ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
வெற்றி ஒன்றை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டு விரும்பியதை அடைய நினைக்கும் கன்னி லக்னக்காரர்களே உங்கள் லக்னத்திலே குரு அமர்ந்தும் 4ம் இடத்திலே சனி அமர்ந்தும் 6ம் இடத்திலே கேதுவும் 12ம் இடத்தில் ராகு அமர்வதும் சற்று நற்பலன் என்று தான் கூற வேண்டும். குரு லக்னத்தில் அமர்வது சிறப்பானது ஆகும். இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி காரியம் கைகூடி வரும் நேரமாகும். சற்று தெய்வ அனுகூலத்தை கூட்டும் நேரம் ஆகும். பெயர் புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.
பொருளாதார நிலை சீராக இருந்து வரும். கொடுத்த பணம் பொருள் சீராக வந்து சேரும். பணப்புழக்கம் தாராளமாக இருந்து வரும். பேச்சில் இனிமையும் சாமர்த்தியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். அதனால் நன்மைகள் உண்டாகும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறுசிறு பயணங்கள் அமையும். அதே சமயம் போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாக இருந்து வருதல் வேண்டும். தேவையில்லாமல் கடன் வாங்குவதோ கடன் கொடுப்பதோ கூடாது. வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் அமையும். அதனால் நன்மையேற்படும்.
எடுக்கும் காரியங்கள் சற்று காலதாமதமாகும். ஆனாலும் நன்மையாகவே முடியும். புதிய முயற்சிகள் எதிர்பார்க்கும். செய்திகள் சற்று தடையேற்பட்டாலும். இறுதியில் நன்மையாகவே முடியும். சகோதர சகோதரர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். வண்டி வாகனங்கள்இ இடம்இ வீடு வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்க வாய்ப்பும் தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். காதல் விஷயங்கள் சற்று சுமாராகவே இருந்து வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தாய்மார்களால் நன்மையேற்படும். விசா பாஸ்போர்ட் விரைவில் ஒரு சிலருக்கு வந்து சேரும். தந்தையாரால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலை பார்ப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. அடுத்த வேலை கிடைக்கும் வரை வேலையில் எச்சரிக்கை தேவை. வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை ஏற்பட்டாலும் வேலையில் கவனம் தேவை. ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையின் காரணமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து அமையும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பாராமல் கிட்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையில்லாமல் பேசுதல் கூடாது. எதிர்பார்த்த ப்ரோமோஷன் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
தொழிலில் தேவையற்ற முதலீடு செய்தல் கூடாது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் தேவையற்ற அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல் கூடாது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் சற்று கவனம் தேவை. போக்குவரத்து தகவல் தொடர்பு கமிஷன் ஏஜென்ஸி புரோக்கர்ஸ் ரியல் எஸ்டேட் கட்டுமானம் இவைகள் சற்று சுமாராகவே இருந்து வரும். ஆடைஇ ஆபரண அழகு சாதனங்கள் துறைகள் சற்று சுமாரகவே இருந்து வரும். உணவுஇ ஓட்டல் லாபகரமாகவும் இரும்பு எஃகு சிமெண்ட் இரசாயனம் உருக்கு நிலக்கரி பெட்ரோல் துறைகள் சற்று லாபம் குறைந்தும் நிதி, நீதி,வங்கி, இன்சூரன்ஸ்இ கல்வி மருத்துவம் இரசாயனம் சாதகமாக இருந்து வரும். நீர்இ மீன்பிடித் தொழில் லாபகரமாக அமையும். சாலையோர வியாபாரம் சற்று சுமாரகவே இருந்து வரும்.
விவசாயம்
விவசாயம் நல்ல லாபகரமாக அமையும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும். காய்கறிகள் பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் எதிர்பார்த்த நன்மைகள் அமையும். விவசாயக் கடன் கிடைப்பதில் சற்று இழுபறியாகவே இருந்து வரும். பணப்புழக்கம் தாராளாமாக அமையும்.
அரசியல்
அரசியல் நிலைமை சற்று சுமாரகவே இருந்து வரும். புகழ்இ அந்தஸ்து இவற்றில் சற்று சருக்கல் ஏற்படும். தொண்டர்களால் எதிர்பார்த்த நன்மை அமைவதில் தடையேற்படும். எதிர்கள் வெற்றியடைவர் உங்களது நடவடிக்கையால் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும்.
கலைஞர்கள்
கலைத்துறை ஆரம்பத்தில் சற்று தடையேற்பட்டாலும் குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் நல்ல லாபம் அடைய வழிவகுக்கும். புது ஒப்பந்தங்கள் ஏற்பட சந்தர்ப்பமும் அதனால் நன்மையும் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். கையெழுத்து ஒப்பந்தம் பத்திரங்கள் இவற்றில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எதிரிகள் விஷயத்தில் சற்று விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
மாணவர்கள்
அடிக்கடி வெளியே சுற்றும் பழக்கத்தைக் குறைத்தல் வேண்டும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கல்விக்கடன் கிடைப்பதில் சற்று சுணக்கம் ஏற்படும். விளையாட்டில் சற்று கவனம் குறைந்து காணப்படும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது.
பெண்கள்
பார்க்கும் வேலையில் சற்று திருப்தியற்ற சூழ்நிலை இருந்தாலும் வேலையில் சற்று கவனம் தேவை. போட்டித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப்பழகுதல் வேண்டும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்தமையும். வேலையில் முன்னேற்றமும் அதனால் லாபம் அடையவும் கடினமாக உழைக்க வேண்டியது வரும். காதல் விஷயங்கள் சற்று சுமாராகவே இருந்து வரும். அதே சமயம் இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் மற்றும் குழந்தை பாக்யம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். அடிக்கடி பயணங்கள் அமையும். அதனால் அலைச்சல்கள் கூடும். அதனால் பெரிய நன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு புதிதாக ஆடை ஆபரணம் மற்றும் வண்டி வாகனம் வீடு போன்ற சொத்துக்கள் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பும் பார்க்கும் கம்பெனியை விட்டு வேறு கம்பெனிக்கு மாற ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். உடன் பணிபுரிபவர்களால் நன்மை அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சுமாராகவே இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பத்தைத் தவிர்த்தல் நலம்.
உடல் ஆரோக்யம்
அடிவயிறு, முழங்கால்,பாதம் மற்றும் தலைபோன்ற பகுதிகளில் பாதிப்புவராமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.உடலில் அசதி சோர்வு வரமால் பார்த்தல் நலம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண் : 6, 8, 5 அதிர்ஷட நாள் : வெள்ளி, சனி, புதன் அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, கருப்பு, பச்சை அதிர்ஷட இரத்னம் : வைரம், நிலம், பச்சை
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை “முருகனை” வணங்கி வருதல் நலம். “வீரபத்ரர்” “வீரபாகு” போன்ற சுவாமிகளையும் “சனிபகவானையும்” வணங்கி வருதல் நன்மையாகும்.
|