|
||||||||
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! |
||||||||
![]() டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! December 26, 2013 at 12:53am
மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார். தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள்.
அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார். அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி. 1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது. தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.
அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர். கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான். நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.
அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார். ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள்.
டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார். அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார். 1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார். டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள்.
மானுட விடுதலைக்கு, பெண் விடுதலையை தலித் விடுதலையை முன் நிபந்தனைகளாகக் கொண்ட அன்னை மீனாம்பாள், பெண்களுக்கு மட்டுமல்ல தலித் மக்களுக்கும் தலைவராக வாழ்ந்தார். தமிழ் வள்ளலாகவும், ஆதிதிராவிடர் மகாஜனசபாவின் புரவலராகவும், முதன் முதலில் கப்பலோட்டிய தமிழராகவும் புகை உச்சியில் இருந்த கோடீஸ்வரப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட மதுரைப்பிள்ளையின் பேத்திதான் அன்னை மீனாம்பாள். அன்னை மீனாம்பாள், 1902 இல் பிறந்தார். அன்னை மீனாம்பாளின் தந்தை வாசுதேவப் பிள்ளை தலித் சமுதாயத்திலியிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதி. 1918இல் அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் ஏற்பட்டது. தலைவர் சிவராஜ் அவர்கள் துணைவராக வாய்க்கபெற்றார்.
அன்னை மீனாம்பாள், இளம் வயதிலேயே எழும்பூர் நீதிமன்றத்தில் பதிமூன்று ஆண்டு காலம் கவுரவ நீதிபதியாக இருந்தவர். கவுரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வில், உங்கள் கணவர் வழக்குரைஞராக இருந்து நீங்கள் நீதிபதியானால் அவர் வாதாடுகிற பக்கம் தீர்ப்புச் சொல்ல மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அன்னை மீனாம்பாள் கணவர் என்பது வீட்டோடுதான். நீதி மன்றத்தில் அவர் வழக்குரைஞர், நான் நீதிபதி. கணவன் மனைவி உறவு அங்கே கிடையாது என்று ஆளுமையுடன் பதிலளித்தார். நீதிபதி பொறுப்பின் போது உலகத்தையும், வாழ்க்கையையும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் பெருமளவு புரிந்து கொண்டார்.
அன்னை மீனாம்பாள் சுயமரியாதை இயக்க மாநாடுகளில் வரவேற்புக் குழுத்தலைவராக, திறப்பாளராக, தலைவராக, சிறபுரையாளராக முக்கியத்துவம் பெற்றியிருந்தார். ஈ.வெ. ராமசாமிக்கு 20/11/1938 இல் தமிழக பெண்கள் மாநாட்டில் நாயக்கர் பட்டத்தை ஒழித்து பெரியார் என்ற மதிப்பு மிக்க பட்டத்தை தந்தவர் அன்னை மீனாம்பாள். டாக்டர் அம்பேத்கர் அன்னை மீனாம்பாள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தையாருடன், டோகோட்ரோ அம்பேத்கர் பம்பாயில் பேசிக்கொண்டு இருந்த போது "சென்னையில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்" என்றார். அதற்கு முத்தையா அவர்கள் சென்னையிலா? அதுவும் உங்களுக்கா? என்று ஆச்சரியப்பட அதற்க்கு அண்ணலும் ஆமாம், அவர் பெயர் மீனாம்பாள். தலைவர் சிவராஜின் துணைவி என்று விளக்கமாகச் சொன்னார். 1942-இல் அன்னை மீனாம்பாள் தலைவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் தங்கியிருக்கையில் டாகடர் அம்பேத்கர் தன கைவண்ணத்தில் அற்புதமாகச் சமைத்து அவரே அன்போடு பரிமாறினார். டாக்ற்றோர் அம்பேத்கர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்த வைத்தவர் அன்னை மீனாம்பாள். |
||||||||
by Swathi on 27 Dec 2013 5 Comments | ||||||||
Tags: Meenambal Sivaraj Sivaraj Meenambal Annai Meenambal Sivaraj அன்னை மீனாம்பாள் சிவராஜ் மீனாம்பாள் | ||||||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|