|
|||||
தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் சொல்லிச் சென்ற பாடம் |
|||||
![]() தலைநகர் டெல்லி பூங்காவில் புலிக்கூண்டில் தவறிவிழுந்த மெக்சூத் என்ற அந்த வாலிபர் விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும். இவரது மொழி புரியாத அந்த புலி வாலிபரின் கழுத்தை பிடித்து இழுத்துச் சென்று கொன்றுவிட்டது . கொல்லப்பட்ட மெக்சூத் 22 வயது வாலிபர் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவரது கர்ப்பிணி மனைவி கொல்கத்தாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நேரில் பார்த்து சத்தம்போட்டுக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ஒரு உயிர் பழியை தடுத்திருக்க முடியும். பதட்டத்தில் இருந்த அந்த வாலிபருக்கு 18 அடி அருகில் இருந்தவர்கள், புகைப்படம், காணொலி என்று எடுத்தவர்கள் சில தகவல்களை சொல்லி அவரை காப்பாற்றக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும். இந்த மனதை உலுக்கும் சம்பவம் மக்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நம் வீட்டில், பள்ளிகளில் இதுபோல் ஓரு அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். சரி, இம்மாதிரி மிருகங்களிடம் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது? ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் என்ன பயன்?
இந்தியக் கல்வித் தந்தைகளே! எங்களுக்கு அமெரிக்காவிலும் , ஆஸ்திரேலியாவிலும் என்ன நடக்கிறது என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது? விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை? மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி? குழந்தைகளை வளர்ப்பது எப்படி? இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி? போன்று கற்றுக்கொள்ள எவ்வளவோ பாடங்கள் இருக்கிறது..
|
|||||
by Swathi on 26 Sep 2014 4 Comments | |||||
Tags: Tiger Attack Delhi Tiger Attack White Tiger Delhi Zoo Incident Maqsood Death Delhi Zoo Maqsood Death வன உயிரியல் பூங்கா | |||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|