தெய்வ சிந்தனையும் காரியம் சாதிக்கும் திறமையும் உடைய உங்கள் கடக லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகுவும் 3ம் இடத்தில் குருவும் 6ம் இடத்தில் சனியும் 8ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வதும் சிறப்பானது ஆகும். நீங்கள் நினைத்த காரியம் நடக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வது எதிர்பார்த்த தனவரவு பொருள்வரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அமையும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் ஓரளவு வந்து சேர வாய்ப்புகள் அமையும். அதே சமயம் ராகு 2ம் இடத்தில் இருப்பதால் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவது கூடாது. குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேர வாய்ப்புகள் அமையும்.
3ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் அடிக்கடி ஆன்மீகப் பயணங்கள் அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். பயணங்களால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். எடுக்கும் புது முயற்சிகள் எப்பொழுதும் சாதகமாக இருந்து வரும். எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். வேலையின் காரணமாக அடிக்கடி இடமாற்றம் வீடு மாற்றம் ஒரு சிலருக்கு அமையும்.
இடம் வீடுஇ வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை இருந்தாலும் வேலையில் முன்னேற்றமும் அமையும். வீட்டில் சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யம் அமைய ஒரு சிலருக்கு சந்தர்ப்பமும் கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுப்ட மனம் விரும்பும்.
எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிட்டும். வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தந்தையாரால் எதிர்பாரத நன்மைகள் அமையும்இ. நண்பர்களால் மகிழ்ச்சியும் அவர்களால் நன்மையும் அமையும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
6ம் இடத்தில் சனி சஞ்சாரம் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பும் வேலையில் மாற்றமும் முன்னேற்றமும் அமையும். வேலை மாற வேண்டிய சூழ்நிலை ஒரு சிலருக்கு வந்தாலும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை குருப்பெயர்ச்சிக்குப்பின் அமையும். புதிய வேலையில் ஒரு சில இடர்பாடுகள் இருந்தாலும் வேலையை அவசரப்பட்டுவிட்டு விடுதல் கூடாது. உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனை ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையும் ஏற்படும். வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். எனவே பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
3ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வது சிறுதொழில் குறுந்தொழில் சாலையோர வியாபாரங்கள் நல்ல லாபகரமாக அமையும். கமிஷன்இ ஏஜென்ஸிஇ கான்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கர்ஸ் தொழில்கள் நல்ல லாபகரமாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப்பின் உற்பத்தி சார்ந்த தொழில்கள் நல்ல லாபகரமாக அமையும். போக்குவரத்து தகவல்தொடர்புஇ இரும்புஇ எஃகுஇ சிமெண்ட் நல்ல லாபகரமாக அமையும். ஆடை ஆபரணம்இ உணவுஇ ஓட்டல்இ ஜவுளித் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். பங்குச் சந்தை சற்று லாபகரமாக அமையும். அதே சமயம் அதிகமுதலீடு கூடாது. பார்த்து கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். எற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருந்து வரும். கப்பல்இ மீன்பிடித் தொழில்கள் சுற்றுலா லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்ய ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமைந்தாலும் கவனமாக பார்ட்னர்ஷிப் அமைத்தல் வேண்டும். கட்டுமானம்இ பொறியியல்இ ரியல் எஸ்டேட் சற்று சுமாரகவே இருந்து வரும்.
விவசாயம்
விவசாயம் ஓரளவு சாதகமாக இருந்து வரும். காய்கறிகள் பழங்கள்இ பூக்கள்இ உற்பத்தி சாதகமாகவும் அதனால் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஒரு சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் வந்தமையும்இ தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. எதிர்பார்த்த விவசாய மான்யம் கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல்
அரசியல் வாழ்வு சிறப்பாக இருந்து வரும். ஒரு சிலருக்கு பட்டம் பதவிகள் வந்து சேரும். எதிர்பாராத பொறுப்புகள் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். அவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்இ தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். பொதுமக்களும் சாதகமாகவே இருப்பர்.
கலைஞர்கள்
கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். பணத்தட்டுப்பாடு நீங்கி பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். ஒரு சிலருக்கு வெளியூர்இ வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பிரச்சனைகள் வருத்தங்களையும் ஒரு சிலர் சந்திக்க வேண்டியது வரும். நட்பு வட்டாரம் புதிதாக அமையும். அவர்களால் நன்மையேற்படும்.
மாணவர்கள்
விளையாட்டில் ஆர்வம் கூடும்இ விளையாட்டில் பரிசு பட்டம் பெற வாய்ப்புகள் வந்து சேரும். அதே சமயம் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயர்கல்வியின் காரணமாக ஒரு சிலர் வெளிநாடு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். கல்விக்கடன் கிடைக்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும்.
பெண்கள்
இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். தள்ளிப்போன திருமணம் குழந்தை பாக்யம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும். காதல் விஷயங்கள் சற்று தடுமாற்றமாகவே இருந்து வரும். கணவன் மனைவி உறவு சுமாராகவே இருந்து வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கிடைக்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலை அமையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் ஒரு சிலருக்கு வந்து சேரும். தேவையற்ற பேச்சைக் குறைத்தல் வேண்டும். கணவரது உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் மனவருத்தங்கள் ஏற்பட்டு விலகும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர்இ வெளிநாடு செல்ல சந்தப்பர்பங்கள் கிட்டும். தேவையற்ற மனவருத்தத்தைக் குறைத்தல் நலம்.
உடல் ஆரோக்யம்
அடிவயிறு, கால், பாதம் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளல் நலம். சர்க்கரை நோய் இருப்பின் அதைக் கட்டுக்குள் வைக்கவும். சளித்தொல்லைகள் இல்லாமல் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.
அதிர்ஷ்ட எண் : 3, 6 அதிர்ஷ்ட நாள் : வியாழன், வெள்ளிக்கிழமை அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், வெண்மை அதிர்ஷ்ட இரத்னம் : மஞ்சள் புஷ்பராகம், வைரம்
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் “பிரம்மாவை” வணங்கி வருதல் நலம். அத்துடன் “புத்தர் பெருமானை” வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
|