LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF
-

சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்ததுண்டா...?
உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும்.
எளிமையாக பார்த்தாலும்::
ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...
இனிமேல் *எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...*
நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை துக்கம் விசாரிக்க வந்த (சில உறவினர்கள் நண்பர்கள், பொதுவாக நமது கலாச்சாரத்தில் பிறந்தாலும் ஆட்டம் செத்தாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்) ரோடு முழுவதும் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் போகும் போது பஸ்ஸில் உள்ளே போடுவது.... மின்சார கம்பி ஒயரில் போடுவது... அதனால் ஷார்டாகி அக்கம்பக்கத்தினர் குடும்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இது தேவையா?....
அந்த பூ மாலைக்கு ₹100/- 200 500 1000 என செலவு செய்வதை விட..
*இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்*
ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக, ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்...
எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்....
திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.
“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,
நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்....
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை.
நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.
பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம்.
ஆனா
**கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் ... மொய் எழுதும் பழக்கம் அவசியம் தேவை* .
சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல??
ஆனா பெரும்பாலும் இல்லை தானே.
அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?
உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி *“நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு* சகமனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்...
இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது...
சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.....
நாம் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும்.....
 
-Durai Murugan K
 
 
by Swathi   on 18 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தொட்டதற்கெல்லாம் விவாகரத்து  - குடும்ப அமைப்பு என்னவாகும்? தொட்டதற்கெல்லாம் விவாகரத்து - குடும்ப அமைப்பு என்னவாகும்?
மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை. மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை.
புத்தாண்டு வாழ்த்துகள் புத்தாண்டு வாழ்த்துகள்
நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய நார்மன் வின்சென்ட் பீலே எழுதிய
உங்களை பிறர் நேசிக்க, உங்களை எல்லோருக்கும் பிடிக்க, உயர்வாக நினைக்க... சில மனதத்துவ அறிவுரை & யோசனைகள்... உங்களை பிறர் நேசிக்க, உங்களை எல்லோருக்கும் பிடிக்க, உயர்வாக நினைக்க... சில மனதத்துவ அறிவுரை & யோசனைகள்...
வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா??? வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா???
திருமண சடங்குகளும் அதன் விளக்கமும் திருமண சடங்குகளும் அதன் விளக்கமும்
மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும் மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்தியப்படும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.