|
||||||||
நவீனத் தொழில்நுட்பத்தில் வரும் பான் 2.0 கார்டு |
||||||||
நிரந்தரக் கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும்தான் என்ற நிலை மாறிவிட்டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் போன்ற முதலீடுகளுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வருமான வரிதாரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்தபோதிலும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பயனர்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைப்பதற்கும் வரிவசூல் தொடர் கண்காணிப்பு அமைப்புக்கும் இது உதவும். இதற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள பான் கார்டு வைத்திருப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் புதிய பான் கார்டுக்கு புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தற்போதைய செல்லுபடியாகும் பான் கார்டுகள் வைத்திருப்பவர்கள், புதுப்பித்தல் அல்லது திருத்தம் கோரி, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதனால் உங்கள் நிரந்தரக் கணக்கு எண்ணை மாற்றாமலேயே, பான் 2.0 இன் கீழ் QR குறியீட்டைக் கொண்ட புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனிநபர் அடையாள அட்டை என்ற சமூகப் பாதுகாப்பு எண் (SSN), தனிப்பட்ட வரி செலுத்துவோர் எண்(UTR) போன்றவை அனைத்து விதமான காப்பீடு, பணப்பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு தனிநபரின் அனைத்து விதமான நிதி, மற்றும் அது சார்ந்த பரிவர்த்தனைகள், வருமான வரி என அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுகிறது.
அதேபோல், பான் 2.0 திட்டம் தடையற்ற டிஜிட்டல் செயல்முறைகள் மற்றும் வலுவான தரவு பாதுகாப்புடன் வரி செலுத்துவோர் பதிவை மேம்படுத்த உலகளாவிய தரநிலைகளுடன் செயல்படுத்தப்படுகிறது.
உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவின் வரி முறையை நவீனமயமாக்கி ஒருங்கிணைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் திறமையான அனுபவத்தைப் பெறலாம். இந்த முன்முயற்சி, சேவைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், தரவு பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, சிறந்த வரி இணக்கம் மற்றும் நிர்வாகத்தை வளர்க்கும் என நம்பப்படுகிறது.
|
||||||||
by hemavathi on 09 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|