|
||||||||
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது |
||||||||
![]()
வாட்ஸ்அப் செயலியை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, புகைப்படங்கள், காணொளி, ஒலி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்குப் பலர் என இதன் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்சத் தேவைகளை அதன் மென்பொருள் சார்ந்து அதிகரித்து வருகிறது மெட்டா. இது அந்நிறுவனத்தின் வழக்கமான சுழற்சி தகவல்களில் ஒரு நடைமுறை. அந்தவகையில் ஆப்பிள் ஐஓஎஸ் 15 இயங்குதளம் அல்லது அதற்கு முந்தைய பதிப்புகள், ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் வாட்ஸ்அப் நாளை முதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலி இயங்காத திறன்பேசிகளின் பட்டியல்: ஐபோன் 5s, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்இ (முதல் தலைமுறை), சாம்சங் கேலக்ஸி எஸ்4, சாம்சங் கேலக்ஸி நோட் 3, சோனி எக்ஸ்பீரியா இசட்1, எல்ஜி ஜி2, ஹவாய் அசென்ட் பி6, மோட்டோ ஜி (முதல் தலைமுறை), மோட்டோரோலா ரேஸர் எச்டி, மோட்டோ இ 2014.
|
||||||||
by hemavathi on 31 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|