ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
தெய்வ சிந்தனையும், எடுத்த காரியத்தை முடிப்பதில் ஆர்வமும் திறமையும் உடைய உங்கள் லக்னத்திற்கு 9ம் இடத்தில் ராகுவும் 3ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது மிகவும் நற்பலங்களாகும். அடிக்கடி ஆன்மீகப் பயணம் அமையும். நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்பும் சந்தர்ப்பமும் நடக்கும். அதனால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். அதே சமயம் சற்று பற்றாக்குறை பட்ஜெட்டாகவே அமையும். எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்க்கும் செய்திகள் சற்று தாமதமானாலும் இறுதியில் சாதகமான பலன்கள் வந்து சேரும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராத நேரத்தில் வந்து சேரும். உடன்பிறந்தவர்களுக்கு இதுவரை தள்ளிப்போன சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். புதிய உறவுகள் ஏற்படும். அதனால் எதிர்பாராத நன்மையும் பயனும் அமையும்.
புதிய விஷயங்களைக் கற்பதில் தடையேற்பட்டு விலகும். புதிதாக இடம்இ வீடுஇ வண்டி வாகனங்கள் வாய்ப்பும் வந்து சேரும். தாயாரின் அன்பும் ஒத்துழைப்பும் எதிர்பாராமல் வந்து சேரும். தேவையற்ற விஷயங்களைப் பேசுவதும் செயல்படுத்துவம் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வலம்வரும் வேளையில் உங்களைப்பற்றிய வீண் வதந்திகளும் செய்திகளும் வந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றிற்கு இடம் கொடாமல் கவனமுடன் செயல்படுதல் வேண்டும். பயணங்களில் அதிகக் கவனம் தேவை. விபத்து அடிபடுதல் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
தள்ளிப்போன வீடு வாங்கும் எண்ணம் சற்று தலைதூக்கும். இறுதியில் கடன்வாங்கி வீடு கட்ட அல்லது கட்டிய வீடு வாங்க வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விருந்து கேளிக்கை போன்ற விஷயங்களில் மனது அதிக அளவில் ஈடுபாடு கொள்ள வைக்கும். கலைத்துறையில் ஆர்வங்கள் அதிகரிக்கும்இ குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த பாஸ்போர்ட்இ விசா இவைகள் வந்து சேரும். விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். மறைமுகமாக எதிர்களின் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். நண்பர்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
இதுவரை வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு இல்லையென்றாலும் கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது.. கம்பெனி மாறுவதில் நிதானம் தேவை. ஒரு சிலருக்கு அர்சு வேலையில் அமர வாய்ப்பும் ஏற்படும் வேலை நிரந்தரமாகும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.. உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு மனவருத்தங்களும் வேதனைகளும் கூடும். இடமாற்றம் அமையும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சுயதொழில் அல்லது கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சற்று சுமாராகவே இருக்கும். ஒரு சிலர் புதிதாகத் தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். சிறுதொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். சிறுதொழில் ஏற்றம் மிகுந்து தரும். உற்பத்தி சார்ந்த தொழில் சற்று சுமாராக இருக்கும். போக்குவரத்துஇ தகவல் தொடர்புஇ கமிஷன் ஏஜென்சிஇ புரோக்கர்ஸ், கன்சல்டன்சி தொழில்கள் லாபகரமாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவே இருக்கும். பங்குச் சந்தையில் பெரிய் அளவில் முதலீடு கூடாது. இடம், வீடு, இவற்றில் முதலீடு செய்யலாம். இரும்பு எஃகு சிமெண்ட் சுமாராகவும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சற்று மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ஓட்டல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் நன்கு அமையும்,சிறுவியாபாரிகள் சாலையோர வியாபாரிகள் ஏற்றம் பெறுவர். சுற்றுலாத்துறை சற்று சுமாராகவும், கப்பல், மீன்பிடித் தொழில் சுமாராகவும் மருத்துவம் விஞ்ஞானம் போன்ற துறைகள் ஏற்றமுடன் விளங்கும். சுயதொழில் வீட்டில் வைத்து செயல்படும் தொழில்கள் நல்ல லாபகரமாகஇருக்கும்.
விவசாயம்
விவசாயம் ஓரளவு சாதகமாக இருக்கும். பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காது. புதிதாக கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்த முயற்சி செய்வர். பணப் புழக்கம் சற்று சுமாராகவே இருக்கும். விவசாயக் கடன் அமையும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். சமுதாயத்தில் பெயர், புகழ் கூடும். பொதுவாழ்வும் சமுதாய வாழ்வும் நன்மையேற்பட்டாலும் ஒரு சிலருக்கு அராங்கத்தால் பிரச்சனைகளும் வழக்குகளும் இருந்து கொண்டேயிருக்கும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். பொது வாழ்க்கையில் பலரால் பாராட்ட வாய்ப்பும் அமையும். தேர்தலில் வெற்றி பெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும்.
கலைஞர்கள்
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், ஜோதிடம், வளர்ச்சி அபரிதமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். ஆனால் பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு பட்டங்களும் விருதுகளும் கிட்டினாலும் பொருளாதார நிலையில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சின்னத்திரை சிறப்பாக இருந்தாலும் அதில் இருப்பவர்களுக்கு சுமாராகவே இருக்கும்.
மாணவர்கள்
புதிய விஷயங்களை அறிவதும் அவற்றை கற்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். விருந்து கேளிக்கைகளை குறைத்துக் கொள்ளுதல் நலம். எதிர்பார்த்த பள்ளி கல்லூரி அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வந்து சேரும். விளையாட்டு,டி.வி. சினிமா இவற்றைக் குறைத்தல் நலம். உயர்கல்வி பயில ஒரு சிலர் வெளிநாடு செல்லவும் யோகம் ஏற்படும். சீரான நடைப் பயிற்சியும் உடல்பயிற்சியையும் மேற்கொள்ளுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது.
பெண்கள்
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலை இருந்து கொண்டேயிருக்கும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாமல் அடுத்த வேலை கிடைத்த பின் விடுதல் நலம். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேற வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் அதிக நிதானம் தேவை. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அதிகரிக்கும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று கவனம் தேவை. கணவன் மனைவு உறவு சற்று சுமாரகவே இருந்து வரும். சுயதொழில் புரிபவர்கள் முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். உடலில் அசதி, சோர்வு இவை வராமல் சுறுசுறுப்பாக இருத்தல் வேண்டும். உடலில் அடிவயிறு கால் சிறுநீர்ப்பிரச்சனை வராமல் காத்தல் நலம்.
அதிர்ஷ்ட எண் : 6, 8 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு அதிர்ஷ்ட நாள் : வெள்ளி, சனி அதிர்ஷ்ட இரத்னம் : வைரம், கருநீலக்கல்
பரிகாரம்
“வியாழக்கிழமை” தோறும் படைப்புக் கடவுளான “ஸ்ரீ பிரம்ம தேவரை” வழிபடுதல் நன்மை பயக்கும். “குலதெய்வ” வழிபாடும் “அம்பாள்” வழிபாடும் சிறப்பானதாகும்.
|