LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

விடை தெரியாத ஏழு கேள்விகளும் முனைவர். பொன்ராஜ் பதிலும்

வாட்ஸ்ஆப்பில் வந்த இந்த அருமையான‌ கேள்விகளுக்கு எனது அனுபவத்தால் நான்‌ உணர்ந்து எழுதிய‌ பதில்.

இதே போல் உங்களுக்கு வேறு சில அனுபவங்கள் இருக்கலாம்.‌ இது சிலருக்கு பயன்‌பெறும் என்பதால் கேள்விக்கு எனது பதிலை பகிர்கிறேன்.

1) எந்த வித கெட்ட‌பழக்கமும் இல்லாதவர்கள திடீரென அகால‌ மரணம்‌ அடைவது ஏன்?

கெட்ட பழக்கத்தை விட கொழுப்பு‌சத்து, சோம்பல், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, கண்ட உணவை கண்ட நேரத்தில் எடுத்துக்கொள்ளுதல், அளவிற்கு அதிமாக உண்ணுதல், ஒவ்வொரு வேலையும் சரியான நேரத்திற்கு உண்ணமை, பசி வரும்வரை தொடர்ந்து நொறுக்கு தீனி, தூக்கமின்மை, விஷ உணவு, உணவு உண்ண தெரியாமை போன்றவைகள் தான் நம்மை அழிக்கிறது

2) யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று‌ கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுவது ஏன்?

அடுத்தவனை காயப்படுத்தாதவர்களை இந்த உலகம் இளிச்சவாயன், கேனையன், பிழைக்க தெரியாதவன், முட்டாள் என்று நினைக்கிறது.

காயப்படுத்த தேவையில்லை ஆனால் சரியான நேரத்தில் சரியான கேள்வியை கேட்காமல் இருப்பது தான்‌ தவறு. அப்படி கேள்வி கேட்க வில்லை என்று சொன்னால் இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்‌ என்று நம்மை காயப்படுத்தி, நம்மை அவமானப்படுத்தி, மற்றவர்கள் தங்கள் சுயநலத்தை வெளிப்படுத்தி நம்மை கீழே தள்ளி கடந்து போவார்கள்‌. இது நம் பிழை.‌

3) சுற்றமும்‌ நட்பும் அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

ஒரு சில சுற்றமும், நட்பும் தேவைப்படும் போது நம்மை அவர்களது சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்வது தான்‌ அவர்களது இயல்பு. அப்படிப்பட்ட‌ சுற்றத்தையும், நட்பையும் கண்டு உணர தவறினால் சிரமம் தான்.

"கண்ணை நம்பாதே உண்ணை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது.

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது."

இதை புரிந்து கொள்ளாமல் ஓடி, ஓடி சுற்றத்தை மதித்துபார்த்தால், அந்த‌ சுற்றம்‌ நம்மை இவன் ஒரு இளிச்சவாயன், பணம் பெருத்து போச்சு, பெருமை பீத்துகிறான் என்று புறம் பேசும்.

இந்த இயல்பை புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வரும்போது நமக்கு வயதாகிவிடும்.

இதை நம் பெற்றோர்கள் அவர்கள் அனுபவத்தில் நமக்கு சொல்லும் போது நாம் காது கொடுத்தே கேட்டிருக்க மாட்டோம்.‌

4) இளகிய‌ மனதுடன் பிறருக்கு உதவுபவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?

இளகிய மனதுடன் உதவுவது நாம் நம்‌ பெற்றோர்களிடம் பெற்ற நல்ல குணம். நம்மால் முடிந்ததை, நமக்கு மிச்சமாக இருப்பதை வைத்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மட்டுமே உதவ வேண்டும் என்பதை மட்டும்‌ உணர்ந்து புரிந்து உதவ பழக வேண்டும். கடன் வாங்கி உதவ கூடாது.

உதவியவர்கள் நமக்கு திரும்ப நன்றியுடன் இருப்பார்கள் என்று நாம் நினைத்தால் கண்டிப்பாக ஏமாற்றப்படுவோம்.

எதிர்பார்த்தால் எப்போதும் ஏமாற்றமே மிஞ்சும்.‌ எதிர்பாராமல் முடிந்த உதவியை செய்து விட்டு மறந்து விடுங்கள்.

நன்றி மறவாமை என்பது நல்ல குணம் அது வாய்க்கப் பெற்றவர்கள் சில பேர்‌தான், அது அவர்கள் வளர்பில் மட்டுமே வரும்.

எனவே பெரும்பாலோரிடம் நீங்கள் ஏமாற நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் நீங்கள் ஏமாறதான் வேண்டும்‌.

5) எந்த வித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?

அதை சரியான வழியில் சேமித்து, உழைத்து பெருக்க வழி தெரியாததால். வீண் செலவு செய்ய கூடாது என்பது அடிப்படை பண்பு. அதற்காக சும்மா இருந்தால் பொருளாதாரம் வளராது. அறிவார்ந்து சிந்தித்து நல்ல வழியில் பொருளாதாரத்தை பெருக்கும் திட்டமிடல் வேண்டும். இந்த முயற்சியில் நட்டம் வரும், அது தாங்க கூடிய நட்டமாக நாம் சிந்தித்து செயல் பட‌வேண்டும்.

6) அகம்பாவமும், ஆணவமும், அலட்சிய‌ மனோபாவமும்‌ கொண்ட சிலர் செல்வந்தர்களாக இருப்பது‌ ஏன்?

முறையற்ற வழியில் சேர்த்த செல்வத்தை, நம்மை போல ஏமாற்றும் இந்த உலகில் நாம் பாதுக்காக்க வேண்டும் என்று நினைக்கும் சிலர் அப்படி நடக்கலாம்.

முறையான வழியில் செல்வம் சம்பாரித்த பெரும்பாலோர் தனது தேவைக்கு வேண்டிய அளவிற்கு போக தான, தருமம், நல்ல‌ காரியங்கள் செய்து அடக்கமாக இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.‌

சில பேர்‌ கஞ்சனாகவே வாழ்வார்கள் அவர்கள் விதி விலக்கு.

பதவி‌ வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்டும் தோழா. பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா.

7) கணக்கில்லாமல்‌ பணம் வைத்திருக்கும் பலருக்கு நன்மைகள் செய்யும்‌ எண்ணம் வருவதில்லையே ஏன்?

அவர்கள் முறையற்ற முறையில் சேர்த்த‌ பணம் எங்கே நம் கையை விட்டு போனால் திரும்ப கிடைக்காதோ என்ற பயம்‌ அவர்களுக்கு.

"உப்பு கல்லை வைரம் என்று சொன்னால் நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் உளரி என்ன கதறி என்ன ஒன்றுமே நடக்க வில்லை தோழா, ரெம்ப நாளா" - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்- எம்.ஜி.ஆர் பாடல் இன்றைக்கும் பொருந்தும் நிலையில் இன்றைய யூ டியுப் இளைய சமுதாயமும் மாறி நிற்கிறது.

Dr பொன்ராஜ் வெள்ளைச்சாமி

by Swathi   on 09 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்! செய்வன திருந்தச் செய்ய 10 கட்டளைகள்!
தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு தமிழர்களின் நாட்காட்டி -மீட்டும் ஒரு நாள்காட்டு
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 2 -இராம.கி
தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1    -இராம.கி தமிழர்களின் நாட்காட்டி - மாதங்கள்- கோள்கள்-சோதிடம் குறித்த தொடர் -காலங்கள் - 1 -இராம.கி
12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள் 12 மாதங்களின் தமிழ்ப்ப்பெயர்கள்
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது..... சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
[ம.சு.கு]வின் :  வெற்றியாளர்களின் பாதை ! [ம.சு.கு]வின் : வெற்றியாளர்களின் பாதை !
பாட்டி வைத்தியம் பாட்டி வைத்தியம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.