பொறியியல் பட்டதாரியான நான் பிறந்தது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர்மாவட்டம் இடையிருப்பு கிராமம் நான் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடண் வேலையில் இருக்கிறேன் அது போதுமானது இருந்தாலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் எந்த ஒரு நாடு வேளாண்மையை கைவிட்டதோ அந்த நாடு முன்னேற்றம் அடையாது என்பதை கருத்தில் கொண்டு விவசாயத்தில் முழுகவணம் செலுத்தி எனது பணியை பார்த்துகொண்டே எனது கி.ராமத்தில் விவசாயத்தில் முழு மூச்சாய் இறங்கினேன்.
நான் தினமும் வேலைசெய்ய வேண்டியது என்பதில்லை அதற்காக வாரம் ஒரு முறை திருச்சியிலிருந்து 160 கிமீ சென்று விவசாய பணிகளை பார்வையிடுவேன் எனக்கு உதவியாக கிராமத்தில் ஒருவரை நியமித்து அவருக்கு ஒரு மொபைல்போன் வாங்கியும் அவர் மன நிறைவுகேற்ப சம்பளமும் கொடுத்து நான் பணியில் இருக்கும்போது செல் போன் மூலம் ஆலோசனை வ ழங்கி 14 ஆண்டுகளாக. விவசாயம் செய்து வருகிறேன் ' அந்த கி.ராமத்தில் முதலில் நட்டதும் நான் தான் முதலில் அறுவடை செய்ததும் நான் தான் 2014,2015ல் கோ50 என்ற ரகத்தை நட்டு சுற்று வட்டகிராமத்திலே அதிக மகசூல் எடுத்தது நாண்தான்.
அதேபோல் இந்த வருடமும் நான் தான் அதிக மகசூல் எடுத்தேன் நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் விவசாயம் நம் நாட்டிற்கு முதுகெலும்பு நம்மிடம் ஆசை வார்த்தை கூறி விவசாய நிலங்களை விலைநிலங்களாக மாற்றுவார்கள் மாறிவிடாதீர்கள் தண்ணிய இல்ல எப்படி விவசாயம்ப ன்னபோற என்று கேட்டு பிளாட் போட்டு விற்று ஒவ்வொருவீட்டிற்கும் போர் போடுவார்கள் அப்போதுமட்டும் எப்படி தண்ணீர் வரும் படித்தால் விவசாயம் பார்க்க முடியாது என்பதில்லை என்பதை உணர்த்தான் இதை பதிவிடுகிறேன் நிலங்கள் வீடு ஆயின களங்கள் காடு ஆயின விவசாயி விண்ணோடு போறான் விவசாயம் மண்ணோடு போகி விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ -உண்மை இன்று புரியாது.
E.VENKATESAN IDAIYIRUPPU VILLAGE TANJORE DISTRICT rthiruu@yahoo.com 9047783620
|