LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    வலைத்தமிழ் சேவைகள்-Services Print Friendly and PDF
- உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் (Tamil Baby Name )

உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம் - அறிமுகம்

தமிழ்ப்பெயர்கள் வைப்பது நாளும் குறைந்துவரும் சூழலில், அதை ஆராய்ந்து தீர்வுகாண ஒரு தனி கவனத்துடன் செயல்பட வரும் சூன் 10 அன்று "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்" என்ற அமைப்பு தொடங்கப்படவிருக்கிறது.
 
வலைத்தமிழ் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ப்பெயர்களைத் தொகுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக தமிழியக்கத்தின் சீரிய முன்னெடுப்பில் "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை" நூலாகக் கொண்டுவந்து அதை உலகெங்கும் பரப்புரை செய்துவருகிறோம். தொடர்ந்து புதிதாக தொகுக்கப்படும் பெயர்கள் அந்நூலில் சேர்த்து நூலாக கொண்டுசென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
 
மேலும், தமிழியக்கம் , தமிழ் எழுச்சிப்பேரவை உள்ளிட்ட தமிழ்ப்பெயர்களில் கவனம் செலுத்தும் பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் குழந்தைப் பெயர்களைத் தேடுபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் கிடைக்கும்வண்ணம் தனி கவனம் செலுத்த, தமிழ்ப் பெயர்களுக்கு என்று ஒரு சிறப்பு தொலைபேசி பயன்பாட்டு எண் அறிவித்து, ஒரு முழுநேர பணியாளருடன் எந்நேரத்திலும், உலகின் எந்த நாட்டிலிருந்தும் இணையம், மின்னஞ்சல், புலனம், செயலி, தொலைபேசி.நூல் ஆகிய அனைத்தின் வழியாகவும் எளிமையாகக் கிடைக்கச் செய்வதும், தமிழ்ப்பெயர் வைக்காததற்கு காரணம் இல்லாமல் செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும். தொடர்ந்து தூய தமிழ்ப்பெயர்களை தொகுக்கவும், புதிய பெயர்களை தமிழறிஞர்களைக்கொண்டு உருவாக்கி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்காக "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்" என்ற அமைப்பு நாளை சூன் 10, காலை 8:45 முதல் மாலை 5 மணிவரை உலகத்தமிழ்க் காப்பு கூட்டியக்கம் நடத்தும் நாமக்கல் -இராசிபுரம் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்படவிருக்கிறது. இதற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர்.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமைப்பொறுப்பேற்கவிருக்கிறார்கள்.
 
இதை அழைப்பாக ஏற்று வாய்ப்புள்ளவர்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும், இதில் ஆர்வமுள்ளவர்கள் , வாழ்த்தவிரும்புபவர்கள் BabyName.ValaiTamil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் மேலான கருத்துகளை, ஆலோசனைகளை எழுதலாம்.
by Swathi   on 08 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
34000 பெண் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு  வந்துசேர்ந்தது 34000 பெண் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வந்துசேர்ந்தது
'திருக்குறளில் திரட்டிய தீந்தமிழ்ப்பெயர்கள் 'திருக்குறளில் திரட்டிய தீந்தமிழ்ப்பெயர்கள்" என்ற நூற்றுக்கணக்கான திருக்குறள் சார்ந்த குழந்தைப் பெயர்களை தொகுத்து அனுப்பினார்.
தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம். தமிழ் வளர்ச்சியில் வலைத்தமிழின் கவனம்.
வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது? வலைத்தமிழ் சேவைகள் எப்படி திட்டமிடப்படுகிறது?
பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages பிப்ரவரி 11-ம் தேதி திருக்குறள் ஐம்பெரும் விழாவில் Thirukkural Translations in World Languages" நூல் வெளியீடு
தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்.. தூய தமிழ்ப்பெயரை நம் பிள்ளைக்கு சூட்டுவோம். தமிழ் அடையாளம் காப்போம்..
தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் தமிழைப் பிறமொழி கலப்பில்லாமல் பேச - தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்
தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது.. தமிழைத் தமிழியாய்ப் பேசுவோம் - தமிழர்களின் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், பிறமொழி சொற்றொடர்களைத் தொகுக்கிறது..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.