இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் கத்தி.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ஒரு பாடலின் படபிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது. இந்த படபிடிப்பும் சமீபத்தில் நடந்து முடிந்தது.
தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாலில் விஜய்யுடன் தோன்றி சில ஸ்டெப் ஆடியதைத் தொடர்ந்து கத்தி படத்தில் அனிருத்தும் விஜய்யுடன் இணைந்து சில ஸ்டெப் போட்டு விஜய்யுடன் நடனமாடி, அவருடன் நடிக்க வேண்டும் என்ற தனது நடிப்பு தாகத்தை தீர்த்துக்கொண்டுள்ளாராம்.
ஏ.ஆர்.முருகதாஸ், ஏற்கனவே விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலுக்கு வந்து செல்வதைப் போன்று கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படம் வரும் தீபாவளியையொட்டி திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
|