LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF

பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்

தோற்றம் - 7 பிப்ரவரி 1902

மறைவு - 15 ஜனவரி 1981

பிறந்த ஊர்- கோமதி முதுப்புரம் 

மாவட்டம் - திருநெல்வேலி 

 

மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் என அறியப்பட்டவர் தேவநேயப் பாவாணர் 

 

 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

 

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 

1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.

 

1926-ல் எசுந்தர் அம்மையாரை மணந்தார் தேவநேயர். அடுத்த இரு ஆண்டுகளில் எசுந்தர் மறைந்தார். இவர்களின் மகன் அழகிய மணவாள தாசன், வளர்ப்பு மகவாகத் தரப்பட்டார்.

 

மண வாழ்க்கை 

 

1930-ல் தேவநேயர், தன் தமக்கை பாக்கியத்தாயின் மகளான நேசமணியை மணந்தார்] நேசமணி அம்மையார் 27 அக்டோபர் 1963 அன்று மறைந்தார். இவ்விணையருக்கும் - நச்சினார்க்கினிய நம்பி,

சிலுவை தாங்கிய செல்வராசன்,

அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்,

மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி,

மணிமன்ற வாணன்,

பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் ஆகிய பிள்ளைகள் பிறந்தனர்.

 

பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.

 

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ் கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

 

பல்வேறு விருதுகள் 

 

தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

 

 ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.

 

கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

 

1947-வெள்ளிப் பட்டயம் "பெரியார்" ஈ. வெ. இராமசாமி, 1956-திராவிட மொழிநூல் ஞாயிறு,1964-ஜனவரி 12 தமிழ்ப்பெருங்காவலர் தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை), 1967-மொழிநூல் மூதறிஞர் மதுரை தமிழ் எழுத்தாளர் மன்றம், 1971 மே 5 'செந்தமிழ் ஞாயிறு' (பாரி விழாவில் வழங்கப்பெற்றது), குன்றக்குடி அடிகளார், 1979 ஜனவரி 15 'செந்தமிழ்ச் செல்வர்' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

 

தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.

by Kumar   on 16 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 24, சாயி சஞ்சனா நரேஷ், ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.