|
||||||||
பருவப் பெயர்கள் |
||||||||
பருவப் பெயர்கள் தமிழ் மொழிக்குள்ள பல சிறப்புகளில் பருவப்பெயர்களும் ஒன்றாகும். தமிழ் மொழியிலுள்ள பருவப் பெயர்களானது உருவத்தோடு, பருவத்தையும் காட்டி நிற்கும் சிறப்புத்தன்மை வாய்ந்தன. ஆண்களின் பருவப்பெயர்கள்: • 7 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பாலன் • 10 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மீளி • 14 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மறவோன் • 14 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் - திறவோன் • 18 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - காளை • 30 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - விடலை • 30 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் - முதுமகன் பருவங்கள்: • குழந்தைப்பருவம் - பிள்ளை • பாலப்பருவம் - சிறுவன் • பள்ளிப்பருவம் - பையன் • காதற்பருவம் - காளை • குடும்பப்பருவம் - தலைவன் • தளர்ச்சிப்பருவம் - முதியோன் • மூப்புப்பருவம் - கிழவன் பெண்களின் பருவப்பெயர்கள்: • 5 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பேதை • 10 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பெதும்பை • 16 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மங்கை • 25 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - மடந்தை • 30 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - அரிவை • 35 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - தெரிவை • 55 வயதிற்குக்கீழ் உள்ளவர்கள் - பேரிளம்பெண் பூவின் பருவங்கள்: • அரும்பும் நிலை – அரும்பு • மொக்கு விடும் நிலை – மொட்டு • முகிழ்க்கும் நிலை – முகை • பூநிலை – மலர் • மலர்ந்த நிலை – அலர் • வாடும் நிலை – வீ • இறுதி நிலை – செம்மல் இலைகளின் பருவப்பெயர்கள்: • குழந்தைப்பருவம் - கொழுந்து • இளமைப்பருவம் - தளிர் • காதற்பருவம் - இலை • முதுமைப்பருவம் - பழுப்பு • இறுதிப்பருவம் - சருகு |
||||||||
by Lakshmi G on 19 Dec 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|