|
||||||||
பெங்களூரு பொறியாளர் உருவாக்கிய தோசை சுடும் எந்திர மனிதன் |
||||||||
![]()
பெங்களூருவைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் தனது ரெடிட் சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘‘நான் கடந்த சில மாதங்களாகத் தோசை சுடும் எந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறேன். காஸ் அடுப்பில் தோசைக் கல்லை வைத்துவிட்டால், இந்த எந்திர மனிதன் தானாகவே தோசை சுட்டுத் தரும். இந்த எந்திர மனிதனுக்குத் திண்டி (சிற்றுண்டி) எனப் பெயர் வைத்துள்ளேன்.
என் வீட்டில் பெண்கள் தோசை சுடக் கஷ்டப்பட்டதால், இந்த எந்திர மனிதனை உருவாக்கியுள்ளேன்'' எனக் குறிப்பிட்டு, எந்திர மனிதன் தோசை சுடும் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் விரைவாகி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏராளமான பெண்களும் குறிப்பாகத் திருமணம் ஆகாத ஆண்களும் ‘‘இந்த எந்திர மனிதன் எப்போது சந்தைக்கு வரும்'' என ஆர்வமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
||||||||
by hemavathi on 18 Aug 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|