LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..

நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய கிராம விதை வங்கிக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.

- 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். 110ரக விதை தொகுப்பையும் கொடுக்கின்றோம். பெற்றுக்கொள்ளவும். விதைப்பெருக்கம் செய்து கொடுத்தாலும் பெற்றுக்கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். ஒவ்வொரு புதன்கிழமை தோறும் விதைகள் அனுப்புகின்றோம்.
குறிப்பிட்ட விதைகள் தேவைப்பட்டாலும், ஒட்டுமொத்த விதை தொகுப்புகளை கேட்டாலும் அனுப்புகின்றோம்.

தக்காளி:
- நாட்டு தக்காளி
- கொடி தக்காளி
- மஞ்சள் காட்டுத்தக்காளி
- சிவப்பு காட்டுத்தக்காளி

கத்தரி:
- பச்சை கத்திரி
- நெகமம் வரி கத்திரி
- உடுமலை சம்பா கத்தரி
- உடுமலை உருண்டை கத்தரி
- திண்டுக்கல் ஊதா கத்தரி
- மணப்பாறை கத்தரி
- எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
- சேலம் முள் கத்தரி
- கண்ணாடி கத்தரி
- நத்தம் கீரி கத்தரி
- கும்கோணம் குண்டு கத்திரி
- தொப்பி அ தக்காளி கத்தரி
- கல்லம்பட்டி கத்தரி
- நந்தவன பச்சை கத்தரி
- கோபி பச்சை கத்தரி
- ஊதா முள் கத்தரி
- கொத்து கத்தரி
- நாமக்கல் பொன்னு கத்தரி
- வெள்ளை வரி கத்தரி
- பச்சை குண்டு கத்தரி
- வெண்வரி சம்பா கத்தரி
- வெண்வரி உருண்டை கத்தரி
- மணச்சநல்லூர் கத்தரி
- காரமடை வரி கத்தரி
- காரமடை ஊதா கத்தரி
- கடவூர் உருண்டை கத்தரி
- வெங்கேரி கத்தரி

மிளகாய்
- சம்பா மிளகாய்
- முட்டி மிளகாய்
- காந்தாரி மிளகாய் சிறியது
- காந்தாரி மிளகாய் பெரியது
- குண்டு மிளகாய்
- தோடு மிளகாய்

வெண்டை:
- வெண்டைக்காய்
- மலை வெண்டை
- சிவப்பு வெண்டை

கொடி வகைகள்:
- பாகல்
- மிதி பாகல்
- குடுவை சுரை
- நீளச் சுரை
- கும்பச்சுரை
- ஆள் உயர சுரை
- உருட்டு சுரை
- செம்பு சுரை
- திருச்சி நீள புடலை
- தேனி நீள புடலை
- குட்டை புடலை
- பாப்பனூத்து தரை புடலை
- பச்சை பட்டை அவரை
- பெல்ட் அவரை
- கோழி அவரை
- செடி அவரை
- தம்பட்ட அவரை
- கொத்தவரை
- நீள பீர்க்கங்காய்
- மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்
- வெள்ளை பூசணி
- கையளவு பூசணி
- சக்கரைப் பூசணி
- பரங்கிக்காய்

பொரியல் தட்டை
- வெள்ளை தட்டை

பல்லாண்டு ரகங்கள்:
- மரத்துவரை
- கருங்கண் பருத்தி
- கோவில்பட்டி முருங்கை
- பப்பாளி
- சுண்டக்காய்
- நாட்டு ஆமணக்கு

மலைக்காய்கறி ரகங்கள்:
- வெள்ளை முள்ளங்கி
- சிவப்பு முள்ளங்கி
- பீன்ஸ்
- வரி பீன்ஸ்
- கருப்பு பீன்ஸ்
- சிவப்பு பீன்ஸ்
- ரெட்டை பீன்ஸ்
- குத்துசெடி பீன்ஸ்
- இலங்கை பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- பழ வெள்ளரி
- வரி வெள்ளரி
- குமரி வெள்ளரி


கீரை ரகங்கள்
- அரைக்கீரை
- முளைக்கீரை
- பச்சை சிறுகீரை
- சிவப்பு சிறுகீரை
- பச்சை தண்டங்கீரை
- சிவப்பு தண்டங்கீரை
- பச்சை புளிச்சகீரை
- சிவப்பு புளிச்சகீரை
- மணதக்காளி கீரை
- கொத்தல்லி
- பருப்பு கீரை
- பாலக்கீரை
- அகத்திக்கீரை
- காசினிக்கீரை
- சிவப்பு முள் தண்டு கீரை
- பச்சை முள் தண்டு கீரை
- கொடி பசலைக்கீரை
- சவுரிக்கீரை
- தொய்யக்கீரை
- குப்பை கீரை

மூலிகைகள்
- பூனைக்காலி
- தூதுவளை
- முடக்கற்றான்
- துளசி
- திருநீற்றுப்பச்சிலை  
- சதகுப்பை கீரை
- செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
- செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்

விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது . வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.

- அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்..

மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ...

 ஆதியகையின் தாம்பூலம்

திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..

சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்.
ஒட்டன்சத்திரம்.
திண்டுக்கல் மாவட்டம்.
தொடர்பு எண்: 8526366796
(செல்பேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பிடவும்.)

by Swathi   on 19 May 2017  6 Comments
Tags: vegetable seeds   vegetable seeds Sellers in Tamilnadu   Tamilnadu vegetable seeds Sellers   traditional vegetable seeds   parampariya kaikarikal   பாரம்பரிய காய்கறிகள்   மரபு காய்கறிகள்  
 தொடர்புடையவை-Related Articles
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
கருத்துகள்
14-Sep-2019 03:11:37 Sriram said : Report Abuse
எனக்கு வீட்டில் தோட்டம் அமைக்க நாட்டு தக்காளி விதைகள் வேண்டும். எவ்வளவு விலை வாங்குகிறீர்கள்.
 
06-Dec-2017 15:16:31 க.திருமுருகன் said : Report Abuse
வாழ்த்துக்கள் ,நான் 1 .5 ஏக்கரில் 400 தேக்கு வைத்துள்ளேன். ஊடு பயிராக காய் பயிரிட விரும்புகிறேன்.நாட்டு விதை கொடுத்து ஆதரவு தர வேண்டுகிறேன்.நன்றி
 
01-Nov-2017 07:09:40 தனலட்சுமி said : Report Abuse
சூப்பர்....... இல்லம் தோறும் இயற்கை உணவுகள் வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் பயணம் செய்கிறேன் . எனவே தங்கள் ஆதரவு எனக்கு வேண்டும் .
 
15-Oct-2017 08:12:50 ரஹ்மத்துல்லாஹ் ஏ எம் எஸ் said : Report Abuse
மிகவும் சிறப்பான சேவை. நானும் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருக்கிறேன். கார்ப்பொரேட்டுகளால் விதையில்லா விவசாய சூழ்ச்சி நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தங்களின் இந்த முயறசிக்கு பாராட்டுக்கள். எனக்கு விதைகள் தேவைப்படும்போது தொடர்பு கொள்கிறேன்.
 
30-Sep-2017 10:49:32 jaseer said : Report Abuse
தங்களின் இந்த சிறப்பான பணிக்கு என் மனமார்ந்த நன்றி நான் தற்பொழுது வெளிநாட்டில் வேளையில் உள்ளேன் எனக்கு நீண்ட நாட்களாகவே இயற்கை விவசாயமும் அதன் பயன்கள் மீதும் பெரும் ஆர்வம் உண்டு கரணம் நான் கிராமப்புறங்களிலிருந்து வந்தவன் ஆனால் இன்று நான் உண்ணும் உணவு விருப்பம் இல்லாமலும் எதிர்மறையான விளைவுகளை தருவதை உணர்ந்துகொள்ள முடிகிறது இதை என் தலைமுறை பெறாமலிருக்க எனக்கு முன்பு கொடுக்கப்பெற்ற ஆரோக்கியமான உணவை கொடுக்க விரும்புகிறேன் ஆகையால் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுதல் தேவை என்பதை உணர்ந்து தங்களிடல் அறிவுரை வேண்டி தங்களை நாடியுள்ளேன் சிரமம் பாராமல் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் வீட்டிற்கு பின்புறம் வண்டல் மண் 28 சென்ட் உள்ளது அதில் உணவு பொருள்கள் மற்றும் தொட்ட்டம் அமைக்கும் எண்ணமும் உள்ளது மேற்கொண்டு வருவாய் வருவதுபோல் வேறு ஏதும் சேர்த்து செய்வது போன்ற அறிவுரைகளையும் வழங்கவும் இப்படிக்கு ஜஸீர் அஞ்சுகோட்டை திருவாடானை ராமநாதபுரம் பின் கோடு-623407
 
21-May-2017 22:49:32 Mani said : Report Abuse
தங்கள் சேவை வாழ்க அய்யா,, நான் தற்போது வெளிநாட்டில் வேலை நிமித்தமாக இருக்கிறேன்,, நாடுதிரும்பியதும்,, மாடி தோட்டம் அமைக்கும் எண்ணம் உள்ளது,, தொடர்பு கொள்கிறேன்,, நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.