|
|||||
குக்கூ - திரை விமர்சனம் !! |
|||||
![]() இயக்கம் : ராஜு முருகன் நடிகர் : தினேஷ் நடிகை : மாளவிகா, இசை : சந்தோஷ் நாராயணன் பார்வையற்ற நாயகன், நாயகியின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இந்த குக்கூ. இந்த கதை களத்தை மையமாக வைத்து இதைவிட அழகாக வேறு யாராலும் திரைப்படம் எடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். சரி வாங்க கதைக்குள் போவோம்...... படத்தில் பார்வையற்ற நாயகன், நாயகியாக வருகிறார்கள், அட்டகத்தி தினேஷும்(தமிழ்), மாலவிக்காவும்(சுதந்திரக்கொடி). இவர்களுக்குள் வரும் சின்ன சின்ன மோதல்கள் காதலாக மாறுகிறது. இருவரும் இணைந்து திருமணம் செய்து கொள்ள நினைக்கும் வேளையில் மாளவிகாவின் அண்ணன் தான் பட்ட கடனுக்காக வில்லனுக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறான். இந்நிலையில் தனது அண்ணனிடம் இருந்து தப்பிக்கும் நாயகி சுதந்திரக்கொடி ஒரு விபத்தில் சிக்குகிறார். இதன் பின் தமிழ் - சுதந்திரக்கொடியின் காதல் என்ன ஆனது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா, இல்லை சுதந்திரக்கொடியின் அண்ணன் சுதந்திரக்கொடியை வில்லனுக்கு திருமணம் செய்து வைத்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை. படத்தின் முதல் பாதியில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என மெதுவாக பயணிக்க, இரண்டாவது பாதியில் கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சை உருக வைக்கிறது. தினேஷ், மாளவிகா ஆகிய இருவருமே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது இயல்பான நடிப்பால் மாளவிகா ஒரு படி மேலே நிற்கிறார். தினேஷின் நண்பராக வரும் இளங்கோ என்ற கதாபாத்திரம் படத்தில் நகைச்சுவைக்கு ஆதாரமாக இருக்கிறார். எழுத்தாளராக சாத்தித்த ராஜு முருகன் இந்த படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் சாதித்துள்ளார். சந்தோஸ் நாராயணன் இசையில் பாடலும் பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றாற்போல் உள்ளது. மொத்தத்தில் குக்கூ பார்வையற்றோரின் உலகத்தை பறை சாற்றும் காதல் காவியம்...... |
|||||
by Swathi on 21 Mar 2014 1 Comments | |||||
Tags: குக்கூ Cuckoo Movie Cuckoo குக்கூ திரை விமர்சனம் குக்கூ விமர்சனம் குக்கூ பட விமர்சனம் குக்கூ சினிமா விமர்சனம் | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|