ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
தெய்வ சிந்தனையும் மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பமும் உடைய உங்கள் மீன லக்னத்திற்கு ராகு பகவான் 6ம் இடத்திலும் கேது பகவான் 12ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்வது நற்பலன் ஆகும். இதுவரை இருந்து வந்த தடங்கள்கள் விலகி எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பேச்சில் சற்று கவனம் தேவை. பணப்புழக்கம் நன்கு அமையும். உடன்பிறந்த சகோதர சகோதரர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவு அமையும். அவர்களுக்கு இதுவரை நடக்காமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும்.
நெருங்கிய உறவினர்களால் பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்பட்டு விலகும். பழைய இடத்தை விற்று புதிய இடம் வாங்க வாய்ப்புகள் அமையும். தேவையற்ற மனச்சஞ்சலங்களும் போராட்டங்களும் அமையும். கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிய உறவுகளால் தேவையற்ற நிம்மதியிழப்பு ஏற்படும். தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அமையும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். காதல் விஷயங்கள் சாதகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். மனம் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. நம் பணம் பொருள் நம் கண்முன்னே மாட்டிக் கொள்ளும் அல்லது முடங்கிக் கொள்ளும் காலமிது. எனவே உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும். விட்டதைப் பிடிக்கும் எண்ணத்தில் கவனம் தேவை. சுபகாரியங்கள் செய்ய கடன் வாங்க வேண்டியது வரும். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் உருவாகும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராகவே இருக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். நண்பர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. நீண்டதூர ஸ்தல யாத்திரை செய்ய வாய்ப்பு அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராமல் வந்து சேரும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில் சற்று கவனம் தேவை. இங்கு வேலை என்பது அரசு மற்றும் தனியார் துறையையும் குறிப்பிடும். அரசு ஊழியர்கள் வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. வேலையில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும். ஒரு சிலர் பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்ல பேப்பர் போட வேண்டியது வரும். பார்க்கும் வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலையில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டேயிருக்கும். “ஆன்சைட்” செல்வதில் சற்று தடையேற்பட்டு ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளிநாடு செல்வர்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் புரிபவர்கள் ஓரளவு ஏற்றம் பெறுவர். குருப் பெயர்ச்சிக்குபின் சுயதொழில் கூட்டுத் தொழில் புரிபவர்கள் ஏற்றம்பெறுவர். உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று மந்தமாக இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் சற்று சாதகமாக இருந்து வரும். இக்காலங்களில் தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. நிதி, நீதி, வங்கி இன்சூரன்ஸ் துறைகள் சற்று சுமாராகவே இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்கள் தகவல் தொடர்பு சாதகமாக அமையும். இரும்பு எஃகு ரசாயனம் மருத்துவம் சார்ந்தவைகள் ஒரளவு லாபகரமாக அமையும். ஆடை, ஆபரணம் அழகு சாதனப் பொருட்கள் துறை சாதகமாக இருந்து வரும். ரியல் எஸ்டேட் ஆரம்பத்தில் சற்றூ தொய்வு ஏற்பட்டாலும். பின்னால் நல்ல லாபகரமாக அமையும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாகவே இருந்து வரும். சாலையோர வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருக்கும்.
விவசாயம்
விவசாயம் ஓரளவு சாதகமாக அமையும். விளைச்சலுக்கேற்ற எதிர்பார்த்த விலை ஓரளவு கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலர் புதிய நிலங்கள் வாங்கவும் வாய்ப்புகள் அமையும். பணப்புழக்கம் தாரளாமாக இருக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஏற்ற இறக்கமுடன் இருந்து வரும். மக்கள் சக்தி ஆதரவு இருப்பது போல் தோன்றினாலும் தேர்தலில் போட்டியிட்டால் தோலிவியே மிஞ்சும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். யாரையும் எளிதில் நம்பி காரியத்தில் இறங்குதல் கூடாது. தொண்டர்களின் ஆதரவும் அன்பும் வலுவாக இருந்து கொண்டேயிருக்கும்
கலைஞர்கள்
சினிமா, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், ஜோதிடம், போன்ற துறைகளில் இருப்பவர்களுக்குப் பெயரும் புகழும் வந்து சேரும். புதிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும், சின்னத்தைரையில் பெயருடனும் புகழுடனும் விளங்க வாய்ப்புகள் வந்து சேரும். பணச்சுழற்சி சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் நல்ல பெயருடன் பரிசுகளை வெல்ல வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள்
புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் விருப்பமும் கூடும். அதே சமயம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் அமைவதில் சற்று தடையேற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். போக்குவரத்தில் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். படிப்பின் காரணமாக ஒரு சிலர் தாய்இ தந்தையரை விட்டுப் பிரிய நேரிடும். போட்டித் பந்தையங்களில் வெற்றி பெற்று பரிசுப் பொருட்கள் பெற வாய்ப்புகள் அமையும். உல்லாசங்களில் காலத்தைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துதல் வேன்டும்.
பெண்கள்
அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் வந்து சேரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் பேசுதல் கூடாது. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். காதல் கனிந்து திருமணத்தில் ஒரு சிலருக்கு நடந்தேறும். இதுவரை நடவாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் குடும்பத்தில் இனிதே நடந்தேறும். புத்ரபாக்யத்தில் இருந்து வந்த தடைவிலகி புத்ரபாக்யம் கிட்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறந்து காணப்படும். எனவே உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் ஒருவித சகிப்புத் தன்மையும் திருப்தியற்ற தனமையும் ஏற்படும். உயரதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்களும் குழப்பங்களும் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையும் ஆதரவும் கிட்டும். உடலில் சின்னப்பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் அவசியம்.
உடல் ஆரோக்யம்
உடலில் சொரி, சிறங்கு, அரிப்பு, தேம்பல் வராமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சளித்தொல்லைகள் அலர்ஜி இல்லாமல் இருத்தல் நலம். முதுகு, வயிறு, முழங்கால் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். எதிலும் அலட்சியம் காட்டமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம்
அதிர்ஷ்ட எண் : 3, 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட நாள் : வியாழன், செவ்வாய்கிழமை அதிர்ஷ்ட இரத்னம் : மஞ்சள், புஷ்பராகம், பவழம்
பரிகாரம்
“செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகனை” வழிபடுதல் நன்மையேற்படும். அத்துடன் “இஷ்டதெய்வம்” மற்றும் “குலதெய்வம்: வழிபாடும் நன்மைதரும்.
|