ஜப்பானில் செயற்கை இரத்தத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவச் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள செயற்கை இரத்தம் அனைத்து இரத்த வகைகளுக்கும் பொருந்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது,அதன் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்பானின் செயற்கை ரத்தம் உலகளாவிய பயன்பாட்டிற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030 ஆம் ஆண்டு வாக்கில், அவசர மருத்துவச் சேவையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு, இந்தச் செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த ரத்தத்தை இரண்டு வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலாவதியான இரத்தத்திலிருந்து ஹீமோகுளோபினைப் பிரித்தெடுத்து இந்தச் செயற்கை ரத்தம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, இரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் இரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உண்டு. அதுமட்டுமின்றி, ரத்தம் பெறுபவரின் இரத்த வகையுடன் பொருந்துமா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஆனால், இந்தச் செயற்கை இரத்தத்திற்கு அந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை.
தற்போது, தன்னார்வலர்களிடம் இந்தச் செயற்கை ரத்தம் பரிசோதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 2030-க்குள் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், அவசர மருத்துவ உதவிகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
|