LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

லிங்கா திரைப்படம் - தெரிந்ததும் !! தெரியாததும் !! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!

கோச்சடையான் படத்தை தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்த் லிங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்குகிறார். 


இரட்டை வேடம் :


லிங்கா படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடமாம். ஒன்று ஜமீன்தார் வேடம். மற்றொன்று தாதா வேடமாம். 


ஜமீன்தார் ரஜினி முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றத்தில் வருவாராம். இவர் மிகவும் நல்லவர். மற்றொரு ரஜினி, தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகளை உடுத்திய வேடத்தில் வருவாராம். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் கேட்டவராம். 


படத்தின் கதை :


படத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர் பஞ்சம் வருகிறது. அதை போக்குவதற்காக ஊர் ஜமீன்தார் ரஜினி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறார். 


ஊர் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று கருதும் சமூகவிரோத கூட்டம் அணை கட்டும் ரஜினி பற்றி தவறான வதந்திகளை ஊருக்குள் பரப்புகிறது. அதை நம்பும் ஊர் மக்கள் ரஜினியை தூற்றுகிறார்கள். இதனால் மனம் வருந்தும் ரஜினி அணையை கட்டிவிட்டு ஊரைவிட்டே சென்று விடுகிறார்.


அதன் பிறகு அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.


அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. அவரை போலீஸ் வலைவீசி தேட அணையில் வந்து மறைந்து தலைமறைவாக இருக்கிறார். அப்போதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒழிந்து இருந்து அந்த வழியாக வருகிறவர்களிடம் வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவது தெரிகிறது.


அணையை காப்பாற்ற வந்த பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் லிங்கா படத்தின் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.


கூடுதல் தகவல்கள் :


ஜமீன்தார் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா ஜோடி. தாதா ரஜினிக்கு அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்கள். 


லிங்கா படத்துக்காக மைசூரில் பிரமாண்ட அரண்மணை செட்டும், அணை செட்டும் போடப்பட்டுள்ளது. அதில்தான் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.


இளைய ரஜினியின் நண்பனாக வடிவேலு நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இன்னொரு நண்பனாக நான் ஈ சுதீப்பும் நடிக்கிறார். 


இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். இவர் தாண்டவம், புத்தகம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.


சாருலதா படத்தை இயக்கிய பொன்ராம் இந்த படத்திற்கு கதை, வசனத்தை எழுதி உள்ளார்.  


லிங்கா படத்தில் நடிப்பது குறித்து சோனாக்ஷி சின்ஹா, தமிழ் சினிமாவில் இதை விட ஒரு சிறப்பான துவக்கம் எனக்கு அமையாது. இந்தியில் என் முதல் படம் சல்மான்கானுடன் தொடங்கியது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் என்பது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.


ரிலீஸ் எப்போ :


அனேகமாக படம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

by Swathi   on 09 May 2014  0 Comments
Tags: Rajini\'s Linga   Rajini\'s Linga Movie   Linga Movie   Linga Movie Story   லிங்கா திரைப்படம்   லிங்கா   ரஜினி லிங்கா  
 தொடர்புடையவை-Related Articles
முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !! முடிவுக்கு வந்தது லிங்கா பட பிரச்சனை !!
விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !! விஜய், ரஜினியை தொடர்ந்து களம் இறங்கும் அதர்வா !!
லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !! லிங்கா இன்னமும் 521 திரையரங்குகளில் ஓடுகிறதாம் !!
லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை... லிங்கா படத்தால் நஷ்டமா... வேந்தர் மூவிஸ் அறிக்கை...
முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !! முதல் நாள் வசூலில் எந்திரனை முந்திய லிங்கா !!
லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்... லிங்கா இதுவரை - தெரிந்ததும்... தெரியாததும்...
வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !! வேல்முருகன் போர்வேல்ஸ், ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை அல்ல !!
5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !! 5000 திரையரங்குகளில் அதிரப்போகும் லிங்கா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.