(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட நல்லவரும், பெற்றோரை அன்போடு பேணிக்காப்பவரும், தருமவானும், இரக்க குணமும் உடையவரான கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயரச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு – துலா இராசிக்கு ஆவணி 27 இல் மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் காலம். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் வருமானங்கள் பெருகி, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். தேவதை போன்ற அழகிய மனைவி அமைவாள். குழலைவிட இனிதான குரலுடைய குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் பெருகும். தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும். அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும் புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றம் அடைவர். அந்தஸ்து, கௌரவமும் கூடும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரிகளுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுச் சேவையில் ஈடுபட்டோருக்கு இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். மக்கள் பணியில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவிகள் தேடிவரும். அதன் காரணமாக மதிப்பும், மரியாதையும் கூடும். சிலருக்கு தெய்வீக அருளால் கோவிலில் அறங்காவலர் போன்ற பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தர்ம காரியங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும்.
குரு 5 ஆம் பார்வையாக ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து குடும்ப ஆரோக்கியம் குறையும். உடன் பிறப்புக்களுக்கு யோகம் ஏற்பட்டு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். அன்பு தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். உங்கள் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும்.
குரு 7 ஆம் பார்வையாக ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தீர்க்க முடியாது என்று நினைத்த நோய்கள் மருத்துவர்கள் உதவியுடன் நிரந்தரமாக சரியாகும். மங்கையருக்கு நிச்சியக்கப்பட்ட மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். நல்ல செய்திகள் கிடைக்கும்.
குரு தனது 9 ஆம் பார்வையால் கர்ம பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல உயர்வான வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, சிறப்பான பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் குவியும். புதிய வீடு, மனை வாங்கும் யோகங்களும் அமையும். விவசாயிகள், தொழில் துறையைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பர்.
கன்னி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக இடமாற்றம் அமையும். அடிக்கடி விடுப்பு எடுக்க சந்தர்ப்பம் ஏற்படுமா வரும். உயர் அதிகாரிகளிடம் சற்று கவனத்துடன் நடந்து கொள்ளல் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்தாலும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய கம்பெனிக்கு பேப்பர் போடுவது நற்பலன் அளிக்கும், படிக்காத வேலை என்றாலும் சற்று பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியம்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
கமிஷன், ஏஜென்ஸி, போக்குவரத்து, தகவல் தொடர்பு எதிர்பார்த்த லாபம் அமையும். பங்குச்சந்தையில் அதிகக் கவனம் தேவை. இரும்பு, எஃகு, சிமெண்ட், கெமிக்கல்ஸ், ஆடை ஆபரணம், பிளாஸ்டிக், தொழில், எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரியல் எஸ்டேட்டில், கன்சல்டன்ஸி ஏற்றம் பெறும். சிறு தொழில்கள், உற்பத்தி சார்ந்த தொழில் துறைகள் ஏற்றம் பெறும். தெருவோர வியாபாரம் சாதகமாக இருக்கும். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை, விளம்பரத் துறைகள் சற்று மந்தமாகவே இருக்கும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவம் தேவை. தொழில் புதிய பங்குதாரர்கள் இணைப்பதில் சற்று பொறுமை தேவை.
விவசாயம்
விவசாயம் நல்ல லாபகரமாக அமையும். விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கும், நிலம், இடம், வாங்க வாய்ப்புகள் கூடும். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டி வரும். நிலம் விற்பனைக்கு வரும். எதிர்பாராமல் தனவரவு அமையும்
அரசியல்
அரசியலில் எதிர்பார்த்த பெயர், புகழ் கிடைக்கும் தொண்டர்களின் அன்பும் மக்களின் ஆதரவும் நிறைவைத் தரும். அரசால் ஆதாயம் உண்டு. எதிரிகளால் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
கலைஞர்கள்
ஓவியம், இசை, நடனம், நாட்டியம், சினிமா துறைக் கலைஞர்கள், பெயர், புகழ் பெறுவர். பணம் சற்று பற்றாக்குறையாகவே இருந்து வரும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். கடன் வாங்க வேண்டியது வரும். வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும்.
மாணவர்கள்
படிப்பில் அதிக கவனம் தேவை. எதிர்பார்த்த பள்ளி கல்லூரி கிடைக்கவில்லை யென்றாலும் கிடைத்ததில் திருப்தியடைவது நலம். ஸ்காலர்ஷிப் கிடைக்கும். எதிர்பாராத வங்கிக் கடன் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது.
பெண்கள்
திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இனிதே திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்கள் தாராளமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வேலையின் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணம் ஒரு சிலருக்கு அமையும். உடலில் கால் அடிவயிற்றுப் பகுதியில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும்.
உடல் ஆரோக்யம்
உடலில் சளித்தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். தலை, அடிவயிறு போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் தேவை. உப்பு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்.
கன்னி ரஜத மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (2) 90%
|