LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- தமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants)

போர்க்களம் களம் கண்ட காமராசர்!!

1965 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான்போர் மூண்டது. நேருவின் மறைவிற்குப்பின் இந்தியத் தலைமை பலவீனமாக இருக்கும்,எனவே படையெடுப்பின் மூலம் மிரட்டிப்பணிய வைக்கலாம் எனப் பாகிஸ்தானின்இராணுவச் சர்வாதிகாரி அயூப்கான்கருதினார்.ஆனால் பிரதமர் லால்பகதூர், காங்கிரஸ்தலைவர் காமராசர் ஆகியோர்இணைந்து காட்டிய மன உறுதி உலகைவியக்கவைத்தது.பகைவரைத் திகைக்க வைத்தது.பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில்அமைந்திருந்த போர் முனைக்குச்சென்று வீரர்களைச்சந்தித்து உற்சாகமூட்ட காமராசர்விரும்பினார். அவர் விருப்பத்தை அறிந்தபிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும், குடியரசுத் தலைவர்இராதா கிருஷ்ணனும் திடுக்கிட்டு அவரைத்தடுக்க முயன்றனர்.ஆனால் கர்மவீரரோ பிடிவாதமாக இருந்தார்.வேறு வழியில்லாமல் பிரதமர் அவர்விருப்பத்திற்கு இணங்கினாலும், காமராசரைப்பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகளைச்செய்யுமாறு இராணுவத்திற்கு ஆணையிட்டார்.களத்திற்குக் காமராசர் செல்லுவது மிகஇரகசியமாக வைக்கப்பட்டது. பஞ்சாபில்எல்லைப் பகுதியில் இரு தரப்புப் படைகளும்எதிரெதிரே அணிவகுத்து நின்றன.எல்லைப் பகுதியில் காவல் காக்கும்நமது வீரர்களைச் சந்திக்க வேண்டும் எனகாமராசர்கூறியபோது படைத்தளபதி திடுக்கிட்டு விட்டார்.ஐயா! வெள்ளை வேட்டி - சட்டையுடன்தாங்கள் போர் முனைக்குச் செல்வது அபாயத்தை வரவழைப்பதாகும். எதிரிகளின் துப்பாக்கிக்குச் சுலபமானகுறியாகும். எனவே அதைத்தவிர்ப்பது நல்லது எனப் பணிவுடன் எடுத்துக்கூறினார்.அதற்குத் தலைவர் செவி சாய்க்காததைக் கண்ட அவர் அப்படியானால் கரும் பச்சை நிறக்கால் சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.அது கேட்ட தலைவர் கலகலவென நகைத்தார்.என்னை வேஷம் போடச் சொல்லுகிறீர்களா?அது என்னால் முடியாது என மறுத்தார்.வேறு வழியின்றிக் காமராசர் சென்றவண்டியில் படைத் தளபதியும் ஏறிக்கொண்டு போர் முனை சென்றனர்.காமராசரைச் சற்றும் எதிர்பார்க்காத வடநாட்டு வீரர்கள் "காலா காந்தி!, காலா காந்தி!" (கறுப்பு காந்தி)எனக் கூவி மகிழ்ந்தனர்.

அவரைச்சூழ்ந்து ஆரவாரித்தனர்.இந்தியாவின் வரலாற்றில் அரசுப்பதவி எதிலும் இல்லாத ஒரு தலைவர் தமது உயிரைத்துச்சமாக மதித்துப் போர்க்களம்சென்று திரும்பியது இதுதான் முதலும்கடைசியுமாகும்.அவருக்கு முன்போ அவருக்குப்பின்போ யாரும்இவ்வாறு துணிந்து சென்றதில்லை...

by Swathi   on 25 Jun 2017  1 Comments
Tags: Kamarajar   Kamaraj   காமராசர்   காமராஜர்   பெருந்தலைவர் காமராஜர்   PerunThalaivar Kamaraj K   காமராஜர் வரலாறு  
 தொடர்புடையவை-Related Articles
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
விவசாயம் பேசுவோம் - 7 : திரு.A.C.காமராஜ்  (Let's Talk Agriculture - Prof. A.C.Kamaraj) விவசாயம் பேசுவோம் - 7 : திரு.A.C.காமராஜ் (Let's Talk Agriculture - Prof. A.C.Kamaraj)
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !! டிஜிடல் தொழில்நுட்பத்தில், புதிய காட்சிகளுடனும் மீண்டும் வெளியாகிறது காமராஜ் திரைப்படம் !!
கருத்துகள்
26-Jun-2017 13:11:29 யுவராஜ் said : Report Abuse
அய்யா கர்மவீரர் காலா காந்தி காமராசர் வாழ்ந்த மண்ணில் நானும் பிறந்து இருக்கேனு நினைச்சாலே கெத்தா (கர்வமா)இருக்கு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.