|
||||||||
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! |
||||||||
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
2009ஆம் ஆண்டு உலகின் முதல் பல்முனைப்படுத்தப்பட்ட(Decentralised) கிரிப்டோகரன்சியாகிய பிட்காய்னின் வரவு ஆராய்ச்சி கட்டுரைகளில் மட்டுமே தவழ்ந்து வந்த கிரிப்டோகரன்சியை நிஜ உலகிற்கு அறிமுகம் செய்துவைத்ததது. கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் தனிநபர் பணபரிவர்தனைகளை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் மாற்றுவது தான். வெளிவந்த சிறிது காலத்திலேயே பிட்காய்னின் மதிப்பு விண்ணை தொட்டுவிட்டது. வெறும் 11 வருடங்களில் ஏறத்தாழ 19 மில்லியன் பிட்காய்ன்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அதுமட்டுமல்லாமல் தற்போது 1500 கிரிப்டோகரன்சிகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது!
எப்போது ஒரு பொருள் புதியதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அப்போதே அதன் சாராம்சங்களை கொண்ட அதே போன்ற பொருட்கள் சந்தைக்கு வருவது வியக்கத்தக்கதல்ல. பிட்காய்னும் அதற்கு விதிவிலக்கல்ல. பிட்காய்ன் வெளிவந்து இரண்டு வருடங்களுக்குள்ளாகவே எதிரியம், லைட்காயின், பொல்காடாட் போன்ற பல நாணயங்கள் வெளிவர துவங்கிவிட்டன. ஆனால் 500$ பில்லியன் சந்தைமதிப்பு கொண்ட பிட்காய்னின் வளர்ச்சியை பார்க்கும்போது தினமும் புதுப்புது நாணயங்கள் சந்தைக்குள் வருவதும் ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை.
பிட்காய்னை போலவே பல கிரிப்டோகரன்சிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்புள்ளது. அவற்றில் ஒருவகை தான் மீம் காய்ன். மீம் காய்ன் அதன் பெயரிற்கு ஏற்றாற்போல் இணையத்தில் உலவும் மீம்ஸ் மற்றும் ட்ரெண்டிங் காமெடிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மீம் காய்னின் வகையறாவை சேர்ந்த டோஜ்காய்ன் மற்றும் அதன் வழித்தோன்றலாகிய ஷீபா இனு, டோஜ்லோன் மார்ஸ் போன்றவை கடந்த சில வருடங்களாக பிரபலமாக உள்ளன. பிட்காயின் போன்றல்லாமல் மீம் காய்ன்கள் அளவற்ற உற்பத்தியை கொண்டதாக உள்ளன. மீம் காய்ன்களின் ஆதரவு தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளதால் பலர் புதிய புதிய மீம் காய்ன்களை உருவாக்கிய வனண்ணம் உள்ளனர்.
பிட்காய்ன், எதிரியம், டோஜ்காய்ன் போன்ற பிரபலமான கிரிப்டோகரன்சிகலள் உலக அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டவைகளாகவே உள்ளது. அனால் பொதுவான கிரிப்டோ சந்தையின் நிலை என்னவென்று தெரியுமா?. அதையும் மக்கள் ஏற்றுக்கொண்டு தான் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான முக்கிய காரணமாக கிரிப்டோகரன்சியை வாங்கி விற்பதில் கிடைக்கும் லாபத்தை கூறுகின்றனர். அத்துடன் சமீப காலங்களில் பல சில்லறை விற்பனை நிறுவனங்கள் கிரிப்டோகரன்சியை தங்கள் நிறுவனங்களில் பரிவர்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டனர்.
பெருநிறுவனங்கள் பல தங்கள் வாடிக்கையாளர்களிடம் பிட்காய்ன் மூலமாக சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கின்றனர். மேலும் U.S., Canada, Australia மற்றும் சில அரசுகள் கிரிப்டோகரன்சி பரிவர்தனைகளை சட்டப்பூர்வ பரிவர்த்தனை சாதனமாக அறிவித்துள்ளது கிரிப்டோகரன்சியின் வளர்ந்து வரும் அங்கீகாரத்தை காட்டுகிறது.
கிரிப்டோகரன்சி இவ்வளவு சிறப்பான வளர்ச்சியை அடைந்து விட்ட போதிலும் பெரும்பான்மை மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் நாணயத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சியை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டவே செய்கின்றனர். கிரிப்டோகரன்சி குறித்த ஞானமும் பரிச்சயமும் குறுகிய வட்டத்திற்கு உள்ளாகவே இருப்பதும் கிரிப்டோகரன்சி மீதான அச்சத்திற்கு ஒரு காரணம். நல்வாய்ப்பாக Play2Earn வகை ஆன்லைன் விளையாட்டுகள் இந்த நிலையை மாற்ற பெரிதும் உதவி வருகின்றன. அந்த வகையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள CoinFantasy, உலகில் முதல் பல்முனைப்படுத்தப்பட்ட ஃபாண்டஸி டிரேடிங்க் கேம், பயனர்களை கேம் ஆடுவதன் மூலம் பணம் ஈட்டவும் அதே நேரத்தில் கிரிப்டோ சந்தையை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
|
||||||||
by CoinFantasy on 15 Jun 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|