(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், சுகவான், தனவான் என வான் போல் உயர்ந்த நாணயமும், நானயமும் உடைய தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு, ஆவணி 27 இல் இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள் செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்க்க் காத்திருக்கிறீர்கள். 3, 5, 7 ஆகிய பாவங்களைப் பார்வை செய்வதால் இரு பாலருக்கும் தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பும், பாசமும் மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத் திகழும். சுற்றமும், நட்பும் ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். பொது வாழ்வில் பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு, நட்பும் பலப்படும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, பின்னர் இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். மகான்களின் தரிசனம் கிடைத்து லௌகீக வாழ்க்கை சிறக்கும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான வில்லங்கங்கள் ஒழிந்து உங்கள் கைக்கு வந்து சேரும். மாணவ மணிகளின் கல்வித் தரம் உயரும். குடும்பத்துடன் இனிய புனித பயணங்கள் மேற் கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.
குரு தனது 5 ஆம் பர்வையால் தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் வங்கிக் கடன்களில் இருத்த பொன் நகைகள் மீட்கப்படும். சிலரின் சொந்த வீட்டுக் கனவுகள் சீக்கிரமே நனவாகும். ஆய்வு தொடர்பான உயர் கல்வியில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களின் அறிவு விருத்தியாகி சிறப்பாக செய்து முடிப்பர். சகோதர வகையில் புதிய முயற்ச்சிகள் வெற்றி தரும். முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், தாய்க்குப் புதிய பயணங்களும் ஏற்படும்.
குரு தனது 7 ஆம் பார்வையால் 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்த்தி விருத்தி ஏற்படும். பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் தன வருமானம் வீடு தேடிவரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அரசியலில் உள்ளவர்கள் புதிய உயரிய பதவிகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் திறமைகள் வெளிப்பட்டு, பரிசுகள் பலபெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர் அதன் காரணமாக வீட்டில் சந்தோஷம் நிலவும்.
குரு தனது 9 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளின் உறவுகளில் பரஸ்பர சந்தோஷம் நிலவும். குடும்ப ஒற்றுமை ஓங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தந்தை வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டு ஒப்பந்தங்கள், பிராயாணங்கள் ஏற்படும்.
தனுசு இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில் நல்ல முன்னேற்றம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க வேலையும் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு நன்கு இருக்கும். வேலையில் ஊதிய உயர்வும் உத்யோக உயர்வும் கிட்டும் போட்டித் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பும் அதனால் வேலையும் கிடைக்கும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஊர்மாற்றமும் அமையும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். சிறு தொழில்கள் சுயதொழில்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள் சற்று லாபகரமாக இருக்கும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், அழகுசாதனத் துறைகள் சற்று சுமாராகவும் மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றமும் போக்குவரத்து தகவல் தொடர்பு, பத்திரிக்கை, கமிஷன், ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி போன்றவை லாபகரமாகவும் இருக்கும். இரும்பு எஃகு சுரங்கம் மற்றும் கனிமம் கப்பல் மீன்பிடித் தொழில்கள் நல்ல லாபகரமாகவும் அமையும். பங்குச்சந்தை ரியல் எஸ்டேட் அதிகக் கவனம் தேவை. தெருவோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் எழுச்சியுடன் விளங்கும்.
விவசாயம்
விவசாயம் சற்று சுமாரகவே இருக்கும். விளைச்சல் அதிகம் ஆகும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் சற்று லாபம் குறைந்து காணப்படும். கடன் வாங்கி விவசாயம் செய்ய சந்தர்ப்பம் அமையும். எனவே தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.
அரசியல்
சமூகத்தில் நல்ல பெயர் புகழ் கிட்டும். தொண்டர்களின் உண்மையான அன்பும் சேவையும் கிட்டும். அரசியல் வானில் எதிரிகள் வலுத்து காணப்படுவர். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு வழக்குகளை எதிர்கொள்ள சந்தர்ப்பமும் வாய்ப்பும் உண்டு. கவனம் தேவை.
கலைஞர்கள்
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். ஜோதிடம், இசை, நாடகம், சினிமா, ஓவியம், சிற்பக்கலை, ஜோதிடம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும். எதிர்பாராத பணப்புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.
மாணவர்கள்
படிப்பு நன்கு வரும். விளையாட்டிலும் ஆர்வம் ஏற்பட்டு பரிசும் பாராட்டும் பெற வாய்ப்புகள் கிட்டும். ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படும். நினைத்த பள்ளி அல்லது கல்லூரியை தேர்தெடுக்க சந்தர்ப்பம் அமையும்.
பெண்கள்
அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பும் ஒரு சிலருக்கு புத்ர பாக்யமும் ஏற்படும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அதனால் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேலையில் பிரச்சனை ஏற்படுமாகையால் தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுதல் கூடாது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும், கணவன் மனைவி ஒற்றுமை சற்று சுமாராகவே இருக்கும். மணவாழ்வில் சற்று மகிழ்ச்சி குறைந்தாலும் பிரிவோ பிரச்சனையோ வராது. அடிக்கடி ஆலய தரிசனம் அமையும். சளித்தொல்லைகள் உடலில் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நன்று.
உடல் ஆரோக்யம்
இதயம், அடிவயிறு, கால், பாதம், போன்ற, உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். அறுவை சிகிச்சைக்கான காலமிதுவாகும். உடலில் தேம்பல், சிரங்கு வராமல் உடலைப் பேணுதல் வேண்டும்.
தனுசு - சுவர்ண மூர்த்தியாவதால் அவர் நன்மை அளிக்கிறார். (11) 100%
|