சனீஸ்வர பகவானின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?
Logeshwari - 19 Oct 2013 12:35 AM
சனீஸ்வர பகவானின் படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
ganesh Said : 19 Oct 2013 02:13 AM
சனீஸ்வரரையும் ஈஸ்வர பட்டத்தோடு பகவான் என்று தான் குறிப்பிடுகிறோம். அவர் இறைவனின் பிரதிநிதியாக இருந்து நம் செய்யும் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை நமக்கு தருகிறார். அவரைக் கண்டு பயப்பட தேவையில்லை. விரும்பினால், அனுகிரக சனீஸ்வரராக சாந்த கோலத்தில் வைத்து வழிபடுவது நல்லது.