ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158
எப்பொழுதும் வேகமும் விவேகமும் சுறுசுறுப்பும் உடைய உங்கள் துலா லக்னத்திற்கு 3ம் இடத்தில் சனியும் 5ம் இடத்தில் கேதுவும் 11ம் இடத்தில் ராகுவும் லகனத்திற்கு 12ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வது சிறப்பானது ஆகும். எப்பொழுதும் பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பேச்சில் இனிமை கூடும். குடும்பத்தில் இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் சற்று தடையேற்பட்டாலும் பின் காரியங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கும். மேலும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெறக் கடுமையாகப் போராடுவார்கள். இறுதியில் அதில் வெற்றியும் பெறுவர்.
உடன்பிறந்த சகோதர சகோதரர்களால் எதிர்பாராத நன்மையும் அவர்களுக்கு இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். தாயாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. தாயாரால் நன்மையேற்படும். புதிய உறுப்பினர்கள் குடுமபத்தில் வந்து சேர்வர். ஒரு சிலருக்கு இடமாற்றம் மனைமாற்றம் ஏற்படும்.
அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபாடு கொள்ளும் அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மைகள் எற்படும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துவாங்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு ரிப்பேர் மரமாத்து செலவுகள் ஏற்பட வாய்ப்பு அமையும்.
உடல் ஆரோக்யத்தில் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. திருமணம் போன்ற சுபகாரியங்கல் நடந்தேறும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மைகளும் உதவிகளும் கிட்டும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மைகள் அமையும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். வெளியூர் வெளிநாடு செல்ல இருந்த தடை நீங்கும். பாஸ்போர்ட் விசா இவைகள் வந்து சேரும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு அமையும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை ஆரம்பத்தில் இருந்தாலும் பின்னாளில் சரியாகிவிடும். முதலில் கிடைத்த வேலையில் சேர்ந்து கொன்டு அதன்பின் அடுத்த வேலைக்கு முயற்சி செய்யவும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. வேலையில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவர்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். சக ஊழியர்களால் தேவையற்ற மனவருத்தங்கள் எற்பட்டு விலகும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
இக்காலங்களில் கூட்டுத் தொழில் மற்றும் சுயதொழில் செய்ய சந்தர்ப்பங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்ய சந்தர்ப்பங்கள் வாய்க்கும். உற்பத்தி சார்ந்த தொழில்கள் சற்று சுமாராகவே இருந்து வரும். தேவையான அளவு மட்டுமே உற்பத்தி செய்தல் வேண்டும். கமிஷன்இ ஏஜென்ஸிஇ புரோக்கர்ஸ்இ கன்சல்டன்சிஇ கட்டுமானம் போக்குவரத்து தகவல் தொடர்பு சாதகமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக அமையும். பங்குச்சந்தை லாபகரமாக அமையும். இரும்பு எஃகு சிமெண்ட் கனிமவளங்கள் சாதகமாகவும் நிதிஇ நீதி வங்கித்துறைகள் சற்று சுமாராகவே இருந்து வரும். சிறுதொழில் சாலையோர வியாபாரங்கள் நல்ல லாபகரமாக இருக்கும். உணவு உடை ஓட்டல் சுற்றுலா ஆபரணம் சாதகமாக இருந்து வரும். மீன்பிடித் தொழில்இ கப்பல்இ நீர்இ இறைச்சித் துறைகள்இ மருத்துவம் பொறியியல் சாதகமாக அமையும்.
விவசாயம்
விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிட்டும். விவசாயக் கடன் மற்றும் மானியம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. புதிய தொழில் நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவீர்கள். அதனால் எதிர்பார்த்த லாபம் ஓரளவு கிட்டும்.
அரசியல்
அரசியல் எதிர்பார்த்த அளவு சாதகமாக இருந்து வரும். புதிய பதவிகள் பொறுப்புகள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வழக்குகள் இருப்பின் இழுபறியாகவே இருந்து வரும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் இருந்து வரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது ஆகும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் சற்று ஏற்றமாகவே இருந்து வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையும். அதனால் எதிர்பாராத நன்மைகளும் பணவரவும் அமையும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மைகள் அமையும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பரிசு மற்றும் வெகுமதி பெற சந்தர்ப்பங்கள் சேர்ந்து அமையும்.
மாணவர்கள்
விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் அதிகக் கவனத்துடன் பரிட்சை எழுதுதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்துதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகத்துடனும் இருத்தல் வேண்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று ஒரு சிலர் வேலைக்குச் செல்ல வாய்ப்பு அமையும்.
பெண்கள்
குடும்பத்தில் இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். அடிக்கடி பிரயாணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏறபடும். திருமணம் குழந்தைபாக்யம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குடும்பத்தில் புதுவரவுகள் வர வாய்ப்புகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அதே சமயம் வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை அமையும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் இருந்து வரும். உடல் ஆரோக்யத்தில் அதிக்க் கவனம் செலுத்துதல் வேண்டும். நண்பர்களால் நன்மையேற்படும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. சக ஊழியர்களால் நன்மையேற்படும். இடம் வீடு வாங்க வாய்ப்பு அமையும். எப்பொழுதும் மனதில் ஒரு நிம்மதியற்ற சூழ்நிலை இருந்து வரும்.
உடல் ஆரோக்யம்
கண், அடிவயிறு, புஜம் கண்கள் போன்ற உடல் உறுப்புகளில் அதிகக் கவனம் தேவை. உடலில் கொழுப்புச் சத்து இருப்பின் அதைக் குறைத்தல் வேண்டும். காய்ச்சல் தலைவலி போன்ற உடல் உபாதைகள் வரின் நல்ல மருத்துவரை அணுகுதல் நலம்.
அதிர்ஷ்ட எண் : 1, 2 அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு, திங்கள் அதிர்ஷ்ட நிறம் : வெண்மை அதிர்ஷ்ட இரதனம் : மரகதம்,முத்து
பரிகாரம்
“செவ்வாய்க்கிழமை” தோறும் “துர்க்கை” அல்லது “காளியை” வணங்கிவர நன்மையேற்படும். சித்தர்கள் ஜீவசமாதிகள் மசூதிகள் சென்று வணங்கி வருதல் சிறப்பான பலன்களை அளிப்பதாகும்.
|