LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.

எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவு நாளை (பிப். 7) முன்னிட்டு, படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

 

விருதுக்கான நூல்களை மார்ச் 31-ம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயந்தன் சிந்தனைக் கூடல் மற்றும் கோடு ஓவியக் கூடம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எழுத்தாளர் ஜெயந்தன் மறைந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் தன் எழுத்துகளால் வாசகர் நினைவுகளில் உயிர்ப்புடன் இருக்கிறார். அவரது எழுத்துகளை இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் `ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது' ஏற்படுத்தப்பட்டது. மணவை செந்தமிழ் அறக்கட்டளையும், ஜெயந்தன் சிந்தனைக் கூடலும் இணைந்து முதல் 7 ஆண்டுகள் சிறந்த நூல்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்து வழங்கின.

 

தற்போதும் இலக்கிய உலகில் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்குத் தனி இடம் உண்டு. சில தனிப்பட்ட காரணங்களால் இடையே 5 ஆண்டுகள் விருதுகள் வழங்கப்பட வில்லை. இலக்கிய நண்பர்களின் வேண்டுகோள், ஆர்வம் காரணமாக மீண்டும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்வை, ஜெயந்தன் சிந்தனைக் கூடலும், கோடு ஓவியக் கூடமும் இணைந்து, புது உற்சாகத்துடன் நடத்த முடிவு செய்துள்ளன.

 

4 பிரிவுகளில் விருது

 

2023-ல் பிரசுரமான நூல்கள் விருதுப் பரிசீலனைக்கு வரவேற்கப்படுகின்றன . சிறுகதை, நாவல் (குறுநாவல் அல்ல), கவிதை, நாடகம் ஆகிய 4 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு ரூ.10,000 விருது வழங்கப்படும். நூல்களை அனுப்ப விரும்பவோர், 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான நூல்களில் 3 பிரதிகளை "சீராளன் ஜெயந்தன், எண். 9-பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக் கரணை, சென்னை-600100" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு kodulines@ gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம். வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் புத்தகங்களை அனுப்பிவைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நூல்க ளின் பெயர்கள் இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும். நடுவர்களின் பெயர்கள், முடிவுகளுடன் வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 09 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.