LOGO
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல்வாதிகள் Print Friendly and PDF
- இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans )

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய விடுதலை போராட்டத்தில் ஒரு அதிரடி நாயகன் !!!

விடைகான முடிவுற்ற ஒரு விடுதலை போராளியின் பிறந்த தினம் இன்று. 

 

ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான். 

 

அப்படியான ஒரு விடுதலை வீரன் தான் நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும் விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஆவார். 

 

யார் இந்த நேதாஜி.... 

 

அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி .

 

படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள் 

 

ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு விடுதலை வீரன், கொள்கை வீரன் என்று. 

 

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார். 

 

35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.

 

42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார். 

 

44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார். 

 

இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன். 

 

தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன். 

 

தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.! 

ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்றிய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன. அன்றைய கால கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர் செயற்பட்டார்.இதை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர் தனது பாதையை மாற்றியதாக இல்லை. 

 

1943 அக்டோபர் மாதம் 21ம் தேதியன்று காலையில் சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி 

 

“நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது” என்று முழங்கினார். 

 

இதனை தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதியில் இருந்து நவம்பர் 18ம் தேதிக்குள் 

 

ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அதற்கு அத்திவாரமாக ஏற்கனவே இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார்.பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார். 

 

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்னிரண்டு வயதிற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள். 

 

அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும் ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர் உறுவாக்கியிருந்தார்.இதனை அவதானித்த ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை நேதாஜியிடமே கையளித்தது. 

 

1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார். 

 

1944 மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின் படைகள் கால் பதித்தது.தொடர்ந்து நிலங்களை கைப்பற்றியபடி முன்நேறிய இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.படைகள் மீண்டும் பர்மாவிற்கு பின்வாங்கின,இருந்தும் அந்த தோழ்வியை அவர் இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம் தோற்றாலும் அடுத்துவரும் வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும் என்றார். 

 

1945 ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி ஜப்பானுக்கு போகும் இவர் பயணம் செய்த விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால் இவர் மரணமடைந்ததாக இன்று வரை நம்பப்படுகிறது. 

 

இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை...

 

1) தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

2) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?...

 

3) CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...

 

4) 1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்!

 

5) பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.

 

6) ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!!

 

7) 1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது.

 

8) நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

 

9) விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்த நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?...

 

10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ... இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றிய தகவல்களோ ஏனில்லை?...

by Swathi   on 22 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன் கடின உழைப்பால் அமெரிக்க அதிபரான ஜோபைடன்
போர்க்களம் களம் கண்ட காமராசர்!! போர்க்களம் களம் கண்ட காமராசர்!!
காமராஜரின் கண்ணியம் !! காமராஜரின் கண்ணியம் !!
கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !! கர்ம வீரர் காமராசர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் !!
ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !! ஆபிரகாம் லிங்கன் - அடிமைத்தனத்தை ஒழிக்க வந்த அமெரிக்க ஜனாதிபதி !!
டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்! டாக்டர் அம்பேத்கரின் தங்கை அன்னை மீனாம்பாள் சிவராஜ்!
தோழர் நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணு
எல். கணேசன் எல். கணேசன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.