LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

19 தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் -முனைவர்.தஞ்சை. பா. இறையரசன்

1. தமிழ் மொழிக்கென்று தனி அமைச்சர்  அமர்த்த வேண்டுகிறோம்.

2.
தமிழ்வழிப்பள்ளிகளுக்கும், மழலையர் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிக கட்டுப்பாடுகள் இன்றி உடனடி ஏற்பு வழங்க வேண்டுகிறோம்.

3.
தமிழ் வழியில் படித்தோர்க்கு 75% வேலை உறுதி என அறிவிப்பின் தமிழ் வழியில் மாணவர்கள் படிக்க அதிக ஆர்வம் காட்டுவர்; ஆங்கில வழி தனியார் பள்ளிகள் குறையும்.

4.
முன்பு 1970களில் அறநிலையத்துறை நிருவாக அதிகாரி (EO.) பணிக்கான குழுமை 7 (Group VII) தேர்வுகளில் தமிழ் இலக்கிய பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதி இருந்தது.. அதனை நடுவில் நீக்கிவிட்டனர். அறநிலையத்துறை, தொல்லியல்துறை,செய்தித்துறை முதலியவற்றில் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதியை மீண்டும் கொண்டு வர வேண்டுகிறோம்.

5.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தந்தை என்றழைக்கப்படும் சர். இராபர்ட்டு புரூசு ஃபூட் அவர்களால் சென்னை உள்நாட்டு/பன்னாட்டு வானூர்தி முனையம் எதிரில் உள்ள பல்லாவரம், திரிசூலம் மலைகளில், இந்திய நாட்டில் முதன்முதலில் கற்கால கற்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம். நாள் 30.5.1853. அவர் அவற்றை உலகின் முதல் கற்காலக் கற்கோடரிகள் தொழிற்சாலை என்றே அறிவித்தார்.

* 1.5 மில்லியன் - 1. 7 மில்லியன் ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பம் நிறைந்த கற்கருவிகள் என 2013 - ஆம் ஆண்டில் உலக அறிவியல் இதழ்களில் ஏற்று மீளாய்வு முடிவு வெளி வந்தது. எனவே கற்காலப் படிநிலை மாந்த இனம் ( Homo Erectus) வாழ்ந்த இடத்தில் கள மானுடவியல் அருங்காட்சியகம் அமைத்திடவும் கோருகிறோம்.
இது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு எதிரில் உள்ளதால் சிறந்த வரலாற்று மையமாகவும் சுற்றுலாத்தலமாகவும் மாறும்.

6.
குடந்தை பழையாறை அருகில் உள்ள உடையாளூரில் இராசராசன் புதையிடம் (சமாதி) உள்ளது. அங்கு மண்டபம் கட்ட வேண்டுகிறோம்.

7.
தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்திற்கு பேரரசன் இராசராசன் தஞ்சாவூர் எனப் பெயர் சூட்டவும்,
கடலூர் துறைமுகத்துக்கு இராசேந்திர சோழன் பெயர் சூட்டவும் வேண்டுகிறோம்.

8.
இராசராசன் வரலாற்றைக் கூறும் பொன்னியின் செல்வன் கதைப்படம் (Comics)
பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப் பெற வேண்டுகிறோம். சித்த மருத்துவம், ஏர் எழுபது ஆகியவற்றைப் பள்ளிகளில் பாடநூல் ஆக்க வேண்டுகிறோம்.

9.
பரவி வரும் மாணவர் ஒழுங்கீனம், வன்முறை களைய மேல்நிலைப் பள்ளிகளில், நீதிபோதனை,
இசை, கைத்தொழில் பயிற்சிகள் (தறி, மட்பாண்டம் முதலியன) முன்பு இருந்தன. சித்த மருத்துவம் (பாடநூல் நிறுவனம் : 1980இல் வெளி வந்தது. ௹15 விலை.) ஓகம், கராத்தே, குங்ஃபூ, சடுகுடு, தமிழிசை,
கருவியிசை (குழல், வயலின்..) முதலியவற்றுடன் , சிறு படைப்பயிற்சி (சாரணர், ACC, NCC), சமூகத்தொண்டுக்கழகம் முதலியன அமைக்கப் பெறவும் வேண்டுகிறோம்.

10.
பள்ளி, கல்லூரிகளில் கழிப்பறை வசதி போதியனவாகவும், அதற்கான தனி கண்காணிப்புத் துறையும் இருத்தல்; குழந்தைகளின் மற்றும் மொத்த மாணவர்களின் நலத்தை மேம்படுத்தவும், கற்கையில் நற்கவனம் செலுத்தவும் உதவியாக இருக்கும். குறிப்பாக பெண்கள் பள்ளிகள், சிறுவர் பள்ளிக்கூடங்கள் கவனிக்கத் தக்கவை. எண்ணற்றோர் இது பற்றி பெரிதாக அக்கறை கொள்வதேயில்லை; ஆனால் எதிர்காலத்தின் பல சிக்கல்கள் உடல்நலம் கோளாறுகள் இங்கிருந்தே வருகின்றன.

11.
சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை பின்புறம் உள்ள துள்ளம் (இப்போது தண்டலம்) என்னுமிடத்தில் உள்ள திருவிக பிறந்த வீட்டில் உள்ள நூலகத்தைத் தமிழக அரசு நூலகத்துறையே ஏற்று, நூலகர் அமர்த்தவும் வேண்டுகிறோம். போரூர்- தண்டலம் சாலையின் முகப்பில் திருவிக வளைவு (ஆர்ச்) அமைக்கவும் வேண்டுகிறோம்.

12.
தேரெழுந்தூரில் ஊரின் நடுவில் கலைஞர் காலத்தில் கலை பண்பாட்டுத் துறை கட்டிய மணி மண்டம் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. வெளியில் வாடகைக்குள்ள இசைக்கல்லூரியை அங்கு மாற்றி நடத்த வேண்டுகிறோம். ஊரின் உள் பகுதியில் கம்பர்மேடு உள்ளதால், அங்குத் தொல்லியல் துறைப் பாதுகாப்பும் சுற்று வேலியும்/ சுவரும் அமைக்க வேண்டுகிறோம்.

13.
கண்ணகி கோயிலுக்குச் செல்லும் சாலையின் ஒரு பகுதி கேரள வனத்துறையினருடையது என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, சித்திரா பவுர்ணமியில் கண்ணகி வழிபாட்டுக்குச் சென்று வர, கடும் கெடுபிடியுடன் அனுமதிக்கின்றனர். கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் உள்ளதால், தமிழக எல்லைக்குள்ளேயே உள்ள கம்பம்- பளியன்குடி வழியே சாலை அமைக்க வேண்டுகிறோம்.
(இதனால் மக்கள் அனைத்து நாள்களிலும் சென்று வழிபட்டு வர இயலும்).

14.
தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25% இட ஒதுக்கீடு தர, 400 கோடி தருவதை விடுத்து,
400 அரசுப் பள்ளிகளுக்குத் தர வேண்டுகிறோம்.

15.
அரசுப் பள்ளி மாணவர்கள் "நீட்" தேர்வில் வெற்றிபெறுவது குறைவு, தமிழில் 49 ஆயிரம் பேர் தோல்வி, ஒரு ஆசிரியர் கூட பணித் தேர்வில் வெற்றிபெறவில்லை, பாடநூல்கள் பெருத்தும் தேவையற்ற பகுதிகளுடனும் உள்ளது .... முதலிய குறைகள் நீக்க கல்விக்குழு அமைக்கப் பெற வேண்டும்.
பல அரசுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை, தமிழ்வழிப் பாடம் (மீடியம்) அறவே இல்லை.

16.
இராசராசன் பிறந்தநாள் சதயவிழாவைத் தஞ்சை போலவே, ..........
உடையாளூரிலும், சென்னையிலும் தமிழமைப்புகள் நடத்தி வருகின்றன. தமிழக அரசு சதய விழாவைச் சென்னையிலும் உடையாளூரிலும் அரசு விழாவாக நடத்த வேண்டுகிறோம்.


17.
சோழர் வரலாற்றை முழுதும் முதலில் உலகுக்கு வரலாறாகத் தந்தவர் சதாசிவப் பண்டாரத்தார் . அவருடைய வீடு திருப்புறம்பயத்தில் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுக் கிடக்கிறது. அதனையும் வரலாற்று நூலகம் ஆக மாற்றி அரசேற்க வே
ண்டுகிறோம்.

18.
திருவள்ளுவர் ஆண்டு தை முதல் நாள் என்பதைத் தமிழ்ப்புத்தாண்டு எனக் கலைஞர் ஆட்சியில்
23.01.2008 இல் அறிவிக்கப்பெற்றது. செயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கினார். மீண்டும் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என அறிவிக்க வேண்டுகிறோம்

19.
கலைஞர் 101 திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியதுடன் நடித்தும் முத்தமிழ் வளர்த்தவர்.
அவர் பெயரில், நல்ல கதை, நல்ல தமிழ்ப் பாடல்கள், உரையாடல்களுடன் தமிழ்ப்பெயர் சூட்டும்
திரைப்படங்களுக்குத் தமிழ்த்திரை விருது வழங்க வேண்டுகிறோம்.

__________________________


இவண்:-

1. முனைவர்.தஞ்சை. பா. இறையரசன்,   984 041 6727.

தமிழ் எழுச்சிப் பேரவை, செயலர், 

சென்னை.

2. திரு சு.க. சீதரன்,

இராசராசன் வரலாற்றுக் குழுமம், பம்பைப் படையூர், குடந்தை (வ).

3. வரலாற்று அறிஞர் தஞ்சை. கோ. கண்ணன் - 988 4025 445. 

4. சரவணராசா பொன்னுசாமி - 988 425 8266

(பொன்னியின் செல்வன் படக்கதை வெளியீட்டாளர்)

5. பேராசிரியர். ப.பாரதிதாசன். (வலைத்தமிழ்) - 9551 999 669.

6. புலவர். க.பொன்னுசாமி, - 94445 82059

   தமிழாசிரியர்.

******************

by Swathi   on 22 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்திய ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்திய ஆகமத்தமிழ் எழுச்சி மாநாடு
மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் திரு. கருணாநிதி ஆற்றிய உரையும் , கோரிக்கைகளும் மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் திரு. கருணாநிதி ஆற்றிய உரையும் , கோரிக்கைகளும்
இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை,கோரிக்கைகளும் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை,கோரிக்கைகளும்
தமிழ் வளர்ச்சித்துறைக்கு பிற துறை பொறுப்புகள் இல்லாத தனி அமைச்சரை நியமிக்கவேண்டுமதமிழ்-வளர்ச்சித்துறைக்கு-பிற-துறை-பொறுப்புகள்-இல்லாத-தனி-அமைச்சரை-நியமிக்கவேண்டும் தமிழ் வளர்ச்சித்துறைக்கு பிற துறை பொறுப்புகள் இல்லாத தனி அமைச்சரை நியமிக்கவேண்டுமதமிழ்-வளர்ச்சித்துறைக்கு-பிற-துறை-பொறுப்புகள்-இல்லாத-தனி-அமைச்சரை-நியமிக்கவேண்டும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.