(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத் துறையில் நாட்டமுடையவருமான கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கும் அதிபதியான குரு – ஆவணி 27 க்குப் பிறகு ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிறு உடல் உபாதைகள் மறையும். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஆகியவை மறைந்து கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். தவத்திலும், பூஜை புனஸ்காரங்களிலும், தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும். தந்தையின் முழுமையான ஆதரவு கிட்டும். பொதுமக்களுக்குக் காப்பாளராக இருப்பார். இவர் இடும் கட்டளைகளை பிறர் ஏற்று நடக்கும் வண்ணம் இவருடைய அந்தஸ்து உயரும். வளம் கொளிக்கும் வயல்களால் வசதி வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் இவருக்கென ஒரு தனியிடம், அதுவும் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்வதால் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் சிறந்த பணிக்காக விருதுகள் கிடைக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.
குரு தனது 5 ஆம் பார்வையால் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் இம் மண்ணில் இவரைப்போல் உண்டோ என பெயரும் புகழும் கூடும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். இதயம் தொடர்பான சிகிச்சைகள், சிக்கலின்றி செய்யப்பட்டு நோய் சீராகும். தனியார் மற்றும் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முதல் நிலை பெற்று பரிசுகளையும் பெறுவர்.
குரு 7 ஆம் பார்வையாக தைரிய பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக தைரியமாக எடுக்கும் புது முயற்சிகளில் தவறாது வெற்றி அடைவீர்கள். பல நாளாக வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி பெருகி அடகு வைத்த நகைகளை திருப்பிவிடுவீர்கள். அதன் காரணமாக கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாகன யோகம் ஏற்படும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
குரு தனது 9 ஆம் பார்வையால் புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் குதூகலிக்க இனிய சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கும். பத்திரிக்கைத் தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு, சுபவாக்கு, கல்வி கேள்வியால் சொற்பொழிவு ஆற்றும் திறன் ஆகியவை மேம்படும். புராண இலக்கிய உணர்வு, சிறு காவியங்களை அனுபவிக்கும் திறன் ஆகிழவை மேலோங்கும். தாய்வழியிலும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.
கும்ப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில் எப்பொழுதும் கவனம் தேவை. புதிய வேலையை உறுதி செய்தபின் பழைய வேலையை விடுதல் வேண்டும். கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எதிலும் நிதானம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடமும் சற்று கவனமுடன் பழகுதல் வேண்டும். வெளிநாடு வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். அரசு மற்றும் தனியார் துறையில் எதில் முதலில் வேலை வந்தாலும் ஒப்புக் கொள்ளல் வேண்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் ஒரு சில பிரச்சனைகளும் ஏற்படும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
சுயதொழில் மற்றும் கூட்டுத் தொழில் புரிபவர்கள் ஓரளவு நற்பலன் அடைவர் ஏற்றுமதி இறக்குமதி ஓரளவு பரவாயில்லாமல் அமையும். பங்குச்சந்தை ஓரளவு லாபகரமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் சேவைத்துறைகள் லாபகரமாக அமையும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, செய்தி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, துறைகள் ஏற்றமானதாக இருக்கும். விஞ்ஞானம் கெமிக்கல் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரண, விளையாட்டுச் சாமான்கள், பிளாஸ்டிக், மருந்து சார்ந்த துறைகள் சற்று சுமாராகவே இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், பொறியியல், ரியல் எஸ்டேட் நல்ல லாபகரமாகவே இருக்கும். இரும்பு, எஃகு, கனிமவளங்கள் துறை லாபகரமாக இருக்கும். ரோட்டோர வியாபரிகள் ஓரளவு நல்ல லாபம் அடைவர்.
விவசாயம்
விவசாயம் எதிர்பார்த்த வருமானத்தை ஓரளவு தரும். லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்கள், புதிய தோட்டங்கள் பண்ணைகள் ஒரு சிலர் வாங்க வாய்ப்பு ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் அமையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசால் ஆதாயம் ஏற்படும்.
அரசியல்
எதிர்பார்த்த பெயரும் புகழும் அமையும். அரசால் நற்பலன்கள் அமையும். எதிர்பாராத தனவரவுகள் அமையும். தொண்டர்களின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். அரசியல் மகிழ்ச்சிகரமாக அமையும். வழக்குகள் அதிகப்படியான கவலைகள் உண்டுபண்ணும்.
கலைஞர்கள்
இசை, ஓவியம், சினிமா, டி.வி. போன்ற கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வாய்ப்பு அமையும். ஜோதிடம் மற்றும் மற்ற கலைத்துறைகள் லாபகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் புதிய ஊதிய உயர்வும் அமையும்.
மாணவர்கள்
ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைத்து படிக்க சந்தர்ப்பங்கள் அமையும். கடன் வாங்கி படிக்கவும் ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிக்கவும் வாய்ப்புகள் அமையும்.
பெண்கள்
இல்லத்தரசிகளின் ஆசைகளும் அபிலாஷைகளும் பூர்த்தியாகும். இதுகாறும் நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியம் நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கும் வழிவகுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் பிரச்சனைகள் இருந்தாலும் வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். உடன் பணிபுரிபவர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்குவர். உயர் அதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். எனவே எச்சரிக்கை தேவை. நரம்பு சம்பந்தமான மற்றும் சளித்தொல்லைகள் வர வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் கவனம் தேவை. மேலும் தலை, கால், மற்றும் அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
உடல் ஆரோக்யம்
அறுவை சிகிச்சைக்கான காலமிது, தலை, அடிவயிறு கால் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உப்பு, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் அவசியம்.
கும்பம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (9) 75%
|