|
||||||||
கூகுள் பே-வில் தவறாகப் பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி? |
||||||||
கூகுள் பே (Google Pay) செயலியில், தங்கக் கடன், சிபில் ஸ்கோர் சரிபார்ப்பது எனப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் இருப்பதால் மற்ற யுபிஐ செயலிகளை விட இதையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
நாம் ஒருவருக்குப் பணத்தைக் கூகுள் பேவில் அனுப்பும்போது, தொலைப்பேசி நம்பரில் தெரியாமல் ஒரு நம்பரை மாற்றிப் போட்டால் கூட வேறு ஒருவரின் கணக்கிற்கு அந்தப் பணம் சென்று விடும்.
அப்படித் தவறான யுபிஐ எண்ணுக்குப் பணம் போனால், அதனைப் பெற்றவரைத் தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு உதவி கோரலாம். அல்லது கூகுள் செயலியின் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு தவறாகப் பணம் அனுப்பிய விவரத்தைக் கூறலாம். பணத்தைத் திரும்பப் பெற வேண்டியதற்கு, அது சார்ந்த தகவல்களைப் பயனர்கள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பே சேவை மையம் எண் 1800-419-0157.
அதன்பின்னர் கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். அதன்படி NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPI-ஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தப் பக்கத்தில் உள்ளபுகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் கட்டணம் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் அலைப்பேசி எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். அதிலும் பணம் செலுத்துபவர் மற்றும் பணம் பெறுபவர் வங்கிகளில் ஒரே வங்கியாக இருந்தால் பணத்தைத் திரும்பப் பெற குறைந்த நேரமே ஆகும். ஆனால், இரண்டு வங்கிக் கணக்குகளும் வெவ்வேறாக இருந்தால் பணத்தைத் திரும்பப் பெற அதிக நேரமாகும்.
|
||||||||
by hemavathi on 02 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|