|
||||||||
சர்வதேச விண்வெளி மையத்தில் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்குப் பாராட்டு விழா |
||||||||
![]() ''இன்றைய இந்தியா சர்வதேச விண்வெளி விண்வெளியிலிருந்து பார்க்கும்போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது,'' எனச் சர்வதேச விண்வெளி மையத்தில் வழியனுப்பு விழாவில் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா கூறினார். சர்வதேச விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா தலைமையிலான குழுவினர், நாளை( ஜூலை 14) மாலை 4:35 மணிக்குப் பூமிக்குத் திரும்புகின்றனர் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விண்வெளி மையத்தில் சக வீரர்கள் சுபான்ஷூ சுக்லா குழுவினருக்கு வழியனுப்பு விழா நடத்தினார்கள். அதில் சுபான்ஷூ சுக்லா பேசினார். "இந்தப் பயணம் நம்ப முடியாத வகையில் அமைந்தது. இதில் ஈடுபட்டோரின் கடுமையான உழைப்பு காரணமாக இந்தப் பயணம் அற்புதமாக அமைந்தது.
எனது விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்தாலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்ற இந்தியாவின் திட்டமும் நீண்ட தூரத்தில் உள்ளது. நாம் ஒரு தீர்மானம் எடுத்தால், நட்சத்திரத்தையும் எட்ட முடியும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன்.
41 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் ராகேஷ் சர்மா, விண்வெளிக்குச் சென்று, அங்கிருந்து இந்தியா எப்படி இருந்தது என்று எங்களிடம் கூறினார். இன்று இந்தியா எப்படி இருக்கிறது என்பதை மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.
இன்றைய இந்தியா விண்வெளியிலிருந்து பார்க்கும் போது, லட்சியம் உள்ளதாகவும், அச்சமற்றதாகவும், தன்னம்பிக்கையாகவும், பெருமை நிறைந்ததாகவும் தெரிகிறது. இன்றைய இந்தியா, முழு உலகத்தையும்விட சிறப்பாகத் தெரிகிறது. விரைவில் சந்திப்போம்" என்றார்.
|
||||||||
by hemavathi on 13 Jul 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|