ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
விடாமுயற்சியும் எதையும் தலைமையேற்று நடத்தும் திறனும் எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறத் தீவிரமாகப் போராடும் விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் குருவும் சஞ்சாரம் செய்வது சிறப்பான பலன் என்று தான் சொல்ல வேண்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்கள் எளிதில் வெற்றியடையும். எண்ணிய எண்ணங்கள் இனிதே நடந்தேறும். எப்பொழுதும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பேச்சில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற பேச்சைத் தவிர்த்தல் நலம்.
பணவரவு தாரமாக அமையும். பணப்புழக்கமும் சரளமாக அமையும். குடும்பத்தில் புதுவரவு அமையும். அதனால் நன்மை எற்படும். சகோதர சகோதரர்களால் எதிர்பாராத நன்மையேற்படும். அவர்களுக்கு வேலை மற்றும் சுப காரியங்கள் அமையும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய சந்தர்ப்பமும் அதனால் நன்மைகளும் அமையும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். ஒரு சிலருக்கு இடம் வாங்க வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வீடு மாற்றம் இட மாற்றம் சிலருக்கு ஏற்படும்.
அடிக்கடி சுபநிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். விருந்து கேளிக்கைகளுல் மன ஈடுபாடு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை அமைய சந்தர்ப்பம் கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். வழக்குகள் சாதகமாக இருந்து வரும். அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. போக்குவரத்து சமயம் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. போக்குவரத்து வண்டி வாகன்ங்களில் எச்சரிக்கை தேவை.
புதிய தொழில் தொடங்க சந்தர்ப்பம் அமையும். அதே சமயம் முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். தந்தையாரால் நன்மையேற்படும். விசா பாஸ்போர்ட் விரைவில் வந்து சேரும். வேலையின் காரணமாக இடமாற்றம் மனமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் அமையும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
குரு நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட வேண்டியது வரும். எனவே வேலையில் அதிகக் கவனம் தேவை. அடுத்த வேலை கிடைக்கும் வரை பார்க்கும் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் உயரதிகாரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சக ஊழியர்களால் நன்மைகளும் அதே சமயம் ஒரு சிலரால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
தொழிலில் தேவையற்ற முதலீடு செய்தல் கூடாது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல் கூடாது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் சற்று கவனம் தேவை. போக்குவரத்து தகவல் தொடர்பு கமிஷன் ஏஜென்ஸி புரோக்கர்ஸ் ரியல் எஸ்டேட் கட்டுமானம் இவைகள் சற்று சுமாராகவே இருந்து வரும். ஆடைஇ ஆபரண அழகு சாதனங்கள் துறைகள் சற்று சுமாரகவே இருந்து வரும். உணவு, ஓட்டல் லாபகரமாகவும் இரும்பு எஃகு சிமெண்ட் இரசாயனம் உருக்கு நிலக்கரி பெட்ரோல் துறைகள் சற்று லாபம் குறைந்தும் நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ்,கல்வி மருத்துவம் இரசாயனம் சாதகமாக இருந்து வரும். நீர்இ மீன்பிடித் தொழில் லாபகரமாக அமையும். சாலையோர வியாபாரம் சற்று சுமாரகவே இருந்து வரும்.
விவசாயம்
விவசாயம் நன்கு லாபகரமாக இருக்கும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்கு அமையும். ஒரு சிலர் புதிய விலை நிலங்கள் வாங்க வாய்ப்பு அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. காய்கறிகள், பழங்கள் இவற்றின் உற்பத்தி லாபம் அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். உயர்பதவியும் பெயரும் புகழும் அமையும். ஒரு சிலருக்கு பட்டம் பதவி தாமாகவே வந்து சேரும். அரசாங்கத்தால் எதிர்பாராத லாபம் கூடும். எதிரிகள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அமையும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சற்று ஏற்றமான காலமாகும். குரு 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் புது ஒப்பந்தங்கள் ஏற்படும். அதனால் எதிர்பாராத பண வரவு அமையும். பட்டம் பதவிகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய நட்பால் எதிர்பாராத நன்மைகள் அமையும். பணப்புழக்கம் சற்று தாரளமாகவே அமையும்.
மாணவர்கள்
மதிப்பெண் கிடைத்தாலும் அதிக மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கல்விக்கடன் கிடைப்பதில் சற்று இழுபறியாகவே இருந்து வரும். விளையாட்டுகளில் ஆர்வம் கூடும். உயர்கல்வி படிக்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை.
பெண்கள்
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் வேலையில் ஒரு திருப்தியற்ற நிலை இருந்து கொண்டேயிருக்கும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாமல் அடுத்த வேலை கிடைத்த பின் விடுதல் நலம். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேற வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் அமையும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் அதிக நிதானம் தேவை. குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அதிகரிக்கும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் சற்று கவனம் தேவை. கணவன் மனைவு உறவு சற்று சுமாரகவே இருந்து வரும். சுயதொழில் புரிபவர்கள் முதலீட்டில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும்.
உடல் ஆரோக்யம்
அடிவயிறு, முழங்கால், பாதம் மற்றும் தலை போன்றபகுதிகளில் பாதிப்பு வராமல்பார்த்துக் கொள்ளல் வேண்டும்.உடலில்அசதி சோர்வு வரமால் பார்த்தல் நலம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண் – 8, 5 அதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பச்சை அதிர்ஷ்ட நாள் – சனி, புதன்கிழமை அதிர்ஷ்ட இரத்னம் – கருநிலக்கல், மரகதப்பச்சை
பரிகாரம்
“செவ்வாய்க்கிழமை” தோறும் “துர்க்கை” அல்லது “காளியை” வணங்கிவர நன்மையேற்படும். சித்தர்கள் ஜீவசமாதிகள் மசூதிகள் சென்று வணங்கி வருதல் சிறப்பான பலன்களை அளிப்பதாகும்.
|