|
||||||||
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! |
||||||||
![]()
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை பதிவேற்றம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
“வருமான வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான படிவங்கள், குறிப்பிடத்தக்கத் திருத்தங்கள் காரணமாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரிக் கணக்குத் தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும்” என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரிக் கணக்குத் தாக்கல் தொடர்பான மென்பொருள் சார்ந்த அம்சங்களை அரசு வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டைப் பட்டையக் கணக்கர்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைத்தனர். இது சர்ச்சையான நிலையில், தற்போது வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை 31-ம் தேதி தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by hemavathi on 30 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|