LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158  

உத்தராடம் 2, 3, 4,ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2,ம் பாதங்கள்)

(போ, ஜ, ஜி, ஜூ, ஜே, க, கா, கீ) ஆகிய எழுத்துக்கள் பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் தை மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்.

வான மண்டலத்தில் 10வது ராசியாக சஞ்சரிக்கும் சனிபவகானே உங்களது ராசியின் அதிபதி ஆவார். மனதில் உறுதியும், உழைப்பில் நேர்மையும், செயலில் சற்று வேகமும், எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயலாற்றும் ஆற்றலும் உடையவர்கள். நீங்கள் எண்ணியதை எண்ணியபடி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணமும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும், தெய்வ சிந்தனையும் உடையவர்கள்.

எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சமும், ஆர்ப்பரிக்காமல் எதையும் அமைதியாகச் செய்து முடிக்கும் விவேகமும் உங்கள் தனிச் சிறப்பாகவும் மற்றவர்களின் சொத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்படாத ஆன்மா நீங்கள். உழைப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் நிதானமும், நடு நிலையுடனும் செயல்படும் உங்கள் ராசிக்கு இதுவரை 11ம் இடமான ஸ்தாபனத்தில் சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார்.

12ம் இடம் என்பது விரயஸ்தானம் மட்டுமல்ல அது முதலிட்டு ஸ்தானமும் கூட, உங்கள் மகர ராசியின் அதிபதி சனி ஆவார். அவரே உங்கள் ராசியின் 2ம் இடமான குடுமபஸ்தானத்திற்கும் அதிபதியாகி அவர் 12ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் அடிக்கடி பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு அமையும்,இடமாற்றம் அமையும். குடியிருக்கும் வீடு, தொழில் ஸ்தாபனம், பணிபுரியும் இடம், அலுவலகம் இவற்றில் மாற்றங்கள் வர வாய்ப்பு அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்புகள் வந்து அமையும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும், சோர்வும் அதிகரித்துக் காணப்படும்.

எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணம் அல்லது பொருள் கையில் தங்காது. ஒன்று விரயமாகும் அல்லது செலவாகும் அல்லது முதலீடாகும். எனவே தேவையற்ற விரயங்களைத் தவிர்த்தல் நலமாகும். மறைமுகமான எதிரிகளால் நமக்கு தேவையற்ற பிரச்சனைகளும், இடைஞ்சல்களும் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருந்தாலும் சற்று பற்றாக் குறையாகவே இருந்து வரும். கொடுக்கல் வாங்கல்களில் சற்று கவனமுடன் செயல்படுதல் வேண்டும்.

எடுக்கும் காரியங்களில் சற்று தடை ஏற்பட்டாலும் அதனால் நன்மைகள் அதிகமாகும். புதிய முயற்சிகள் சற்று சுமாராகவே இருந்து வரும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மையும் அவர்களுக்கு வேலை திருமனம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் புது வரவுக்கான போராட்டம் இருந்தாலும் புது வரவால் மகிழ்ச்சி அமையும். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும். அல்லது வீடு மராமத்து வண்டி பழுது பார்ப்பு இவற்றில் தேவையற்ற செலவினங்கள் வந்து சேரும்.

வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுதல் அவசியம் காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். புது நண்பர்கள் வட்டாரம் உருவாகும். வீடு வாடகை அல்லது ஒத்திக்கு விடவேண்டியது வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதில் நிறைய தடைகளும், சிக்கல்களும் வந்து சேரும். உங்கலை பற்றிய வீண் வதந்திகள் உலவிய வண்னம் இருக்கும். அதிலும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களை பற்றி பேசுவதோ கூடாது. எதிலும் நிதானம் தேவை. தொழில் ரீதியாக தேவையற்ற போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியது வரும்.

உடன் பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். அவர்களால் இதுவரை இருந்து வந்த நட்பும் பாசமும் போராட்டமாக மாறிவரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் எப்பொழுதும் எச்சரிக்கை தேவை. கால்நடைகள், காலி நிலங்கள், மனைகள் வாங்குவதில் அதிக எச்சரிக்கை தேவை. பாஸ்போர்ட் விசா வருவதில் இருந்த தடைகள் விலகி அவைகள் நல்லவிதமாக வந்து சேரும். 

சுய தொழில்களில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். லாபம்ம் வருவது போல் இருந்தாலும் அந்த லாபம் கைக்கு வருவதில் தடையேற்படும். வரவுகள் ஆறு போல் இருந்தாலும் செலவுகள் கடல் போல் ஆகிக் கொண்டே இருக்கும். இருப்பினும் தெய்வ அனு கூலத்தால் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். கூட்டுத் தொழில்கள் செய்ய புது தொழில் கூட்டாளிகள் வந்து சேர்வர். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களது நிரந்தர பழக்க வழக்கங்களை மேற் கொள்ளக் கூடாது. முக்கிய பொறுப்புகளைச் செயல்படுத்துவதில் தடையும் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் நிறைய தடைகளும் இருந்து வரும். சந்தேகம் அவநம்பிக்கை தடுமாற்றம் இவற்றை தூக்கி எறிந்து வெற்றி என்ற ஒன்றை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுதல் வேண்டும்.


வேலை அல்லது, உத்யோகம் (JOB)

உங்களது ராசிக்கு 12ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் வேலை கிடைப்பதில் சற்று போராட்டம் தான். முதலில் கிடைத்த வேலையில் சேர்ந்து கொண்டு பின்பு விரும்பிய வேலைக்கு முயற்சி செய்யவும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை வந்தாலும் அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. உத்யோக உயர்வில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதுவும் சற்று போராடியே பெற வேண்டிய சூழ்நிலை அமையும். உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அன்றைய வேலையை அன்றே முடித்தால் நன்மை ஏற்படும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சிறு தொழில்கள் சாதகமாக இருந்து வரும். சாலையோர வியாபாரம் லாபகரமாக இருந்து வரும். சுயத் தொழில்கள் கைவினைப் பொருட்கள் உற்பத்தி இவற்றில் சற்று லாபம் குறைந்து காணப்படும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், தகவல் தொடர்பு, போக்குவரத்து சற்று சுமாராக இருந்து வரும். இரும்பு, எஃகு, சிமிண்ட், உரம், பூச்சி மருந்துகள், நிலக்கரி போன்ற துறைகள் லாபகரமாகவும், கனிமவளங்கள்:, பெட்ரோலியம், எரிவாயு, எண்ணெய் உற்பத்தி துறைகள் சற்று லாபம் குறைந்தும் காணப்படும். உணவு, ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் துறைகள் லாபகரமாகவும் ரேஸ், லாட்டரி, கிளப், சுற்றுலாத் துறைகள் நல்ல லாபகரமாகவும் பங்குச் சந்தை ஏற்றமாகவும் இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள் ஓரளவு லாபகரமாக அமையும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உற்பத்தியை சற்று குறைத்தல் நலம். கப்பல், படகு, நீர், மீன் பிடித் தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். திரையரங்கம், திரைப்பட விநியோகம், சினிமாத் துறை சாதகமாக இருந்து வரும். கமிஷன், ஏஜென்ஸிஸ், கான்ட்ராக்ட், கன்சல்டன்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் சற்று சாதகமாக அமையும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் சாதகமாக இருக்கும். விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் சுமாராகவும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் கூட்டுத் தொழிலில் தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்படும். பத்திரிக்கை, எழுத்து, படைப்பு தொழில்கள் சாதகமாக இருந்து வரும். 


விவசாயம்

புதிதாக விளை நிலங்களை வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த உற்பத்தி அமையும். அதற்கேற்ற வருமானம் சற்று குறைந்து காணப்படும். மான்யங்கள் வருவதில் சற்று கால தாமதம் ஏற்படும். காய்கறிகள், பழ வகைகளில் லாபமும் கரும்பு, வாழை, நெல், கோதுமை இவற்றில் லாபம் கூடியும் பயறு வகைகள் எண்ணெய் வித்துக்களில் சற்று லாபம் குறைந்தும் காணப்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். 


அரசியல்

அரசியலில் எதிர்பார்த்த பதவி உயர்வுகளில் சற்று தடை ஏற்பட்டாலும் பின்னால் நற்பலன்கள் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவு குறைந்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படும். எதிரிகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். விட்டதை பிடிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும். பண வரவுகள் சற்று குறைவாக இருந்து வரும். உங்களுடைய தனித் தன்மையை, தலைமை பண்பை ஆளும் தன்மையை நன்கு வளர்த்து கொள்ளல் அவசியம். 


கலை

உங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தினால் மட்டுமே சிறப்பாக சமூகத்தில் வலம் வர முடியும். போட்டி, பொறாமை இவற்றை முறியடித்து வெற்றி பெறுதல் வேண்டும். ஜோதிடம், சினிமா, பாட்டு, நாடகம், இசை, நாட்டியம், நடனம், சிற்பம் இவற்றால் ஓரளவு நன்மை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். அவற்றால் ஓரளவு லாபம் ஏற்படும். எப்பொழுதும் சுறு சுறுப்பாக இயங்குதல் வேண்டும். 


மாணவர்கள்

படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் நலம். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். பரிசும் பட்டமும் ஒரு சிலருக்கு அமையும். கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கச் சற்று போராட வேண்டியது வரும்.


பெண்கள்

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க சற்று போராட வேண்டியது வரும். எதிர்பார்த்த வேலை அமைவதில் சற்று தடையேற்படும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருக்கும் திருமணம் போன்ற சுபாகாரியங்கள் நடைபெறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் அமையும். விவகாரத்து கேட்டவர்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை கொள்ளல் வேண்டும். அடிக்கடி புதிய, ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அமையும். குடும்பத்தில் புது வரவால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ தேவையற்ற விஷயங்களைப் பேசுவதோ கூடாது. அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். 


உடல் ஆரோக்யம்

தொடர்ந்து மருந்து மாத்திரைகள் தேவையில்லாமல் சாப்பிட வேண்டியது வரும். சர்க்கரை, உப்பு சத்து இருப்பின் அதை கட்டுக்குள்: வைக்கவும், கண் அடிவயிறு, கால் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் பார்த்து கொள்ளல் வேண்டும். உடலில் சிறு பிரச்சனை என்றாலும் நல்ல மருத்துவரை அணுகுதல் வேண்டும். 


சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்திப் பலன்கள் (மூலம், பூராடம் உத்தராடம், கேட்டை)


மூலம்

சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணவரவு, பொருள் வரவு அதிகரித்துக் காணப்படும். அதே சமயம் தேவையற்ற விரயங்களும், கஷ்டங்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த வெற்றி அமையும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். அதை நல்லவிதமாக பயன்படுத்தவில்லை என்றால் விரயமாகும். வேலைக்கு முயற்சிக்க கடுமையாக போராட வேண்டி வரும். குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டுமே நம்பினால் நல்ல பலன் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக கவனம் தேவை. கலைத்துறையில் நல்ல லாபம் அமையும். சிறு தொழில்கள், உற்பத்தி சார்ந்த துறைகள் சாதகமாகவும் ஏற்றுமதி இறக்குமதி சுமாராகவும் இருந்து வரும். விருந்து சுற்றுலா இவைகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும். அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருந்து வரும். 


பூராடம்

கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள், அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலை கிடைப்பதில் சற்று தாமதமாகும். பார்க்கும் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிதல் கூடாது. குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். குழந்தைகளால் நன்மையும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் அமையும். பெரிய மனிதர்களின் நட்பும் உறவும் அமையும். அவர்களால் சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதைய்ம் உயர்ந்து காணப்படும். அரசியல் வாழ்வு சிறப்பாக இருந்து வரும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். நல்ல உணவு உடை, ஆபரணங்கள், உழைக்காமலேயே பணவரவும் இக்காலங்களில் அமைய வாய்ப்பு ஏற்படும்.


உத்தராடம்

தேவையயில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அரசு மற்றும் அரசு சார்ந்த விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை. விபத்து ஆப்ரேஷன் போன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடந்தேறும். எனவே தெய்வ அனு கூலத்தை கூட்டுதல் வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய தொழில்கள் தொடங்குவதில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளால் மன நிம்மதியற்ற சூழ்நிலை அமையும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நண்பர்களுடன் உறவினர்களும் ஒரு நேரம் சகாயமாகவும், ஒரு நேரம் பாதகமாகவும் நடந்து கொள்வர். தொழிலில் புதிய முயற்சிகளைப் புகுத்துவதில் அதிகக் கவனம் தேவை.


கேட்டை

இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கொடுத்துள்ள பணம் பொருள்கள் தவணை முறையில் வந்து சேரும். விசா, பாஸ்போர்ட், விஷயங்கள் சாதகமாக அமையும். வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக அமையும். உறவினர்களால் நன்மைகள் அமையும். 


உத்தராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனவரவும், பொருள் வரவும் ஒரு சிலருக்கு அமையும். முன்னோர்கள் சொத்துக்கள், கணவன் அல்லது மனைவி மூலம் எதிர்பாராத வருவாய் ஒரு சிலருக்கு வந்து சேரும். அதே சமயம் அரசாங்க விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. அரசின் சட்டதிட்டங்களை ஓரளவுக்கு மதித்து நடக்கப் பழக வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் போடுவதோ கூடாது. தேவையற்ற விரயச் செயல்கள், தண்டச் செலவுகள், வைத்யச் செலவுகள் வந்து சேரும். எனவே குல தெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு இக்காலங்களில் அவசியம் செய்தல் வேண்டும். அதிக அலைச்சல் குறைந்த வருவாய் உழைப்புகேற்ற ஊதியம் இல்லாமல் இவை எல்லாம் இக்காலங்களில் நடந்தேறும். வேலையாட்களால் தொழிலாளர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியது வரும். கனவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள்: சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன காதல் திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள், தோட்டம், நிலபுலன்கள், எஸ்டேட்கள் வாங்க அவரவர் பிறந்த ஜாதகபடி அமையும். மேலும் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெற ஏதுவான காலமாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர். தாயாரால் எதிர்பாராத உதவியும் நன்மைகளும் கிட்டும். வேலை பார்ப்பவர்களுக்கு வேலையில் ஒரு திருப்தியற்ற தனமையே நிலவும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. புதிய வேலை கிடைக்க தாமதம் ஆகும். வேலையில் எச்சரிக்கை தேவை. கூட்டுத் தொழிலுக்கு கூட்டாளிகள் தாமாகவே வந்து சேருவர். 


அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

கல்வி கற்பதில் இருந்த தடை நீங்கி உயர் கல்வி பயில்வதற்கான சந்தர்ப்பம் அமையும். எதிர் பார்த்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் நல்ல மதிப்பெண்கள் வர வாய்ப்பு அமையும். எதையும் தைரியமாகவும், துணிவுடனும் சந்திக்கும் ஆற்றல் இயற்கையாகவே வந்து சேரும். காலி மனை, வீடு, வண்டி, வாகனம் வாங்க சரியான தருணம் இது. தாயாரால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும். உற்பத்தி சார்ந்த துறைகளில் நல்ல லாபம் அதிகரித்து காணப்படும். வேலையில் எப்பொழுதும் ஒரு திருப்தியற்ற தன்மை காணப்படும். வேறு வேலைக்கு அவசரப்படுதல் கூடாது. பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடவும் கூடாது. சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் நடந்தேறும். அவர்களால் உங்களுக்கு நன்மையும் கிட்டும். குழந்தை பாக்யத்தில் தடை ஏற்படும். விருந்து கேளிக்கைகளில் விருப்பம் இராது. பங்கு சந்தை சாதகமாக இராது. அரசியல் வாழ்வு சற்று சுமாரகவே இருந்து வரும்.

by Swathi   on 29 Nov 2016  5 Comments
Tags: மகரம் ராசி   மகர ராசி பலன்கள்   மகரம் ராசி பலன்கள்   Makara Rasi Palangal   Makaram Rasi Palangal   Sani Peyarchi Palangal     
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகர லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகர லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
கருத்துகள்
03-Jul-2019 13:42:18 தேவி maligai said : Report Abuse
"Nice article, very useful. I think these tips help me to the best one. Thanks"
 
23-Jan-2018 17:38:25 s.velmurugan said : Report Abuse
Date of birth 13 .7 .1987 மகர rasi aane matham enna ku எண்ணப்படி இருக்கு சார் romba கஷ்டமா இருக்கு சார் குடும்பத்துல enna கு vellai உம edaika மடங்கு sïர் konjam padhu sollunga enna pannanum
 
17-Jan-2018 12:37:17 suriya said : Report Abuse
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் அவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறுமா?
 
19-Dec-2017 07:01:19 பெரியண்ணன் said : Report Abuse
ரியல் எஸ்டேட் டெவெலப்மென்ட் எப்படி இருக்கும்
 
18-Dec-2017 11:59:02 S. RAJASEKAR said : Report Abuse
மகரராசி.உத்ராடம். நாளை. சனிப்பெயர்ச்சி எப்படி. இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.