LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம் !

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சத்யராஜ்

 

நடிகை : ஸ்ரீ திவ்யா

 

இயக்கம் : பொன்ராம்

 

இசை : இமான்

 

படத்தின் கதை களம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பக்கத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் ஆரம்பிக்கிறது. வேலையில்லாமல் வெட்டியாக சுத்திக்கொண்டிருக்கும், நாயகன், சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan), அந்த ஊரில் தலைவராக இருக்கும் சத்யராஜின் பெண்ணை காதலிக்கிறார். இதை அறிந்த சத்யராஜ் தனது பெண்ணுக்கு, வேறு பையனுடன் நிச்சயம் செய்கிறார். இதனால் திருமணத்திற்கு முதல் நாள் நாயகனும், நாயகியும் ஊரை விட்டு ஓடிபோகிறார்கள். இதன் பிறகு நடக்கும் காமெடி தான் படத்தின் மீதி கதை.

 

இதே கதை அம்சத்துடன் தமிழில் பல படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் அதற்கெல்லாம் விதி விலக்கு.

 

படத்தில் ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான நகைச்சுவை நாயகனாக வந்து செல்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு(Sivakarthikeyan) எதிர்நீச்சல் அளவுக்கு பெயரை வாங்கித்தரா விட்டாலும், அந்த பெயரை காப்பாற்றி இருக்கிறது. 

 

ஊர் தலைவராக வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பலம். அதுவும் மீசையை முறுக்கி விட்டு திரிவது செம.... க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு சான்சே இல்ல...

 

சிவகார்த்திகேயனின் தோழனாக வரும் சூரி, பல காட்சிகளில், ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால், தியேட்டரையே அதிர வைத்திருக்கிறார். 

 

படத்தின் ஹீரோயினுக்கு காதல் வருவது காமெடியாக இருக்கிறது. மைனர் ஹீரோயினின் கல்யாணத்தை போலீஸில் சொல்லி சிவகார்த்திகேயன் நிறுத்தி விடுகிறாராம். அதனால் அவளுக்கு சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan) மேல் காதல் வந்து விடுகிறதாம்.

 

சிவகார்த்திகேயனை(Sivakarthikeyan) ஹீரோயின் அம்மாவுக்கு முதலில் பிடிக்காதிருப்பதும், அவர்கள் வீட்டு மாட்டை காப்பாற்றி கொடுத்ததும், மாப்பிளையாக ஏற்றுக்கொள்வதும் செம காமெடி......

 

இமானின் இசையில், பாடல்கள் செம ஹிட் !!!  காட்சிகளும் செம ஹிட் !!

 

மொத்தத்தில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" லாஜிக் இல்லாத மேஜிக் !!!  

by Swathi   on 06 Sep 2013  0 Comments
Tags: வருத்தப்படாத வாலிபர் சங்கம்   Varutha Padatha Valibar Sangam   Sivakarthikeyan              
 தொடர்புடையவை-Related Articles
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !! சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் !!
மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !! மே-1 ல் ரிலீஸ் ஆகிறதாம் ரஜினி முருகன் !!
ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !! ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.