LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    ஆய்வுக்கட்டுரைகள் Print Friendly and PDF

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு ஒருங்கிணைப்பைச் செய்து வரும் முனைவர்.சித்ரா

வலைத்தமிழில் நடந்துவரும் "ஆய்வு நோக்கில் உலக நாடுகளின் தமிழ்த் தொடர்புகள்" தொடரின் நெறியாளர், ஆய்வாளர், தொடர்ந்து உலகெங்கும் சென்று தமிழ் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்கிவரும் முனைவர்.சித்ரா (ஹாங்காங்) 

 

ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் அடையாளங்களை பல ஆய்வாளர்கள் அவரவர் ஆய்வுப்பார்வையில் நூலாகவோ, கட்டுரையாகவோ, உரையாகவோ வழங்கி வரும் நிலையில் , அதன் அடுத்தகட்ட ஆய்வுக்குச் செல்ல ஏதுவாக ஒருங்கிணைந்த , அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தரவுகளின் அடிப்படையில் ஒரு பார்வை உருவாவது தமிழ் ஆய்வுகளை வேகப்படுத்த உதவும். 

 

அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர

 

ஒவ்வொரு நாடாக எடுத்துக்கொண்டு அங்கு நிகழ்ந்துள்ள தமிழ்த் தொடர்பு சார்ந்த ஆய்வுகளை இந்தியர்களும், அந்தந்த நாட்டு ஆய்வாளர்களும் நிகழ்த்தியுள்ள ஆய்வுகளை அறிந்து , அவர்கள் அனைவரின் கருத்துகளையும் தனித்தனியே ஆவணப்படுத்தி, இறுதியாக ஒரு ஒருங்கிணைந்த கூட்டத்தை ஏற்படுத்தி , ஒரு நூலாகக் கொண்டுவருவது என்றும், அதன்பிறகு அடுத்தகட்ட ஆய்வுகள் தொடரச் செய்யவேண்டிய ஒருங்கிணைப்புகள் குறித்து விவாதிப்பது, அரசுக்குக் கோரிக்கைவைத்து ஆய்வுகளுக்கான செயல்திட்டங்களை வகுப்பது குறித்தும் சிந்திக்கப்பட்டது. 

 

தமிழ்-கொரியத் தொடர்புகள் குறித்து இதுவரை ஏழு பேரை ஆவணப்படுத்தியுள்ளோம். இன்னும் மூன்று ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தப்படவேண்டிய நிலையில் அடுத்த நாடாக ஆஸ்திரேலியாவைக் எடுத்து அங்குள்ள தமிழ்த் தொடர்புகள் குறித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உள்ளார். 

 

ஒரிசா பாலு அவர்கள் பல நாடுகளில் தமிழ்த் தொடர்புகள் குறித்துத் தொடர்ந்து பேசிவந்தவர். பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தவர். அவரைக்கொண்டே இத்தொடரைத் தொடங்கினோம். 

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு ஒருங்கிணைப்பைச் செய்ய முனைவர்.சித்ரா எடுத்துக்கொள்ளும் ஆர்வமும், நேரமும், உழைப்பும் போற்றத்தக்கது.

 

காணொளிகளைக் காண

 

இதே பார்வையில் ஏற்கனவே ஒருங்கிணைந்த முயற்சிகள் பொதுவெளியில் பயன்படுத்தும் வகையில் ஆவணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தால் தெரிவிக்கவும். இதுகுறித்தான உங்கள் கருத்துகளையும் முனைவர். சித்ரா அவர்களுக்குத் தெரிவிக்கவும். 

 

இதுவரை ஆவணப்படுத்தியுள்ள காணொளிகளைக் காண:https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjQ97ReLX4d6KX2YdUMRND7J

by Kumar   on 21 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -8 சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.