்படும். சிறுதொழில் சுயதொழில் சற்று லாபகரமாக இருந்தாலும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல் வருந்துவர். செய்தி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஐ.டி. துறைகள் ஏற்றமுடன் விளங்கும். நிதி, நீதி வங்கிச் சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சற்று கவனம் தேவை. ஆடை., ஆபரணங்கள், பிளாஷ்டிக், பால், உணவு, கெமிக்கல் துறைகள் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் ஏற்றமுடன் விளங்கும். கமிஷன், ஏஜென்ஸி, கன்சல்டன்சி, வலுவாகவும் நடைபாதை வியாபாரம் சற்று சுமாராகவும், நெசவு, மீன்பிடித் தொழில்கள் சற்று வருவாய் குறைந்தும் காணப்படும். பங்குச்சந்தை சாதகமாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஓரளவு முதலீடு செய்ய உகந்த காலமாகும்.

விவசாயம்v விவசாயத்திற்கு ஏற்ற விளைச்சல் அமைவது தடையேற்படும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் சரிவு ஏற்படும். பணப்பயிர்கள் லாபகரமாக இருக்கும். அன்றாடும் அழியும் பழங்கள் காயகறிகள் பூக்கள் பயிரிடுதல் சற்று லாபம் கூடுதலாக அமையும். பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.

அரசியல்

அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்களின் உண்மையான அன்பும் ஆதரவும் கிட்டும். தேர்தலில் வெற்றிபெற சாதகமான சூழ்நிலைகள் வந்து சேரும். அதே சமயம் அரசாங்கத்தால் தேவயற்ற தொல்லைகள் வழக்குகள் கவலை அளிப்பதாகவும் ஒரு சிலருக்கு அமையும்.

கலைஞர்கள்

சினிமா, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், ஜோதிடம் ஏற்றம் மிகுந்து காணப்படும். அரசால் கௌரவிக்கப்படுவர். பெயரும் புகழும் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பார்த்தப் பணப்புழக்கம் நன்கு அமையும். ஒரு சிலர் சொத்துக்கள் வாங்க கடன் வாங்க வேண்டியது வரும். வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் கூடும். அலைச்சல்கள் கூடும். விளம்பரத்துறை சீராக வளர்ந்து பெயர் புகழைக் கூட்டும். விளையாட்டு வீரர்கள் நல்ல பெயர் புகழுடன் விளங்குவர். போக்குவரத்தில் கவனம் தேவை.

மாணவர்கள்

புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றிபெறப் பாடுபடுவீர்கள். நல்ல அறிவும் ஆற்றலும் மிகும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் அமையும். கல்விக்கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டு பின் கடன் கிடைக்கும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதை கவனம் செலுத்துதல் கூடாது. போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

பெண்கள்

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் பேசுதல் கூடாது. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் ஒரு சிலருக்கு நடந்தேறும். இதுவரை நடவாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் குடும்பத்தில் இனிதே நடந்தேறும். புத்ரபாக்யத்தில் இருந்து வந்த தடைவிலகி புத்ரபாக்யம் கிட்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறந்து காணப்படும். எனவே உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் ஒருவித சகிப்புத் தன்மையும் திருப்தியற்ற தனமையும் ஏற்படும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் குழப்பங்களும் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையும் ஆதரவும் கிட்டும். உடலில் சின்னப்பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் அவசியம்.

உடல் ஆரோக்யம்

சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உடலில் தேமல், கட்டி, புண் போன்ற நோய்த் தொற்றுகள் வந்து போகும். அடிவயிறு முட்டி, கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். சர்க்கரை நோய் இருப்பின் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

அதிர்ஷ்ட எண் : 1, 9

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, சிவப்பு

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு, செவ்வாய்கிழமை

அதிர்ஷ்ட ரத்தினம் : மாணிக்கம், பவளம்

பரிகாரம்

வியாழக்கிழமை “ப்ரம்மாவை” வணங்கி வருதல் நலம். திங்கள் கிழமை “அம்பாளை” வணங்கிவர எதிர்பார்த்த எதிர்பாராத நன்மைகள் அனைத்தும் நடந்தேரும். ஞாயிற்றுக் கிழமை “பள்ளிவாசல்” சென்று வர நற்பலன்கள் கூடும்.

 

- ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

by Swathi   on 31 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலம் ஆலங்குடியில் லட்சார்ச்சனை
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 17 – 06 – 2018 முதல் 23 - 06 – 2018 வரை
இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை இந்த வார நட்சத்திர பலன்கள் - 10 – 06 – 2018 முதல் 16 - 06 – 2018 வரை
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.