LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - நோக்கம் , செயல்பாடுகள்

உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - நோக்கம் , செயல்பாடுகள்

குறிக்கோள்:
தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழல்லாத பெயர்களை வைக்கும் நிலை நாளும் அதிகரித்து வருகிறது. ஒருவருடைய வரலாறு என்பது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரிலிருந்து தொடங்குகிறது. பெயர் நம் மொழியின், இனத்தின் அடையாளம்.

மேலும் எதிர்காலத்தில் இன்றைய நிலை தொடர்ந்தால் தமிழர்கள் அடையாளம் அற்றவர்களாக மாறிவிடுவோம். அடையாளம் தொலைத்து வாழ்ந்து எதைச் சாதிக்கப்போகிறோம்? இதுகுறித்த தொடர் விழிப்புணர்வு, செயல்பாடுகள் வழியே இந்த நிலையைச் சரி செய்யவும், தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும் என்று தேடுபவர்களுக்குப் புதிய பெயர்களை எளிதாகக் கிடைக்கச்செய்வதும், தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களிலும், வெளிநாடுகளிலும் ஒரு லட்சம் பெயர்களை முழுமையாகத் தொகுத்து அவற்றைக் கொண்டுசேர்ப்பதும் இயக்கத்தின் தலையாய குறிக்கோளாகும்.

இளைய பெற்றோர்கள் அழகான தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவதைப் பெருமையாக, கடமையாகக் கருதும் மனநிலையை ஏற்படுத்தவும் இவ்வியக்கம் செயல்படும்.

 

செயல்பாடுகள்:
1. இளம் தலைமுறைப் பெற்றோர் விரும்பும் வகையில் ஒரு லட்சம் புதிய, எளிய தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச்செய்தல்.

2. தமிழ்ப் பெயர்களுக்கு ஒரு சிறப்புத் தொலைபேசி எண் அறிவித்து, ஒரு முழுநேர ஊழியரை நியமித்து எந்நேரத்திலும், உலகின் எந்த நாட்டிலிருந்தும் இணையம், மின்னஞ்சல், புலனம், செயலி, தொலைபேசி ஆகிய அனைத்தின் வழியாகவும் கிடைக்கச்செய்தல்.

3. தமிழ்ப் பெயர்கள் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் வைத்து மாவட்ட அளவில் அங்குள்ள தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து தரமான பரிசுகள் வழங்குதல்.

4. தமிழ்ப் பெயர்கள் குறித்த குறும்படப் போட்டி அறிவித்து ஆண்டுதோறும் விருது வழங்குதல்.

5. உலகின் அனைத்து தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளுக்கு, தமிழ்ப் பள்ளிகளுக்குக் கடிதம் எழுதி தொடர்ந்து தமிழ்ப் பெயர்கள் வைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் சிறப்பிக்கப் பல்வேறு புதிய சிந்தனைகளைப் பகிர்ந்து, முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துதல்.

6. சோதிடத்தில் நம்பிக்கை உடையவர்களுக்கு தமிழில் சோதிடம் நன்கு கற்றுத் தேர்ந்த தமிழ்ப் பற்றுடைய வானவியலை அடிப்டையாகக் கற்ற சோதிடர்களைக் கொண்டு தமிழில் பெயர் வைப்பதன் பலனை மக்களுக்கு அறியச்செய்தல், அவர்கள் விரும்பும் எழுத்தில் தமிழ்ப்பெயர் பட்டியலை வழங்கும் சேவையை வழங்குதல்.

7. திரைப்படத்தில் அனைத்துக் கதை மாந்தர்களுக்கும் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் தமிழ்த் திரைப்படங்கள் வணிக வெற்றிபெற இயக்குநர், தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தி, படத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாராட்டுக் கடிதம் அனுப்புதல், விருது வழங்கிச் சிறப்பித்தல்.

8. புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தமிழ்ப்பெயர் வைத்த, திருக்குறள் முற்றோதல் முடித்த, வேறு பல திறமைகள் உடையவர்களை அடையாளம் கண்டு, ஆண்டுக்கு ஒருவரை தங்கள் நாட்டில் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து அங்குள்ள மாணவர்களுடன் உரையாட, உணர்வை ஊட்ட வாய்ப்பு ஏற்படுத்துதல்.

9. தமிழ்ப்பெயர்கள் வைப்பதை அறிவார்ந்தவர்கள் செய்யும் அடையாளம் சுமந்த பெருமைக்குரிய செயலாக மக்களிடம் விழிப்புர்ணர்வை ஏற்படுத்துதல்.

10. பொது அறிவிப்புச் செய்து, தமிழ் உணர்வு உள்ளவர்கள், பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ள அழகிய தமிழ்ப்பெயர்களை இணையத்தில், செயலியில் சரிபார்த்து, நம் பட்டியலில் இல்லாதவற்றைத் தாங்களே முன்வந்து பதிவுசெய்யும் ஒரு ஒருங்கிணைப்புப் பணியை முன்னெடுத்தல்.

by Swathi   on 08 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd  நிறுவனத்தை வாழ்த்துவோம்.. தமிழ் மொழியில் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக தன் கடையில் பதாகையை வைத்திருக்கும் சிங்கப்பூர் Madras Jeweller Sdn. Bhd நிறுவனத்தை வாழ்த்துவோம்..
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - ஒருங்கிணைப்பு , அறிவுரைஞர் குழு
உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - அறிமுகம் உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - அறிமுகம்
தமிழைத் தமிழாய் பேசுவோம்! கையேடு தமிழைத் தமிழாய் பேசுவோம்! கையேடு
வட அமெரிக்காவில் தொடங்கப்படும் தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் - தொடக்க விழா வட அமெரிக்காவில் தொடங்கப்படும் தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் - தொடக்க விழா
தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தொடக்கவிழா - மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் வாழ்த்து தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தொடக்கவிழா - மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம் வாழ்த்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.