|
||||||||
10 வயதுக்கு மேலான சிறுவர்கள் சுயமாக வங்கிக்கணக்கைக் கையாளலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு |
||||||||
10 வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கைக் கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் "எந்த வயதைச் சேர்ந்த சிறாருக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையைப் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கைக் கையாளலாம்.
அவர்கள் சுயமாகச் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகளை வழங்கலாம். இணைய வங்கி வசதியையும் வழங்கலாம். இது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது.
சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.
சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
|
||||||||
by hemavathi on 25 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|