|
||||||||
பேரவை 2024 விழாவில் முதன் முறையாக வட அமெரிக்க எழுத்தாளர் மன்றத்தின் இணையமர்வு நடைபெற்றது |
||||||||
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையில் நடைபெற்ற, வட அமெரிக்க எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த "வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் இணையமர்வில்" இலக்கிய ஆளுமைகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று ஜூலை 6 ஆம் நாள் 2024, காலை 11 முதல் 1.30 மணி வரை , இணையமர்வு அறை எண் 216A, Henry B. González Convention Center, San Antonio இல் திட்டமிட்டபடி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கவிஞர் மருதயாழினி பிரதீபா தொடக்கவுரை நிகழ்த்தினார், அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி அறிமுக உரையையும், எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் நோக்கவுரையையும் காணொளி வாயிலாக வழங்கினர். விழாவில் தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் அழகியபெரியவன், எழுத்தாளர் வெண்ணிலா, இசையறிஞர் திருபுவனம் ஆத்மநாதன், முனைவர் இளங்கோவன் மற்றும் இசைக்குயில் திருமிகு ஜோதி கலை ஆகியோர் கலந்துகொண்டனர். திருமிகு ஜோதி கலை தமிழ்த் தாய் வாழ்த்து பாடி நிகழ்வினைத் தொடங்கி வைக்க, அவரைத்தொடர்ந்து திரு. ஆத்மநாதன் அவர்களுடைய தமிழிசைப் பாடலோடு நிகழ்விற்குள் சென்றோம். இதில் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்ட வட அமெரிக்க எழுத்தாளர்கள் திருமிகு மருதயாழினி பிரதீபா, திருமிகு கிரேஸ் பிரதிபா , திருமிகு ராஜி வாஞ்சி , திருமிகு வாஞ்சிநாதன் , திருமிகு சித்ரா மகேஷ் , திருமிகு கவிதா. அ. கோ, திருமிகு ஷீலா ரமணன் , திருமிகு ஜெயா மாறன் உள்ளிட்ட பலர் தங்கள் படைப்புலகப் பயணத்தைக் குறித்து பேசினர். பின்பு அதே நிகழ்வில் கீழ்காணும் மூன்று நூல்கள் சிறப்பு விருந்தினார்களால் வெளியிடப்பட்டது 1. திருமிகு கவிதா அ.கோ. அவர்களின் “கார்மேகத்தில் ஒர் ஒளித்திரள் ” கவிதை நூல் வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களை கவிஞர் திருமிகு அருள் ஜோதி அவர்கள் அறிமுகப்படுத்த, சிறப்பு விருந்தினர்களை எழுத்தாளர்கள் மருதயாழினி பிரதீபா, ராஜிவாஞ்சி, கிரேஸ் பிரதீபா, கவிதா அ. கோ, திரு வாஞ்சிநாதன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். நிகழ்ச்சியில் உறுதுணையாக திரு.வாஞ்சி அவர்கள் தொழில்நுட்பத்தை பார்த்துக்கொண்டார், விழாவில் கிரேஸ் பிரதீபா அவர்களுக்கு உறுதுணையாக வந்திருந்த அவரது மகன் கல்லூரி மாணவன் ஆலனும் அவரால் இயன்ற அனைத்து உதவுகளையும் ஆற்றியது நன்றிக்குரியது. நன்றியுரையை கிரேஸ் பிரதிபா கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
|
||||||||
by Swathi on 22 Jul 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|