அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம்.
இந்த படத்தில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹா, சுப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார்.
கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். சகாப்தம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை சிங்கப்பூர், மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.மேலும் பிரம்மாண்ட பொருட்செலவில் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
சகாப்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 31ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் பிரபல நடிகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.
சகாப்தம் படம் வெளியாகும் அதே நாளில் தனுஷின் ’அனேகன்’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|