அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு
இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை
நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு.தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில், அகத்தியர், லோபமுத்திரை திருக்கல்யாணம்
நடக்கிறது. அன்று காலையில் லோபமுத்திரை மட்டும் கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஓரிடத்தில் தவம் இருக்கிறாள். மாலையில் அகத்தியர் அங்கு
சென்று காட்சி கொடுத்துவிட்டு, பின்பு இருவரும் கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவில் இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். சிவன்
கோயில்களில் நடப்பதைப்போன்றே, இந்த வைபவம் இங்கு நடக்கிறது. இந்த நேரத்தில் அகத்தியரை தரிசித்திட, திருமண பாக்கியம் கிடைப்பதாக
நம்பிக்கை. திருக்கார்த்திகையில் அகத்தியர், லோபமுத்திரை இருவர் முன்னிலையிலும் சொக்கப்பானை கொளுத்தும் வைபவமும் உண்டு.
அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு. தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில், அகத்தியர், லோபமுத்திரை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் லோபமுத்திரை மட்டும் கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஓரிடத்தில் தவம் இருக்கிறாள். மாலையில் அகத்தியர் அங்கு சென்று காட்சி கொடுத்துவிட்டு, பின்பு இருவரும் கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவில் இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். சிவன் கோயில்களில் நடப்பதைப்போன்றே, இந்த வைபவம் இங்கு நடக்கிறது.
இந்த நேரத்தில் அகத்தியரை தரிசித்திட, திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. திருக்கார்த்திகையில் அகத்தியர், லோபமுத்திரை இருவர் முன்னிலையிலும் சொக்கப்பானை கொளுத்தும் வைபவமும் உண்டு. |