பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமலேயே பலர் உள்ளனர். அதனால் பல தடவை அலைந்து மிகவும் சிரமப்படுகிறார்கள். மக்களின் சிரமங்களை அறிந்து இந்த தகவலைத் தொகுத்து வழங்குகிறோம்
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), மதிப்பெண் பட்டியல் (10,12) ஜாதி,வருமானச் சான்றிதழ்,முதல் பட்டதாரி பத்திரம்,குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்விச் சான்றிதழ்தொலைபேசி எண் (உறுதிப்படுத்தும் ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), இவை அனைத்தும் அசல் மற்றும் நகல் அவசியம்.
ஜாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, ஆதார் அட்டை,மாற்றுச்சான்றிதழ் (டிசி) அல்லது தந்தையின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தந்தையின் ஜாதிச் சான்றிதழ், புகைப்படம்,தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), இவை அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்
வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று, நிரந்தர கணக்கு எண் (பான்கார்டு எண்),தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி வருவதற்கு வசதியாக),புகைப்படம், அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை.
இருப்பிடச் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, ஆதார் அட்டை,தொலைபேசி எண் (உறுதிப்படுத்த ஓடிபி எண் வருவதற்கு வசதியாக), புகைப்படம், இவை அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவைப்படும்.
மேலும் அந்தந்த ஊர்களில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் இந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் நீங்கள் உங்களுடையஅலைச்சல்களைக் குறைக்க முடியும்.
|