ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
நல்ல அறிவும் புத்திக் கூர்மையும் உடைய உங்கள் லக்னத்திற்கு 3ம் இடத்தில் ராகுவும் 2ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்வது நன்மையானது ஆகும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும். அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்புகள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற வாய்ப்புகள் கூடும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். புதிய உறவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் அமையும்.
இடமாற்றம் வீடுமாற்றம் ஊர்மாற்றம் அமையும். எதிர்பாராத செய்திகள் சாதகமாக வந்து சேரும். பணவிஷயங்களில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் சரளமாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருத்தல் உத்தமம். அடிக்கடி கடன் வாங்க வேண்டியது வரும். நிலம்இ வீடுஇ வண்டிஇ வாகனங்கள் நல்ல வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும்.
புதிய வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் காரணமாக வெளியூர்இ வெளிநாடுப் பயணம் ஒரு சிலருக்கு அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தெய்வ அனுகூலம் கிட்டும்.
உயர்கல்வி பயில வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும். விசா பாஸ்போர்ட் ஆகியவை வந்து சேரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷமாகவும் அமையும். இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணங்கள் சீக்கிரம் நிச்சயத்தில் முடிந்து திருமணமும் நடந்தேறும். வீட்டில் சுபகாரியங்கள் அடிக்கடி நடந்தேறும்.
நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். பக்கத்து வீட்டு நண்பர்களின் ஆதரவு அமையும். எதிர்பார்த்த செய்திகள் எதிர்பாராத செய்திகள் இரண்டும் சாதகமாக வந்து சேரும். புதிய நட்பு வட்டம் உருவாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் ஆதரவும் கிட்டும். எதிரிகளால் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணம் நடந்தேறும் எதிர்பார்த்த டைவர்ஸ் கிடைப்பதில் குழப்பம் மிகுந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே அமையும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
பார்க்கும் வேலையில் சற்று கவனம் தேவை. இங்கு வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறையையும் குறிப்பிடும். அரசு ஊழியர்கள் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்ல பேப்பர் போட வேண்டியது வரும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலையில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டேயிருக்கும். “ஆன்சைட்” செல்வதில் சற்று தடையேற்பட்டு ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளிநாடு செல்வர்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சுயதொழில் சற்று சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும். பணம் பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக் கொள்ளும். கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. பொருட்களை தேவையில்லாமல் கொள்முதல் செய்தல் கூடாது. லாபம் குறைவாக இருந்தாலும் உடனே விற்று விடுதல் ஓரளவு நன்மை உண்டாகும். சிறுதொழில் சுயதொழில் கூட்டுத் தொழில் உற்பத்தி சார்ந்த தொழில் அனைத்தும் சற்று சுமாரகவே இருக்கும். அதே சமயம் பங்குச்சந்தை சற்று ஏற்றமுடன் இருக்கும். இருப்பினும் ஷேர் மார்க்கெட்டில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. உணவுஇ ஆடைஇ ஆபரணத் தொழில்கள் ஏற்றம் பெறும். தகவல் தொடர்பு. போக்குவரத்து, வண்டிவாகனங்கள், ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்து காணப்படும். சாலையோர வியாபாரம் கமிஷன்இ ஏஜென்ஸி சுமாராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிகக் கவனம் தேவை. நிதி, நீதி, வங்கி, கல்வி ஏற்றமுடன் விளங்கும்.
விவசாயம்
விவசாயம் ஓரளவு சாதகமாக அமையும். விளைச்சலுக்கேற்ற எதிர்பார்த்த விலை ஓரளவு கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலர் புதிய நிலங்கள் வாங்கவும் வாய்ப்புகள் அமையும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமுடன் இருந்து வரும். மக்கள் சக்தி ஆதரவு இருப்பது போல் தோன்றினாலும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியே மிஞ்சும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். யாரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்குதல் கூடாது. தொண்டர்களின் ஆதரவும் அன்பும் வலுவாக இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், ஜோதிடம், வளர்ச்சி அபரிதமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். ஆனால் பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு பட்டங்களும் விருதுகளும் கிட்டினாலும் பொருளாதார நிலையில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சின்னத்திரை சிறப்பாக இருந்தாலும் அதில் இருப்பவர்களுக்கு சுமாராகவே இருக்கும்.
மாணவர்கள்
படிப்பில் ஆர்வமும் உற்சாகமும் அதிகரிக்கும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் கூடும். எதிர்பார்த்த பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் அமையும். படிப்பின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் வீடு மாற்றம் அமையும். புதிய சூழ்நிலையில் படிக்க வாய்ப்பு அமையும். கல்விக்கடன் உடனே கிடைக்கும். வெளிநாட்டில் சென்று படிக்க சந்தர்ப்பக்களும் அமையும்.
பெண்கள்
ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சற்று தடைகள் ஏற்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்பட்டு குழந்தை பிறக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். குழந்தைகளால் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
உடல் ஆரோக்யம்
உடலில் அடிவயிறு, கால் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். தலை, பல் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் தேவை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். சத்தான காய்கறிகள் பழங்கள், கீரைகள் உட்கொள்ளுதல் வேண்டும்.
அதிர்ஷ்ட எண் : 5, 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை, வெண்மை அதிர்ஷ்ட நாள் : புதன், வெள்ளி அதிர்ஷ்ட ரத்தினம் : மரகதப்பச்சை, வைரம்
பரிகாரம்
சனிக்கிழமை தோறும் “ஆஞ்சநேயரை” வழிபட்டு வர நன்மை ஏற்படும். “குலதெய்வ” வழிபாடும் “இஷ்டதெய்வ” வழிபாடும் சிறப்பான பலனைத் தரும்.
|