LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் (99948 11158)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் உங்களுக்கு விரும்பிய ஆடை, ஆபரணங்கள், பிடித்தமான நல்ல உணவு, ஆகியவை கிடைக்கும்.  அறிஞர்கள் நிறைந்த மேடைகளில், கௌரவப் பட்டங்கள் உங்களை அலங்கரிக்கும். தெய்வீக சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். உயர்அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
பரணி
இந்த வாரம் நீங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய புதிய, முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றிகரமாய் முடியும். பணவிஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. தொடர் முயற்சி செய்தாலும், வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே  கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு  மகிழ்ச்சி அடைவீர்கள்.  நல்லோர் சேர்க்கையால்  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தாமதமின்றி தனவரவுகள் வந்து மகிழ்ச்சி தரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்களின் அழகும், பொலிவும், அறிவுத்திறனும் கூடும். திருமண வாய்ப்புகள் தேடிவரும். முக்கிய பணிகளில் சுறுசுறுப்புக் குறைந்து, சொம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தீவிர முயற்சிக்குப் பின், இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தாய்வழி உறவுகளால் எவ்வித  உதவியும் இருக்காது. உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.
ரோகிணி
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். . வீட்டில் உறவுகளின் வருகையால் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம்  என ஆனந்தம் பொங்கும். அதன் காரணமாகச் சிலருக்கு அஜீரணத் தொல்லைகள் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேரலாம்.  சிலருக்குக் காரியத்தடைகள், காலதாமதங்கள் காரணமாகப் பின்னடைவுகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப்பயன்களை அடைவீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான புதிய வழிகள் தென்படலாம். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் விபத்தில் சிக்க நேரிடலாம். கவனம் தேவை. தொலை தூர சுபச்செய்திகளை எதிர்பார்க்கலாம்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் பொருளாதார நிலை சீராக இருக்கும். சிலருக்கு வீட்டில் திருமணத்திற்கான வரன் தேடும் முயற்சிகளில் முனைப்பாக இறங்குவர். சந்ததி விருத்தி ஏற்படும்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்.  அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைத்துப் புகழும் ஓங்கும்..
திருவாதிரை
இந்த வாரம் பூஜை வழிபாடுகளால் தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும்.  வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் தனிப்பட்ட முறையில் நன்மைகள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.  வாக்கு வன்மை ஓங்கி, அதன் மூலமாக. ஆதாயம் அடைவீர்கள். பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் வாக்கு வன்மையால் பொருளாதார உயர்வுகள் ஏற்படும். வரும் நல்ல செய்திகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பகைவர்களை வெல்லும் திறன் மேம்படும். வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றங்களால் உங்கள் அந்தஸ்து, கௌரவம் கூடும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் உண்டு. உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். பைசாவுக்கு பிரயோஜனமில்லாத காரியங்களுக்காக அலைய நேரிடும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் பெருகும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்.  உங்களுக்கு அரசுத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். சிலருக்குக் கட்டுக்கு அடங்காத செலவுகளால் மனஅமைதி குறையும்.
பூசம்
இந்த வாரம் புதுப்புது  முயற்சிகளால் தனவரவு அதிகரித்து கேளிக்கை ஈடுபாடு, இனிய பயணங்கள் ஆகியவை ஏற்பட்டு சந்தோஷம் தரும். வியாபாரிகளுக்கு வியாபார சம்பந்தமான நற்செய்திகள் வரும். மக்களிடம் தங்கள் விற்பனைத் திறமைகளைக் காட்டி வியாபாரத்தில் இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். அரசு அதிகாரிகளின் சந்திப்பு அனுகூலமாய் இருக்கும். புதிய பெண்களின் நட்பு மனக்களிப்புத் தரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய சாதனைகள் புரிந்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
ஆயில்யம்
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள்.  பெண்களுடனான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சிலருக்கு மனச் சஞ்சலங்களும், அலைச்சல்களும் ஏற்படலாம். தங்கள் எதிர்பார்பார்ப்புக்கு மேல் தாராளமான பணவரவு ஏற்பட்டு மனமகிழ்ச்சி கூடும். பெரிய மகான்களின் தரிசனமும், அருளாசியும் கிடைக்கும். சிலருக்கு வியாபாரப் போட்டிகளால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள்  தனித்திறமைகளால் புதிய இலக்குகளை எட்டி அதிக இன்சென்டிவும், பாராட்டும் பெறுவர்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற இனிய சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். அதன் காரணமாகச் சந்தோஷம் பொங்கும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களால் ஆதாயம் அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.  பணிபுரியும் நண்பர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால்  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். சாதுக்கள் தரிசனம் மற்றும் புண்ணிய கதைகள் கேட்டல் என பொழுது பக்திமயமாகக் கழியும். எடுக்கும் சிறு முயற்சிகளில் கூட வெற்றி கிடைக்கும்.  
பூரம்
இந்த வாரம் தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால், அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு, வருமானமும் பெருகும். பெண்களால் இலாபம் ஏற்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடித்து அதனால் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு சாதகமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். சகோதரர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். சிலருக்கு எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.
ஹஸ்தம்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். எதையும் துணிகரமாக எடுத்து மேற்கொள்ளும் தனித்திறன் உங்களிடம் இருப்பதால் வாழ்க்கையில் உச்சத்துக்குச் செல்வீர்கள். பிள்ளைப்பேறு, தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்திகள் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் போதிய அளவு தனவரவு அதிகரிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். காலத்துக்குத் தக்க நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, வராத உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். அவர்களுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு  வீண்அலைச்சல்கள்,  வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற சச்சரவுகளை விலக்கி, பணிவுடன்  பணியாற்றினால் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
சுவாதி
இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.  புதிய தொழில் முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும்.  நல்ல பல ஆன்மிகக் கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக   ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.  வாடிக்கையாளரிடம்  நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். அன்பு நண்பர்களும், பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். அதன் காரணமாக மட்டுமே அதிக  இலாபமும், அதிக பலனும்  கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம்.வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
அனுஷம்
இந்த வாரம் மனைவியின் விருப்பப்படி அனைத்துப் பொருட்களையும்  வாங்கிக் குவிப்பீர்கள்.  ஆயினும் வரவுக்குள் செலவுகளை வைத்துக்கொள்ள முயலுங்கள்.  முன்னர் கடினமான வேலை, நம்மால் செய்ய முடியாது என ஒதுக்கி வைத்த வேலைகளை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். அன்பு மனைவியின் ஆதரவால், மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். தெய்வீக வாக்கால் வருமானம் பெருகும். எண்ணிய எண்ணங்கள்யாவும் ஈடேறும். நட்பு வட்டம் விரிவடையும்.
கேட்டை
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக இல்லமே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும், வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். அந்த நாட்களின் ஞாபகங்களை நினைவுபடுத்தும் விதமாக பழைய நண்பனின் வரவு மகிழ்ச்சியூட்டும். பெண்கள் வீட்டு வேலைகளையும், அலுவலக வேலைகளையும் எந்தவிதக் குழப்பமின்றி செய்து முடிப்பர். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் கிடைக்கும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் நண்பர்களுடன் முக்கிய விருந்துகளில் கலந்துகொண்டு  மகிழ்ச்சி பொங்கப் பொழுதைக் கழிப்பீர்கள். எல்லாவகையிலும் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகளிடமும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் தாமதமின்றி சாதகமாக நிறைவேறும். தொழிலில் புதிய விரிவாக்கம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து  இலாபத்தை அதிகரித்துக் கொள்வர்.
பூராடம்
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். உங்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலர் உயர் ரக வாகனங்களை வாங்க முயற்சி எடுப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கைச் சுலபமாக அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும். அதன் காரணமாக செலவுகள் ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடியும். அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்கள் பணியில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். அரசுப் பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கடன் கொடுத்தவர்களிடம் சுலபமாகக் கடனைத் திரும்பப் பெற்றுவிடுவீர்கள்.  
திருவோணம்
இந்த வாரம்  தங்கள் சாதுர்யமான பேச்சால் சம்பாத்தியம் கூடும். உங்கள் மனதில் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் எழும். வியாபாரிகள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சிறப்பாகச் செய்வார்கள். நல்ல உணவு, ஆழ்ந்த தூக்கத்தால் மனதில் நிம்மதி நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச்செலவுகள் ஏற்படும். சுற்றமும், நட்பும் சூழ, சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.  எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.  அரசுப்பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன்பெறுவர்.  நெருங்கிய நண்பர்களின் உதவியால் முன்னேற்றங்கள் ஏற்படும். நல்லதும், கெட்டதுமாகக் கலந்த பலன்கள் ஏற்படும் ஆதலால்  பக்தி மார்க்க ஈடுபாடு நல்ல பலன் தரும்.  தந்தைக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.  

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்கள் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். சாதிக்கத் துடிக்கும் உங்கள் கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றி அனைவரின் பாராட்டினையும் பெற்றுத் தரும். உஷ்ணம் காரணமான உபாதைகள் ஏற்படும். ஆதலால், குளிர் பானங்களை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள்.
சதயம்
இந்த வாரம் எதிர்பாராத விதமாகப் பணவரவு அதிகரிப்பதால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படும். வழக்குகளில்  நிச்சியமாக வெற்றி கிடைக்கும். அக்கம் பக்கத்தில் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. மனைவி, குழந்தைகளிடம் மனம்விட்டு சிரித்துப் பேசி மகிழுங்கள். பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொண்டு, அழகை வெளிக்காட்டும்  வகையில் பல விழா நிகழ்வுகள் கைகொடுக்கும். சிலருக்கு ஏமாற்றத்திற்கான வாய்ப்புகளும் வரலாம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் உறவுகள் உங்களுடன் மகிழ்ச்சியாகக் காலங்கழிப்பர். அரசுப் பணியில் இருப்பவர்கள், தங்கள் உயர்அதிகாரிகள் மனம் மகிழும் வண்ணம், கடமையுணர்வுடன் செயல்பட்டுப் பாராட்டுப்பெற முயலவேண்டும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குப் போதுமான தனவரவு இருக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பல வழிகளிலும் பணம் கூடுதலாக வரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். பணிபுரியும் இடத்தில் உங்கள் வேலைத் திறமை அங்கீகரிக்கப்படும். சிலருக்கு, இடமாற்றம், வேலைமாற்றம் ஏற்படலாம். உங்கள் நண்பர்களால் பல நன்மைகளை அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.
உத்திரட்டாதி
இந்த வாரம்  உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் விருப்பங்கள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சுக சௌகரியங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும்.
ரேவதி
இந்த வாரம் அன்புமிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். ஆழ்ந்த மனக்கவலைகள் அன்பு மனைவியின் அரவணைப்பால் குறையும்.  குழந்தைகளின் சேட்டை, செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.   வியாபார விரிவாக்கத்தால் கிடைக்கும் இலாபம் சிறப்பானதாக இருக்கும். நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். குடும்ப உறவுகளின்  ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும்.

by Swathi   on 12 Nov 2017  0 Comments
Tags: Rasi Palangal   Weekly Rasi Palangal   Natchathira Palangal   Abirami Sekar Rasi Palangal   நட்சத்திர பலன்கள்   ராசி பலன்கள்   இந்த வார நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை) நட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)
நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர் நட்சத்திர வார பலன்கள் (05 – 11 – 2017 முதல் 11 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர்
இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ. இந்த வார நட்சத்திர பலன்கள் (29 – 10 – 2017 முதல் 04 - 11 – 2017 வரை) - அபிராமி சேகர். எம்.ஏ.
இந்த வார நட்சத்திர  பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 10 – 2017 முதல் 14 - 10 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 09 – 2017 முதல் 30 - 09 – 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (17 – 09 – 2017 முதல் 23 - 09 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (17 – 09 – 2017 முதல் 23 - 09 – 2017 வரை)
இந்தவார நட்சத்திர வார பலன்கள் (20 - 08 - 2017 முதல் 26 - 08 - 2017 வரை) இந்தவார நட்சத்திர வார பலன்கள் (20 - 08 - 2017 முதல் 26 - 08 - 2017 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (13 – 08 – 2017 முதல் 19 - 08 – 2017 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (13 – 08 – 2017 முதல் 19 - 08 – 2017 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.