ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
தெய்வ சிந்தனையும் மற்றவர்களுக்காக தியாகம் செய்து வாழும் கும்பலக்னத்திற்கு ராகு பகவான் 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் கேது பகவான் லக்னத்தில் செய்வதும் சிறப்பானதாகும். ராகு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத நன்மைகள் நடந்தேறும். எடுக்கும் காரியங்கள் கைகூடும். புதிய விஷயங்களில் ஈடுபாடும் அதனைச் செயல்படுத்த தகுந்த நபர்களும் வந்து சேர்வர் அடிக்கடி பயணங்கள் ஏற்படும். அதனால் நன்மையானவைகளே நடந்தேறும். பேச்சில் சாமர்த்தியமும் இனிமையும் கூடும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். அவர்களுக்கு இதுவரையில் நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். புதிய உறவுகள் வந்து சேரும். நட்பு வட்டாரம் பெருகும். அதனால் நன்மைகள் உண்டாகும்.
எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும் வாய்ப்புகள் ஏற்படும். வீடு வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். தாயாரால் நன்மைகள் ஏற்படும். உணர்வுகளை கட்டுக்குள் வைக்காவிடில் பொருள் பறிபோகும்இ நிலை ஏற்படும். நம் கண்முன்னே நம் பணம் பொருள் பறிப்போகும் நிலை அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. ஜாமின் சாட்சி போன்ற கையெழுத்துக்கள் போடுதல் கூடாது. அதனால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும்.
விருந்து கேளிக்கைகளில் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். உல்லாசங்களில் மனதை தேவையில்லாமல் செலுத்துதல் கூடாது. குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுப் பின் வந்து சேரும். காதல் விஷயங்களில் சில நேரம் மகிழ்ச்சியாகவும் சிற்சில சமயங்களில் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். மனைவியின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். வழக்குகள் இழுபறி நிலையாகவே இருந்து வரும். எதிர்கள் மறைமுகமாகத் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நேரமிது. வெளிநாட்டுத் தொடர்பால் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். நண்பர்களால் நன்மைகளும் மகிழ்ச்சியும் எதிர்பார்த்த உறவுநிலைகளும் தொடரும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
அரசு வேலை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களை குறிப்பிடும் வார்த்தையே உத்யோகம் ஆகும். இங்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களை உத்யோகம் என்ற கணக்கில் பலன் கூறப்படுகிறது. இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கிடைத்த வேலையில் முதலில் சேருதல் நலம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு நிலை ஏற்படும். அத்துடன் ஊதிய உயர்வும் ஏற்படும். பார்க்கும் கம்பெனியை விட்டு வேறு கம்பெனிக்கு பேப்பர் போடுவதில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும். “ஆன்சைட்” கிடைத்து வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். எனவே அதிகக் கவனமுடன் அவர்களிடம் நடந்து கொள்ளல் வேண்டும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் புரிபவர்கள் சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி தொழில்கள் சற்று லாபகரமாக அமையும். மேலும் உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்று காணப்படும். பங்குச்சந்தையில் ஓரளவு லாபம் ஏற்படும். அதே சமயம் ஷேர்மார்க்கெட்டில் முதலீட்டில் கவனமாக முதலீடு செய்தல் வேண்டும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வந்து சேரும். மருத்துவம், இராசயனம், பொறியியல், இரும்பு எஃகுஇ சிமெண்ட் துறைகள் லாபகரமாக அமையும். நிதி, நீதி, மற்றும் வங்கித்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஐ.டி. துறைகள் ஏற்றம் மிகுந்தும் கடல்சார் துறைகள் மீன்பிடித் தொழில்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்தும் ஆசிரியர், ஜோதிடர், வக்கில்கள், ஆடிட்டர் தொழில்கள் லாபகரமாக அமையும்.
விவசாயம்
விவசாயத்திற்கு ஏற்ற விளைச்சல் அமைவது தடையேற்படும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பதில் சரிவு ஏற்படும். பணப்பயிர்கள் லாபகரமாக இருக்கும். அன்றாடும் அழியும் பழங்கள் காயகறிகள் பூக்கள் பயிரிடுதல் சற்று லாபம் கூடுதலாக அமையும். பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். சமுதாயத்தில் பெயர், புகழ், கூடும். பொதுவாழ்வும் சமுதாய வாழ்வும் நன்மையேற்பட்டாலும் ஒரு சிலருக்கு அராங்கத்தால் பிரச்சனைகளும் வழக்குகளும் இருந்து கொண்டேயிருக்கும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். பொது வாழ்க்கையில் பலரால் பாராட்ட வாய்ப்பும் அமையும். தேர்தலில் வெற்றி பெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும்.
கலைஞர்கள்
கலைஞர்கள் ஏற்றம் பெற்று வாழ்வர். பணப்புழக்கம் நல்லபடியாக இருந்து வரும். அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வலம்வர வாய்ப்புகள் அமையும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். இசை, சினிமா, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம்,ஜோதிடம் மகிழ்ச்சிகரமாக அமையும் சின்னத்திரை உற்சாகமாக இருக்கும்.
மாணவர்கள்
மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் கொள்வர், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. ஏனெனில் கேது 1ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் அசிங்கம் அவமானங்களை உண்டுபண்ணிவிடுவார். எனவே எதிலும் கவனம் தேவை. உயர்கல்வி பயில்வதில் சற்று தடையேற்பட்டு பின் கல்வி தொடரும். படிப்பின் காரணமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்வர். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடற்பயிற்சி செய்தல் நன்மை பயக்கும். விளையாட்டில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும்.
பெண்கள்
அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் பேசுதல் கூடாது. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் ஒரு சிலருக்கு நடந்தேறும். இதுவரை நடவாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் குடும்பத்தில் இனிதே நடந்தேறும். புத்ரபாக்யத்தில் இருந்து வந்த தடைவிலகி புத்ரபாக்யம் கிட்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறந்து காணப்படும். எனவே உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் ஒருவித சகிப்புத் தன்மையும் திருப்தியற்ற தனமையும் ஏற்படும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் குழப்பங்களும் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையும் ஆதரவும் கிட்டும். உடலில் சின்னப்பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் அவசியம்.
உடல் ஆரோக்யம்
சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. சளித்தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கண், மூக்கு கால் போன்ற உடல் உறுப்புகளில் தேவையில்லாத வலி வேதனை வந்து போகும். அடிவயிற்றில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 2, 3 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மஞ்சள் அதிர்ஷ்ட நாள் : திங்கள், வியாழன் அதிர்ஷ்ட இரத்னம் : முத்து, மஞ்சள் புஷ்பராகம்
பரிகாரம்
“சனிக்கிழமை” தோறும் “சனிபகவானை” வணங்கிவருதல் மற்றும் “ஆஞ்சேநேயரை” வணங்கிவருதல் நன்மைபயக்கும். அத்துடன் “புதன்கிழமை” தோறும் “சிவபெருமானை” வணங்கிவர எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும்.
|