LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.

மானாமதுரை அருகே 13 -ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் ஊருணி பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஊருணி பகுதியில் 13-ம் நூற்றாண்டு சமணப் பள்ளி நிலதானக் கல்வெட்டைக் கண்டெடுத்தனர்.

 

 

இதுகுறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கல்வெட்டில் 4 பக்கங்களிலும் எழுத்துக்கள் உள்ளன. அதில் மூன்று பக்கங்களில் முழுமையாகவும், ஒரு பக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு, அதன் கீழே எழுத்துக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டு இரண்டே முக்கால் அடி உயரம் கொண்டது. இதில் விக்கிரமராம வளநாடு என்ற புதிய சொல் இடம் பெற்றுள்ளது.

 

மேலும் அதில் இடம்பெற்ற நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி, பள்ளிச் சந்தம் சொற்கள் மூலம் இக்கல்வெட்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியனை குறிப்பதை அறியலாம். அவரது காலம் கிபி 1268 முதல் 1281 வரை. அதில் கருங்குடி நாட்டு பெரும்பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி தேவர் என உள்ளது. இதன்மூலம் இங்கு சமணப்பள்ளி இருந்ததை அறிய முடிகிறது.

 

அப்பள்ளிக்கு தானம் கொடுத்த நிலத்தில் நான்கு எல்லைகளிலும் எல்லைக் கற்கள் நாட்டி, வரிகளைப் பிரித்து பூஜைகள் நடத்தவும், அது சூரியன், சந்திரன் உள்ளவரைச் செல்லுபடியாகும் எனவும் அரசு அலுவலர்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளன. இப்பகுதி மக்கள் கல்வெட்டில் உள்ள திரிசூலத்தை முனியசாமி தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கூகுள் பே-வில் தவறாகப் பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி? கூகுள் பே-வில் தவறாகப் பணம் அனுப்பினால் திரும்பப் பெறுவது எப்படி?
EMAIL-க்கு போட்டியாக X-MAIL.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு EMAIL-க்கு போட்டியாக X-MAIL.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு
நவீனத் தொழில்நுட்பத்தில்  வரும் பான் 2.0 கார்டு நவீனத் தொழில்நுட்பத்தில் வரும் பான் 2.0 கார்டு
ஆசியாவின் மிகச்சிறந்த நாணயங்களில் இந்திய ரூபாய்க்கு இடம்1 ஆசியாவின் மிகச்சிறந்த நாணயங்களில் இந்திய ரூபாய்க்கு இடம்1
இனி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நியமன தாரர்களை நியமிக்க முடியும் இனி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நியமன தாரர்களை நியமிக்க முடியும்
க்யூ.ஆர். கோடு வசதியுடன் புதிய பான் அட்டை க்யூ.ஆர். கோடு வசதியுடன் புதிய பான் அட்டை
திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்? திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்?
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.