LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

உத்தரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2

(டோ, ப, பா, பி, பூ, வி, ள, ட, பே, போ என்ற எழுத்துகளில் பெயரை முதல் எழுத்தாக கொண்டவர்களும் புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தி வரும்

வான மண்டலத்தில் 6வது ராசியாக வலம் வரும் கன்னி ராசியின் அதிபதியான புதன் உங்கள் ராசிநாதன் ஆவார். கல்விக்கும் வித்தைக்கும் ஞானத்துக்கும் அறிவிக்கும் ஆற்றலுக்குமான புதபகவான் வீட்டில் பிறந்த நீங்கள் எதையும் நின்று நிதானித்து செயல்படும் ஆற்றல் உடையவர்கள். எந்த காரியத்தையும் பல முறை யோசித்து செயல்படும் நீங்கள் விரைவாகவும் வேகமாகவும் செயல்படுவீர்கள். மாற்றம் என்ற சொல்லுக்கு நீங்களே எடுத்துக் காட்டாகும். எண்ணிய எதையும் செய்யும் ஆற்றலும் துணிச்சலும் உடைய நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

அறிவிக்கும் சேமிப்புக்கும் சிக்கனத்திற்கும் உரியவரான நீங்கள் தேவையற்ற செலவினங்களை குறைத்து தேவைக்கு மட்டும் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள் மாற்றம் என்ற கருத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய உங்களுக்கு இந்த சனிபகவான் இதுவரை உங்களுடைய ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ம் இடத்தில் தனசு ராசியில் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ பயமோ கொள்ள வேண்டாம். 

உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும் 6ம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் 4ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும். மேலும் 4ம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்கும், 6ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவதால் வேலையில் கவனம் தேவை. 5ம் இடம் என்பது பார்க்கும் வேலையை விட்டு வெளியே வருவது அல்லது வெளியேற்றபடுவது என்பதைக் குறிக்கும். எனவே அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும்.

சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்படும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார். எனவே உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்தல் வேண்டும். அப்பொழுது தான் வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் தோன்றி வேலையை விட வேண்டியது வரும்.

உங்களது லக்னத்தின் 2ம் வீட்டிற்கு அதிபதி சுக்ரன் ஆவார். அதனால் இதுவரை இருந்த வந்த பொருளாதார தேக்க நிலை மாறி பணவரவும் பொருள் வரவும் அதிகரிக்கும். இதுவரை கையை விட்டுப்போன பொருட்கள் நகைகள் பத்திரங்கள் திரும்ப வீடு வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியமும் அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை மேம்படும். சுறுசுறுப்பும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மந்தம் தயக்கம், குழப்பம், தேக்கம், தடுமாற்றம் மாறி பொறுப்புணர்வுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். 

புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது சற்று கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. சகோதர சகோதரர்களில் அன்பும் ஆதரவும் இருந்தாலும் அவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும் நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். தாயாரின் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. குறிப்பாக உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் குறிப்பாக சளித் தொல்லையால் அவதிப்பட நேரிடும். 

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் அதிகக் கவனம் தேவை. அதில் மகிழ்ச்சியற்ற செயல்கள் நடந்தேறும். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் இனிதே நடந்தேறும். நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். வழக்குகள் சாதகமாக இராது. தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும்.

கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். வலுவான போராட்டத்திற்கு பின் காதல் நிறைவேறும் காதலால் தேவையற்ற மன வருத்தங்களும் வேதனைகளும் வந்து சேரும். தொழில் முதலீட்டில் அதிக கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. தொழிலில் கூட்டாளிகளுக்கு ஆக உழைக்க வேண்டி வரும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் இருந்து வரும். கடை, தொழில் நிலம் தோட்டம், பண்னை, பயிர் செய்யும் நிலம் வாங்கவும் கடை, அலுவலக கட்டிடம் கட்டவும் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் உருவாகும். எதையும் தள்ளிப் போடுவது ஒத்திப் போடுவது கூடாது. அன்றைய வேலைகளை அன்றே செய்து முடிக்க வேண்டும்.

 

வேலை அல்லது உத்யோகம் (JOB)

உங்களது ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் ஒரு சிலருக்கு வேலையில் திருப்தி இல்லாமல் பார்க்கும் வேலையை விட்டுவிட வாய்ப்பு அமையும் எனவே அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டு விடுதல் கூடாது. வேலை நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். உங்களுடைய பொறுப்பு உணர்ச்சிக்கு சற்று சோதனை ஆன காலமாகும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு ஒரு சில இழுபறிக்கு பின் ஈடேறும். அரசு வேலை கிடைக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் இதில் எதிர்பார்த்த திருப்தி இராது.


தொழில் (BUSINESS) வியாபாரம் (JOB)

உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் நல்ல லாபம் ஏற்படும் சிறு தொழில்கள் ஓரளவு லாபகரமாக இருக்கும். சுய தொழில்கள் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும். இரும்பு எஃகு, சிமெண்ட், நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் துறை சற்று லாபகரமாக இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸீஸ், புரோக்கர்ஸ், கான்ட்ரக்ட், கன்சல்டன்சி, கட்டுமானம் சற்று லாபம் குறைந்து காணப்படும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, வண்டி வாகனங்கள் உற்பத்தி நல்ல லாபகரமாக அமையும். பெட்ரோல், டீசல், நிலக்கரி இயற்கை எரிவாயு லாபகரமாகவும், ரேஸ், லாட்டரி, சூதாட்டம் ஆரம்பத்தில் லாபம் குறைந்தும் பின்னால் லாபகரமாகவும் இருக்கும். பங்குச் சந்தை ஆரம்பத்தில் லாபம் அதிகரிக்கும் பின்னால் லாபம் குறைந்தும் காணப்படும். ஆடை, ஆபரணங்கள், பிளாஸ்டிக் தொழில்கள் லாபகரமாகவும் அமையும். மருத்துவம், விஞ்ஞானம், நிர்வாகம் நல்ல சாதகமாக அமையும். உணவு, ஓட்டல், சுற்றுலாத் துறைகள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பள்ளி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். விதை, உரத் தொழில் சற்று லாபம் அதிகரிக்கும். உப்பு நீர், கப்பல், மீன் பிடித் தொழில்கள் நல்ல லாபகரமாக அமையும். முகவர்கள், வியாபாரப் பிரதிநிதிகள் மிக அதிக பலன் அடைவார்கள். மருந்து பொறியியல், மருத்துவ பொருட்கள் சற்று லாபம் குறைந்து காணப்படும். பத்திரிக்கை, எழுத்து படைப்பு, உற்பத்தி, தகவல் தொடர்பு சீரும் சிறப்புமாக அமையும்.


விவசாயம்

புதிய நிலபுலன்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். பயிர் வளம் ஓரளவு நல்ல செழித்து வளரும். லாபம் சற்று அதிகரித்து காணப்படும். கரும்பு, நெல், கோதுமை, சோளம், பருப்பு வகைகள் சற்று லாபம் அதிகரிக்கும். பழங்கள் காய்கறிகள் நல்ல வருமானம் தருபவையாக இருக்கும். வாழை, தென்னை, கடலை மற்றும் பருபயிர்கள் விளைச்சல்கள் அதிகரித்து காணப்படும். 


அரசியல்

அரசியல் வாழ்வு சற்று சுமாராக இருந்து வரும், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே போதுமானதாகும். எதிரிகள் அதிகரித்த வண்ணம் இருப்பர். தேவையற்ற போட்டிகளைத் தவிர்த்தல் நலம். அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க தேவையான தகுதிகளை வளர்த்து கொள்ளல் வேண்டும். சட்டச் சிக்கல்களில் மாட்டமலும், எதையும் தாக்குபிடிக்கும் சக்தி, உடனுக்குடன் உடன் முடிவெடுக்கும் திறமை நீங்கள் வளர்த்து கொள்ளல் வேண்டும். சொத்துகள் நிறைய சேரும் தருணம். 


கலை

உங்களது முழு திறமையை வெளிபடுத்தினால் மட்டுமே உங்களால் பிரகாசிக்க முடியும். உங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்படுதல் வேண்டும். ஜோதிடம் இசை, நடனம், நாட்டியம், ஒவியம், சிற்பத்துறையில் இருப்பவர்களுக்கு சற்று சுமாரான காலமாகும். ஒரு சிலருக்கு பரிசும் பதவிகளும் தாமதமாக வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு லாபகரமாக இருக்காது. சினிமாத்துறை சற்று சுமாராக இருந்து வரும். 


மாணவர்கள்

நல்ல மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைக்க வேண்டியது வரும். மந்தமும், சலிப்பும் படிப்பு விஷயத்தில் தோன்றாமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்குதல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். விளையாட்டுகளில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்த கூடாது. கல்விக் கடன் கிடைப்பதில் இழுபறியாக இருந்து வரும். கூடிய வரை தேவையற்ற நட்பு வட்டாரத்தை தவிர்க்கவும். 


பெண்கள்

வேலை தேடுபவர்களுக்கு முதலில் கிடைத்த வேலையில் அமரவும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை மற்றும் அமைதியற்ற நிலை ஏற்பட்டாலும் வெறுப்பு இல்லாமல் வேலையைப் பார்த்தல் வேண்டும். வேலையில் அடிக்கடி லீவு போட வேண்டி வரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடக் கூடாது. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் ஒரு சிலருக்கு அமையும், படிப்பு நன்கு அமையும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவு சற்று சந்தோஷமாக இருக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். குழந்தை பாக்யத்தில் நிறைய தடைகள் ஏற்பட்டு. விலகும். குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. உறவினர்களால் நன்மையும், சக ஊழியர்களால் எதிர்பாராத நன்மையும் ஏற்படும். கணவனின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். 


உடல் ஆரோக்யம்

உடம்பில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிவயிறு, பாதம் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் வராமல் நிறைய ஓய்வு எடுத்து கொள்ளல்; வேண்டும். நேரத்திற்கு உணவும் மருந்தும் உட்கொள்ளுதல் வேண்டும்.


சனி பகவானின் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை)


மூலம்

சனிபகவான் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றமும் உயர்வும் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றியும், அதனால் வெலையும் பரிசும், பணமும் ஆரம்பத்தில் அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கொடுத்த பனம் பொருள் வந்து சேரும். உடல் ஆரோக்யத்தில் பிரச்சனைகள் வந்து பேகும். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். எழுத்துத் தேர்வில் வெற்றி கிடைக்கும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். வீட்டு வளர்ப்பு பிராணிகளால் பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் நட்பும், ஒத்துழைப்பும் நன்கு கிட்டும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராக இருந்து வரும். விவசாயம் சாதகமாக இருக்கும். பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். விருந்து கேளிக்கைகளில் மன ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையில் எதிர்பார்த்த பண வரவும், பொருள் வரவும் அமையும். அரசியல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.


பூராடம்

சனி பகவான் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார வளம் சற்று அதிகரிக்கும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். இதுவரை விலகிச் சென்ற உறவுகள் தாமாகவே வந்து சேர வாய்ப்பு அமையும். கொடுத்த பணம் பொருள் வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். சொத்துக்கள் தாமாகவே வந்து சேரும். நல்ல வசதியான வாழ்க்கை உருவாவதற்கு உரிய சூழ்நிலை அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். பங்குச் சந்தையில் சற்று லாபம் அதிகரிக்கும். சுயதொழில்கள் சற்று லாபகரமாகவும் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று தடுமாற்றத்துடன் இருந்து வரும். தள்ளிப் போனத் திருமணம் நடைபெறும் காலம். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை ஒரு சிலருக்கு அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். பாஸ்போர்ட், விசா போன்றவை எளிதில் கிடைக்கும்.


உத்தராடம்

அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய அளவில் தொழிலில் முதலீடு செய்ய கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தந்தையாரின் உடல் நலத்தில் அதிக அக்கறைத் தேவை. இதுவரை தள்ளி போன வெளிநாட்டு பயணம் இனிதே நடந்தேறும். யாருக்கும் தேவை இல்லாமல் ஜாமீன் போன்ற விஷயங்களில் கையெழுத்து போடுவது கூடாது. குழந்தைகள் உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். குடும்பத்தில் தேவை இல்லாத சண்டை சச்சரவுகளை தவிர்த்தல் நலம். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இராது. சுய தொழில் சற்று சுமாராக இருந்து வரும். அரசியலில் எதிர்பார்த்த உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம், மனை மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். உழைப்புகேற்ற ஊதியம் இராது.


கேட்டை 

எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிட்டும். கையில் பணப்புழக்கம் சரளமாகப் புரளும் நேரம். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும்.


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உத்தர நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சனிபகவான் 4ம் இடத்தில் சஞ்சரிப்பது ஓரளவு சுமாரான பலன் தரும். இடம், மனை, வீடு, வண்டி, வாகனங்கள் இவற்றில் முதலிடு செய்ய வேண்டி வரும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கரைத் தேவை. வேலையில் தேவையற்ற மன உலைச்சல்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதில் தடை ஏற்படும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும். குழந்தைக்காக தெய்வ அனுகூலத்தை கூட்டவும் கொடுத்த பணம், பொருள் வருவதில் சற்று தாமதம் ஏற்படும். விவாகரத்து எளிதில் கிடைக்கும் தருணம். பங்கு சந்தை லாபகரமாக இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். நீண்ட தூரப் பிரயாணம் ஏற்படும் வெளிநாட்டு வாய்ப்பு வந்து அமையும். தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உங்களது எண்ணங்களும், ஆசைகளும் நிறைவேறும் காலம் இதுவரை நடவாமல் தள்ளி போன சுபகாரியங்கள் நடக்கும் காலம். தாயாரால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வீடு, வண்டி, வாகனங்கள் நிலம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பான காலமாகும். வேலையில் முன்னேற்றம் காணும் காலம். வெளியூர், வெளிநாடு செல்லவும் மற்றும் உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். அந்நிய மனிதர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசியல் மற்றும் சுயதொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். எப்பொழுதும் உற்சாகதுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்குவீர்கள்.


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

உங்களுடைய பெயருக்கும் புகழுக்கும் உயர்வுக்கும் கடுமையாக உழைக்கும் காலம். சகோதர சகோதரிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அதே சமயம் மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். தேவையற்ற முயற்சிகளில் இறங்கக் கூடாது. தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. போக்குவரத்து வண்டி, வாகனங்களில் எச்சரிக்கை தேவை. பத்திரங்கள் நகைகள் இவைகளைப் பத்திரமாக கையாள வேண்டும். தேவையற்ற ஜாமீன் கையெழுத்து கூடாது. நேரம் என்ற ஒன்றை சரியாக கனித்து செயல்பட வேண்டும். பெண் வேலையாட்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விஷயத்தில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் பரவுகின்ற காலம். மனதில் உறுதியாகவும் தைரியமாகவும் எந்த ஒரு காரியத்திலும் இறங்க வேண்டும். தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிநாடுப் பயணங்களில் அதிக முன் எச்சரிக்கை தேவை.

by Swathi   on 29 Nov 2016  15 Comments
Tags: கன்னி ராசி பலன்கள்   கன்னி ராசி   சனிப்பெயர்ச்சி பலன்கள்   Sani Peyarchi   Sani Peyarchi Palangal   Kanni Rasi     
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கும்ப ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மகர ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - துலாம் ராசி பலன்கள் (2017 - 2020)
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
கருத்துகள்
07-Dec-2019 07:52:47 jayachithra said : Report Abuse
சார் வண்ணக்கம் நான் அஸ்தம் நட்சத்திரம் கண்ணிய ராசி என் வயது நாற்பது எனக்கு அரசு உதியகம் வருமா வராத என் எதிர்காலம் எப்படி இறக்கும் சொந்த வீடு அமையுமா எப்போ என் பிள்ளைகள் படிப்பு எப்பிடி இருக்கும்
 
23-Sep-2019 14:59:13 பாலமுருகன் said : Report Abuse
வணக்கம் எனது பெயர் பாலமுருகன் பிறந்த நாள் 16.3.1986 இரும்பு சம்மந்தப்பட்ட வேலை சொந்தமாக தொழில் செய்கிறேன் சற்று சுமாராகத்தான் இருக்கிறது இது சம்பந்தமாக சில அறிவுரைகள் கூறவும்
 
10-Sep-2019 06:53:04 jothi said : Report Abuse
வணக்கம் சார்,என்னுடைய பெயர் ஜோதி நான் ஒருவரை திருமணம் மணக்க ஆசை படுகிறேன் ஆனால் எங்களுக்கு ஜாதகம் பொருத்தம் வரவில்லை அதற்கு என்ன செய்வது சார் அவருடைய பெயர் ராஜவேல்
 
02-Sep-2019 10:27:49 ஸ்.ஷர்மிளா devi said : Report Abuse
நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் ௧௯.௧.௧௯௯௮.காலை ௫.௪௫.௨௦௧௯ ஆரம்பித்தத்திலிருந்தே படிப்பு, வேலை, குடும்பம்,காதல்,உடல் நிலை எல்லாத்திலயும் டோவ்ன் ஆகிட்டேன் எதிலேயும் நிம்மதி இல்ல , தூக்கம் இல்ல, வெளிய சொல்ல முடியாத பல கஷ்டத்தை அனுபவிக்கிரன். எனக்கு எப்போ நல்லது நடக்கும்.
 
11-Jul-2019 06:50:22 Subburaj said : Report Abuse
How to join the job in my future எண்டேச்வயர்ஸ் 9443544531
 
25-Mar-2019 11:52:48 கோமதி said : Report Abuse
நான் நல்ல வேலை பார்த்து கொண்டிருந்தேன் அங்கே பெரிய அதிகாரிகளால் பிரச்சனை ஏற்பட்டு வெளியே வந்து விட்டேன் இனி நல்ல வெள்ளை கிடைக்குமா என்னோட பிறந்த தேதி 16 ஜூலை 1983 என்னோட மனசெல்லாம் எதிர்காலத்தை பத்திதான் கவலையாக இருக்கு மனக்கஷ்டம் ரொம்ப இருக்கு. எனக்கு எப்போது நல்ல நேரம் வரும் என்னோட வீட்டுக்காரரும் கஷ்டமான வேலை பார்க்கிறார் எனக்கு நல்ல வேலை கிடைக்குமா எனக்கு மனக்கஷ்டம் எப்போது தீரும் நல்ல நேரம் எப்போது வரும் எனக்கு ரிப்ளை பண்ணவும்
 
08-Feb-2018 09:11:47 N.பிரகாஷ் said : Report Abuse
Sir, நான் கன்னி ராசி, உத்தரம் நட்சத்திரம், மிதுன லக்கினம், 29.03.1994, 11.15am, எனக்கு வேலை வாய்ப்பு சரியா அமைய மாட்டுது, கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருக்கேன், இப்போ கல்யாணம் யோகம் இல்லன்னு சொல்ரங்க, ஏதும் பரிகாரம் செய்யலாமா? சரி பண்ண முடியுமா
 
22-Dec-2017 03:15:24 ragini said : Report Abuse
பிரதி தேதி ௯.௦௪.௧௯௯௬ நேரம் மாலை ௭.௨௦ ஏன் லைப் எப்படி இருக்கும் நான் எந்த வயதில் முண்ணேற்றம் அடைவேன் ஏன் திருமண லைப் எப்படி இருக்கும்
 
22-Dec-2017 03:14:57 ragini said : Report Abuse
பிரதி தேதி ௯.௦௪.௧௯௯௬ நேரம் மாலை ௭.௨௦ ஏன் லைப் எப்படி இருக்கும் நான் எந்த வயதில் முண்ணேற்றம் அடைவேன் ஏன் திருமண லைப் எப்படி இருக்கும்
 
21-Dec-2017 18:58:39 Bhuvana said : Report Abuse
Dob.28 /05 /1996 love pandren vitula solitan mrge ku pesa poranga en future life epdi irukum Sollunga.. Romba problems varuma marriage LA birth time 4 :30am
 
21-Dec-2017 18:58:15 Bhuvana said : Report Abuse
Dob.28 /05 /1996 love pandren vitula solitan mrge ku pesa poranga en future life epdi irukum Sollunga.. Romba problems varuma marriage LA birth time 4 :30am
 
19-Dec-2017 08:02:03 எம்.சத்யா said : Report Abuse
அய்யா, என் பிறந்த தேதி 25 .09.2017 என் எதிர் காலம் எப்படி உள்ளது என்று எனக்கு தெரிவிக்கவும்.
 
13-Feb-2017 03:49:44 ரம்.THIYAGARAJAN said : Report Abuse
பிரதி தேதி ௦௬/௦௧/௧௯௬௪ என் எதிர்காலம் எப்படி இருக்கும் நன் என்ன தொழில் செய்யலாம் எப்பொழுது செய்யலாம் பிறந்த நேரம் காலை ௬.௩௦ நிமிடம்
 
27-Jan-2017 03:24:39 v.ராஜ ராஜ சோழன் said : Report Abuse
என் பெயர்.ராஜ ராஜ சோழன் பிறந்த நாள். 15.1.1988 நேரம் 11.30 பிறந்த ஊர். மன்னார்குடி. எனக்கு திருமணம் ஆகி 1 1/2 வருடம் ஆகிறது ஆனால் நான் சிங்கப்பூர் ல் இருக்கிறேன்் என மனைவியை இங்கு அழைத்து வரமுடியுமா அவங்களுக்கு நான் இரூக்கும் ஊரில் வேலை கிடைக்குமா
 
21-Jan-2017 06:54:47 N .அனல் said : Report Abuse
வணக்கம் எனது பெயர்: N. அனல், பிறந்த நேரம் 02 : 10 காலை நேரம், பிறந்த தினம்:14.01.1985 பிறந்த ஊர்: நெய்வேலி என் ஜாதகப்படி எனக்கு அரசு வேலை கிடைக்குமா தனியார் வேலை கிடைக்குமா திருமணம் நடைபெறுமா எந்த வயதில் இது இரண்டும் நடைபெறும் அதற்க்கு ஏதேனும் பரிகாரம் செய்யவேண்டுமா என்று கூறுங்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.